ஆடிப்போன அம்பானி.. Airtel SIM யூசர்களுக்கு.. வெறும் ரூ.40-க்கு அன்லிமிடெட் டேட்டா.. நிக்காம விழும் ரீசார்ஜ்!
ஹெவி டேட்டா யூசர்களையும் (Heavy Data Users), ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பார்வையாளர்களையும் (IPL Cricket Viewrs) குறிவைத்து.. அதாவது டெய்லி 2ஜிபி, 3ஜிபி என எவ்வளவு டேட்டா கொடுத்தாலும் போதவில்லை என்கிற பயனர்களை குறிவைத்து பார்தி ஏர்டெல் அறிமுகம் செய்த 3 அன்லிமிடெட் டேட்டா பிளான்கள் ஆனது ஐபிஎல் 2024 போட்டிகள் முடிந்த பின்னரும் கூட ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. ரூ.40 முதல் ரூ.80 க்குள் என்கிற பட்ஜெட்டில் அணுக கிடைக்கும் இந்த 3 ரீசார்ஜ் திட்டங்களின் சரியான விலை நிர்ணயம் என்ன? நன்மைகள் என்ன? இதோ விவரங்கள்:
1. ரூ.39 மதிப்புள்ள அன்லிமிடெட் டேட்டா பிளான்: ஏர்டெல்லின் 3 அன்லிமிடெட் டேட்டா திட்டங்களில் மிகவும் மலிவான விலை கொண்ட திட்டம் இதுவாகும். இந்த திட்டத்தின் 1 வேலிடிட்டி நாள் மட்டுமே ஆகும். ஏர்டெல் நிறுவனம் இந்த திட்டத்தின் கீழ் "அன்லிமிடெட் டேட்டா" (Unlimited Data) கிடைக்கும் என்று குறிப்பிட்டு இருந்தாலும் கூட இதன்கீழ் 20ஜிபி டேட்டாவை மட்டுமே கிடைக்கும்.

2. ரூ.49 மதிப்புள்ள அன்லிமிடெட் டேட்டா பிளான்: ஏர்டெல்லின் இந்த டேட்டா திட்டமானது ரூ.39-ன் கீழ் கிடைக்கும் அதே டேட்டா நன்மை மற்றும் வேலிடிட்டியை தான் வழங்குகிறது. அதாவது இது 20ஜிபி டேட்டாவை 1 நாள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது. இருப்பினும் இந்த திட்டத்தின் கீழ், கூடுதல் நன்மையாக, 30 நாட்களுக்கு விங்க் ம்யூசிக் பிரீமியம் சந்தா (Free Wynk Music Premium Subscription) முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.
3. ரூ.79 மதிப்புள்ள அன்லிமிடெட் டேட்டா பிளான்: ஏர்டெல் நிறுவனம் அதன் ரூ.99 டேட்டா திட்டத்தை (Rs.99 Data Plan) புதுப்பித்ததன் விளைவாக வவந்ததே ரூ.79 டேட்டா பிளான் ஆகும். அதாவது முன்னதாக ரூ.99 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டமானது தற்போது ரூ.79 க்கு கிடைக்கிறது. நன்மைகளை பொறுத்தவரை, இதுவும் ரூ.39 மற்றும் ரூ.49-ஐ போலவே 20ஜிபி டேட்டாவை வழங்கும். ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 2 நாட்கள் ஆகும்.
மேற்கண்ட 3 திட்டங்களுமே ஐபிஎல் ரசிகர்களின் கிரிக்கெட் போட்டிகளை பார்க்கும் போது, அவர்களுடைய டேட்டா தீர்ந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்தன. தற்போது 2024 ஐபிஎல் போட்டிகள் முடிந்தபின்னரும் கூட 20ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் இந்த 3 திட்டங்களுமே இன்னமும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன.
மேலே உள்ள 3 திட்டங்களில் ஏதேனும் ஒன்றை உங்கள் ஏர்டெல் ப்ரீபெய்ட் நம்பரில் ரீசார்ஜ் செய்ய விரும்பினால், அதை நீங்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் (Airtel Thanks App) மூலம் செய்யலாம். ரூ.39 அல்லது ரூ.49 அல்லது ரூ.79 டேட்டா திட்டங்களுடன் உங்கள் ஏர்டெல் எண்ணை ரீசார்ஜ் செய்ய கீழே உள்ள படிகளை பின்பற்றவும்.
- உங்கள் ஸ்மார்ட்போனில் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பை திறக்கவும்.
- பின்னர் கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்து ஷார்ட்கட்ஸ் செக்ஷனை (Shortcuts Section) தேடுங்கள். அங்கே 'டாப் அப் டேட்டா' (Top Up Data) என்பதை தேர்வு செய்யவும்.
- இப்போது டேட்டா டேப்பில் (Data Tab) பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து புதிய திட்டங்களையும் நீங்கள் பார்ப்பீர்கள்
- அதில் நீங்கள் ரீசார்ஜ் செய்ய விரும்பும் டேட்டா பேக்கின் அருகே இருக்கும் 'பை' விருப்பத்தை (Buy Option) கிளிக் செய்யவும்
- இப்போது ரீசார்ஜ் கட்டண தொகையை செலுத்துவதற்கான கட்டண முறையை தேர்ந்தெடுக்கவும் - அதாவது யுபிஐ (UPI) அல்லது பிற விருப்பங்களில் ஒன்றை தேர்வு செய்யவும்.
- கடைசியாக பே நௌவ் (Pay Now) என்பதை கிளிக் செய்து, உங்கள் யுபிஐ பின்-ஐ (UPI PIN) உள்ளிட்டு சப்மிட் செய்யவும். அவ்வளவு தான்!


Click it and Unblock the Notifications








