Home
News

கண்ணா 50 ரூபாய் தான்.. Airtel இல் ரூ.50 க்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் 5 திட்டங்கள்!

இந்த 2025 ஆம் ஆண்டில், ஏர்டெல் நிறுவனமானது ரூ.50 க்குள் என்கிற பட்ஜெட்டில் மொத்தம் 5 ப்ரீபெய்ட் திட்டங்களை தன்வசம் கொண்டுள்ளது. மேலும் இவைகள் அனைத்துமே டேட்டா வவுச்சர்களாக உள்ளன. அதாவது இந்த 5 திட்டங்களின் கீழும் உங்களுக்கு கூடுதல் டேட்டா நன்மை மட்டுமே கிடைக்கும்; சர்வீஸ் வேலிடிட்டி கிடைக்காது என்று அர்த்தம்.

இன்னும் புரியும்படி சொல்லவேண்டுமென்றால், இந்த 5 திட்டங்களுமே ஏற்கனவே ஆக்டிவ் ஆக உள்ள திட்டங்களுக்கு மேல் ரீசார்ஜ் செய்யப்பட வேண்டும். உங்களுடைய மெயின் ரீசார்ஜ்ஜின் டெய்லி டேட்டா லிமிட் தீர்ந்து விட்டால், உங்களுக்கு டேட்டா தேவைப்பட்டால் கீழ் வரும் 5 திட்டங்களில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

Airtel இல் ரூ.50 க்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் 5 திட்டங்கள்!

01. பார்தி ஏர்டெல் ரூ.11 திட்டம்: ஏர்டெல் வழங்கும் ரூ.11 திட்டமானது அன்லிமிடெட் டேட்டாவுடன் வருகிறது, இது 10ஜிபி வரை அன்லிமிடெட் டேட்டாவை வழங்கும், ஆனால் இந்த திட்டம் வெறும் ஒரு மணிநேரம் மட்டுமே வேலை செய்யும். அதாவது 1 மணிநேர வேலிடிட்டியை வழங்கும்.

02. பார்தி ஏர்டெல் ரூ 22 திட்டம்: ஏர்டெல் வழங்கும் ரூ 22 திட்டம் 1 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 ஆகும்.
03. பார்தி ஏர்டெல் ரூ.26 திட்டம்: ஏர்டெல் வழங்கும் ரூ.26 திட்டமானது 1.5ஜிபி டேட்டாவுடன் வருகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 ஆகும்

04. பார்தி ஏர்டெல் ரூ.33 திட்டம்: ஏர்டெல் வழங்கும் ரூ.33 திட்டம் 2ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 ஆகும்
05. பார்தி ஏர்டெல் ரூ 49 திட்டம்: ஏர்டெல் வழங்கும் இந்த ரூ 49 திட்டம் அன்லிமிடெட் டேட்டாவுடன் வருகிறது. இது 10ஜிபி வரை அன்லிமிடெட் டேட்டாவை வழங்கும். இந்த திட்டம் 1 நாள் என்கிற வேலிடிட்டியை வழங்கும்.

ஒருவேளை உங்களுக்கு எக்ஸ்ட்ரா டேட்டாவை வழங்கும் திட்டங்கள் தேவையில்லை; மாறாக குறைவான செலவில் உங்களுடைய சிம் காரட்டை ஆக்டிவ் ஆக வைத்துக்கொள்ள உதவும் திட்டங்கள் தான் வேண்டுமென்றால் ஏர்டெல் சேவையின் கீழ் புதிதாக அறிமுகமான 2 வாய்ஸ் அன்ட் எஸ்எம்எஸ் ஒன்லி திட்டங்களில் ஒன்றை ரீசார்ஜ் செய்யலாம்.

நினைவூட்டும் வண்ணம் இந்த திட்டங்களுமே அறிமுகமான சில நாட்களிலேயே, முறையே ரூ.30 மற்றும் ரூ.110 விலை குறைப்பை பெற்றன. முதலில் ரூ.499 க்கு அறிமுகமான ஏர்டெல்லின் வாய்ஸ் அன்ட் எஸ்எம்எஸ் ஒன்லி பிளான் ரூ.30 விலை குறைப்பை பெற்று, தற்போது ரூ.469 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இதேபோல ரூ.1959 க்கு அறிமுகமான ஏர்டெல்லின் வாய்ஸ் அன்ட் எஸ்எம்எஸ் ஒன்லி பிளான் ரூ.110 விலை குறைப்பை பெற்று, தற்போது ரூ.1849 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.469 வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 469 Voice and SMS Only Plan): இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 900 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும் (மாதாந்திர செலவு ரூ.156). கூடுதலாக ஏர்டெல் ரிவார்ட்ஸின்கீழ் 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸும் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.1849 வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1849 Voice and SMS Only Plan): இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும் (மாதாந்திர செலவு ரூ.154). கூடுதலாக ஏர்டெல் ரிவார்ட்ஸின்கீழ் 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸும் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Every Airtel Prepaid Users Need to Know About These 5 Budget Plans Available Under Price Rs 50
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X