ஐரோப்பிய யூனியனின் அடுத்த அதிரடி - இம்முறை மொபைல் சார்ஜர்கள்

உலக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், ஐரோப்பிய யூனியன் விரைவில் சில மாற்றங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

|

ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பல்வித மொபைல் சார்ஜிங் போர்ட்களை தங்களது சாதனங்களில் வழங்கி வருகின்றன.

உலக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், ஐரோப்பிய யூனியன் விரைவில் சில மாற்றங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் சர்வதேச மொபைல் போன் சந்தையில் உற்பத்தியாகும் அனைத்து மொபைல்களுக்கும் பொதுவான சார்ஜிங் போர்ட்டை அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டியிருக்கும்.

51,000 டன் மின்சாதன கழிவு

51,000 டன் மின்சாதன கழிவு

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் மொபைல் போன் நிறுவனங்களை பொதுப்படையான மொபைல் சார்ஜிங் போர்ட்களை உற்பத்தி செய்ய பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த ஐரோப்பிய யூனியன், இம்முறை நிரந்த தீர்வை எட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் உலகில் 51,000 டன் மின்சாதன கழிவு தேக்கமடைவதே ஐரோப்பிய யூனியனின் இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக உள்ளது. மக்கள் புதிய சாதனங்களை பயன்படுத்த துவங்கும் போது பழை மொபைல் போன் சார்ஜர்களை வீசிவிடுகின்றனர். மேலும் இது நுகர்வோருக்கு பாதகமாக இருப்பதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

ஆப்பிள், சாம்சங், நோக்கியா

ஆப்பிள், சாம்சங், நோக்கியா

அந்த வகையில் ஆப்பிள், சாம்சங், நோக்கியா மற்றும் ஹூவாய் என மொத்தம் 12 பிரபல ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களிடம் பொதுப்படையான மொபைல் சார்ஜர்களை உற்பத்தி செய்ய 2009-ம் ஆண்டிலேயே ஐரோப்பிய யூனியன் உத்தரவிட்டிருந்தது. எனினும் இதுவரை எந்த நிறுவனமும் இதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை.

 ஐரோப்பிய யூனியன்

ஐரோப்பிய யூனியன்

சொல்பேச்சுக்கு சரிப்படாத சூழல்களில் செயல்பட வேண்டிய விதத்தை கையாண்டால் தான் நல்லது நடக்கும் இதையே இம்முறை ஐரோப்பிய யூனியன் சூசகமாக தெரிவித்துள்ளது. முறையான அணுகுமுறைக்கு திருப்திப்படுத்தாத செயல்பாடுகளால், யூனியன் விரைவில் வெவ்வேறு ஆப்ஷன்களை செயல்படுத்துவதற்கானசெயல்பாட்டு கட்டணங்கள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகளை அறிந்து கொள்ள மதிப்பீட்டு ஆய்வு ஒன்றை நடத்தவிருக்கிறது.

யு.எஸ்.பி. டைப்-சி

யு.எஸ்.பி. டைப்-சி

தற்சமயம் மொபைல் போன்களில் மிகவும் பிரபலமானதாகவும், எதிர்காலத்திற்கும் சிறப்பானதாக தெரியும் மொபைல் சார்ஜிங் கேபிள் மற்றும் ஸ்லாட் ஆக யு.எஸ்.பி. டைப்-சி இருக்கிறது. இதனால் ஐரோப்பிய யூனியன் யு.எஸ்.பி. டைப்-சி ரக சார்ஜர்களை பொதுப்படையாக அறிவித்து, ஐரோப்பிய யூனியனில் விற்பனையாகும் மொபைல்களில் யு.எஸ்.பி. டைப்-சி அவசியம் இருக்க வேண்டும் என உத்தரவிடலாம்.

ஆப்பிள்

ஆப்பிள்

இதுபோன்ற சூழலில் ஆப்பிள் நிறுவனமும் தனது சாதனங்களில் யு.எஸ்.பி. டைப்-சி வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்.

Best Mobiles in India

English summary
EU May Get Tough on Apple, Other Companies With Non-Standard Mobile Chargers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X