ஒன்னும் பிரச்சனையில்ல- கல்லூரிகள் திறந்தாலும் ஆன்லைன் மூலமாகவே தேர்வுகள் நடக்கும்- உயர்கல்வித்துறை அறிவிப்பு!

|

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு நிலையில் ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தற்போது வரை அரசு மேற்கொண்ட நடவடிக்கையினால் கொரோனா பாதிப்பு குறைந்திருப்பதாகவும் போதுமான மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலையில் இருக்கிறது எனவும் சுகாதாரத்துறையால் தெரிவிக்கப்பட்டது.

மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை

மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை

தொடர்ந்து மாநிலத்தின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சமுதாய கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை

நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை

ப்ளே ஸ்கூல், நர்சரி பள்ளிகளான எல்கேஜி, யூகேஜி செயல்பட அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொருட்காட்சிகள் நடத்த அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் அனைத்து விழாக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் உணவகங்கள, விடுதிகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை 50% வாடிக்கையாளர்கள் உடன் மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள்

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள்

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டுமே நடத்தவும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி மையங்களில் 50% பயனர்களுடன் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதுவரை அமலில் இருந்த இரவு நேர ஊடங்கும், முழுநேர ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும் விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு

பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு

அதேபோல் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் மூலமாகவே தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிப்ரவரி 1 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் காரணத்தால் செமஸ்டர் தேர்வுகள் எவ்வாறு நடத்தப்டும் என்ற கேள்விகள் மாணவர்களிடையே எழத்தொடங்கியது. இதற்கு உயர்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு முன்னதாகவே குறிப்பிட்டப்படி ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக தடுப்பூசி செலுத்தும்படி அறிவுரை

உடனடியாக தடுப்பூசி செலுத்தும்படி அறிவுரை

தொடர்ந்து இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு. முறையாக அடுத்தடுத்த டோஸ் தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைகளின் நுழைவு பகுதியில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் சானிட்டைசர் கட்டாயம் வைக்கப்படும்படியும் உடல் வெப்ப பரிசோதனை கருவி மூலம் வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைகளில் பணிபுரிபவர்களும் வாடிக்கையாளர்களு் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

முழுமையான ஒத்துழைப்பு தேவை

முழுமையான ஒத்துழைப்பு தேவை

கொரோனா தொற்று பரவலை தடுப்பது என்பது முழுவதும் மக்கள் செயல்பாட்டிலேயே இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாகும், அதேபோல் பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிப்பது என்பது மிக அவசியம். பொதுமக்கள் வெளியே சென்று வந்தால் கை, கால், முகங்களை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படாத நபர்கள் முதலில் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டு பிறகு முறையாக அடுத்தடுத்த டோஸ் தடுப்பூசிகள் செலுத்திக் கொள்வது கட்டாயமாகும். கொரோனாவை முழுமையாக ஒழிக்க அரசு அறிவித்த பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Even if the colleges are open, the exams will be held through online Only: TN Higher Education Announcement

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X