Home
News

டைம் முடிஞ்சிருச்சு.. ஆதார் கார்டு வைத்து இருக்கும் எல்லோரும் புது App-க்கு மாறுங்க.. UIDAI அறிவிப்பு!

யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority) ஆனது, தற்போதுள்ள எம்ஆதார் (mAadhaar) ஆப் ஆனது விரைவில் நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. கூடவே சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஆதார் ஆப்பிற்கு (New Aadhaar App) மாறுமாறும் பயனர்களை கேட்டுக்கொண்டுள்ளது

ஆப்பிள் ஐபோனுக்கான ஆப் ஸ்டோர் (Apple App Store) மற்றும் ஆண்ட்ராய்டுக்கான கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) ஆகிய இரண்டிலும் கிடைக்கும் புதிய ஆதார் ஆப் ஆனது, குடிமக்கள் தங்கள் ஆதார் தகவல்களை பாதுகாப்பாகச் சேமிக்கவும், புதுப்பித்துக்கொள்ளவும், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் உதவுவதை நோக்கமாக கொண்டுள்ளது.

டைம் முடிஞ்சிருச்சு.. புது App-க்கு மாறுங்க.. UIDAI அறிவிப்பு!

இந்த புதிய ஆதார் ஆப் ஆனது - க்யூஆர் கோட் அடிப்படையிலான ஆதார் பகிர்வு (QR-based Aadhaar sharing), முக அங்கீகாரம் (Face authentication), பயோமெட்ரிக் லாக் கட்டுப்பாடுகள் (Biometric lock controls) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களை பகிர்தல் (Selective information sharing) போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

யுஐடிஏஐ ஆனது இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அதிகாரப்பூர்வ பதிவில், எம்ஆதார் ஆப் "விரைவில் நிறுத்தப்படவுள்ளது" என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் புதிய ஆதார் ஆப் ஆனது "புத்திசாலித்தனமான, வேகமான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் பயணத்தை" வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் எடுத்துரைத்துள்ளது. புதிய ஆதார் ஆப் ஆனது - பிராந்தியங்கள் முழுவதும் மேம்பட்ட அணுகலுக்காக 13 இந்திய மொழிகளை ஆதரிக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

யுஐடிஏஐ-இன் படி, புதிய ஆதார் ஆப்பில் உள்ள மிகப்பெரிய அம்சங்களில் ஒன்று, க்யூஆர் கோட் அடிப்படையிலான ஆதார் பகிர்வு மற்றும் ஆஃப்லைன் அடையாள சரிபார்ப்புக்கான ஆதரவாகும். இது, 'தேர்ந்தெடுத்த பகிர்வு' (Selective Share) எனப்படும் ஒரு அம்சத்தின் மூலம், பயனர்கள் தங்கள் ஆதார் எண்ணை வெளிப்படுத்தாமல் தங்கள் அடையாளத்தை சரிபார்க்க அனுமதிக்கிறது.

இதன் மூலம், அவர்கள் தங்கள் புகைப்படம், பெயர், வயது, பாலினம், மொபைல் எண், முகவரி அல்லது ஆதார் ஸ்டேட்டஸ் உட்பட, தாங்கள் பகிர விரும்பும் தகவல்களை துல்லியமாக தேர்ந்தெடுக்க முடியும். அடையாள சரிபார்ப்புக்காக அங்கீகரிக்கப்பட்ட முனையங்களில் ஸ்கேன் செய்யக்கூடிய ஒரு க்யூஆர் கோட்-ஐயும் இந்த ஆப் உருவாக்குகிறது.

ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் மற்றும் முகவரிகளை நேரடியாக புதுப்பிக்கவும் இந்த ஆப் பயனர்களை அனுமதிக்கிறது என்று யுஐடிஏஐ கூறுகிறது. ப்ரொபைல் செக்ஷன் (Profile section) மூலம் அவர்கள் தங்கள் அக்கவுண்ட்களில் ஐந்து குடும்ப உறுப்பினர்கள் வரை சேர்க்கலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. முன்னரே குறிப்பிட்டபடி, புதிய ஆதார் ஆப் வழியாக பயோமெட்ரிக் லாக் கட்டுப்பாடுகளும் அணுக கிடைக்கும்.

அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டை தடுக்க, ஒரு குடிமகனின் கைரேகை, முகம் மற்றும் கருவிழி அங்கீகாரத் தரவை லாக் செய்ய இந்த் ஆப்பை பயன்படுத்தலாம். தேவைப்பட்டால், ஆப் மூலம் இந்த ;லாக்கை பின்னர் நீக்கவும் செய்யலாம். இருப்பினும், இணைக்கப்பட்ட மொபைல் எண் அல்லது ஸ்மார்ட்போனுக்கான அணுகலை இழப்பது, பயனர்களை ஆதார் தொடர்பான சேவைகளிலிருந்து தற்காலிகமாக வெளியேற்றிவிடக்கூடும் என்று யுஐடிஏஐ குறிப்பிடுகிறது.

பழைய எம்ஆதார் ஆப்பில் சேமிக்கப்பட்ட தரவுகள், புதிய ஆதார் ஆப்பிற்கு தானாகவே மாற்றப்படாது என்பது குறித்து யுஐடிஏஐ தெளிவுபடுத்தவில்லை. எனவே, தற்போதுள்ள பயனர்கள், புதுப்பிக்கப்பட்ட ஆப்பை பதிவிறக்கம் செய்த பிறகு, தங்கள் சுயவிவரங்களை மீண்டும் கைமுறையாக அமைக்க வேண்டியிருக்கும்.

Best Mobiles in India

English summary
Every Aadhaar Card Users Need to Download New Aadhaar App Old mAadhaar App to Be Retired Soon UIDAI
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X