Home
News

Jio கூட கொடுக்க முடியாது.. ஆனா BSNL தருது.. ரூ. 300 விலையில் முழுசா 5 மாச நன்மை.. உடனே அள்ளிக்கோங்க..

பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமான அழைக்கப்படும் அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இப்போது இந்திய மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வெறும் ரூ. 397 விலையில் 1 மாதம் இல்லை, 2 மாதங்கள் இல்லை, மொத்தமாக 5 மாதத்திற்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்ட ஒரு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்துடன் தினசரி டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, எஸ்எம்எம் நன்மை, கூடுதலாக இலவச நன்மைகள் என்று எல்லா வகையான நன்மைகளை BSNL இந்த திட்டத்துடன் வாரி வழங்கி அசத்தியுள்ளது.

மலிவு விலையில் அதிக நன்மைகளை எதிர்பார்க்கும் மக்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு சிறந்த டெலிகாம் ஆபரேட்டராக திகழ்கிறது. இப்போது அதை நிரூபிக்கும் விதமாக பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களின் (BSNL Prepaid Plan) கீழ் தொடர்ந்து பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில், BSNL தற்போது வெறும் ரூ. 300 விலை புள்ளியில் 5 மாதங்களுக்கு செல்லுபடியாகும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

Jio கூட கொடுக்க முடியாது.. ஆனா BSNL தருது.. முழுசா 5 மாச நன்மை..

பிஎஸ்என்எல் ரூ 397 பிளான் (BSNL Rs 397 Plan):

இதுவரை இந்தியாவில் உள்ள எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் வெறும் 300 விலை வரம்பில் இப்படி ஒரு திட்டத்தை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) என்று அழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்களிடம் இந்த விலை வரம்பில் 5 முழுமையான மாதங்களுக்கு செல்லுபடியாகும் நெருங்கிய திட்டம் கூட இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம் ரூ. 397 விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் பிஎஸ்என்எல் ரூ 397 பிளான் (BSNL Rs 397 Plan) என்ற பெயருடன் வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் 5 முழுமையான மாதங்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்டுள்ளது. அதாவது 30 நாட்கள் என்ற அடிப்படையில், இது முழுமையாக 150 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது.

பொதுவாக டெலிகாம் நிறுவனங்கள் ஒரு மாத வேலிடிட்டி என்ற பெயரில் வெறும் 29 நாட்களை மட்டும் வேலிடிட்டியாக வழங்குவது வழக்கமானது. ஆனால், முழு மாத வேலிடிட்டி திட்டங்களின் கீழ் இப்போது வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்கள் என்ற அடிப்படையில் முழு மாதத்திற்கும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த திட்டத்துடன் கிடைக்கும் மற்ற நன்மைகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

Jio கூட கொடுக்க முடியாது.. ஆனா BSNL தருது.. முழுசா 5 மாச நன்மை:

புதிய பிஎஸ்என்எல் ரூ 397 திட்டம் (BSNL Rs 397 Plan) தினசரி 2GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் என்ற நன்மைகளையும் வழங்குகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த புதிய பிஎஸ்என்எல் திட்டங்களின் டேட்டா, வாய்ஸ் கால்ஸ் மற்றும் SMS நன்மைகள் முதல் 30 நாட்களுக்கு மட்டுமே தடையின்றி கிடைக்கும்.

இதற்கு பிறகு, உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற டேட்டா வவுச்சர் மற்றும் வாய்ஸ் பேக் அல்லது டாப் அப் ரீசார்ஜ் பேக்குகளை நீங்கள் ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டம் உங்களுக்கு 5 மாதங்களுக்கு வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த காலத்தில் நீங்கள் உங்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டை ஆக்டிவேட் நிலையில் வைப்பதோடு, இன்கம்மிங் அழைப்புகளை 5 மாதங்களுக்கு வழங்குகிறது.

இந்த திட்டத்துடன் BSNL நிறுவனம் பல இலவச நன்மைகளையும் வழங்கி அசத்துகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் இலவச நன்மைகளும் கூட 30 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் தான் வருகிறது. இந்த திட்டத்தின் தனி சிறப்பே, இது உங்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டை 5 மாதங்களுக்கு ஆக்டிவ் நிலையில் வைக்கிறது. தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ (Jio), ஏர்டெல், Vi நிறுவனங்கள் கூட கொடுக்க முடியாது, ஆனால் BSNL தருது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Even Jio can't give But BSNL gives full 5 months validity benefits just under Rs 399 Get it now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X