ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த ஐரோப்பா சட்டம்.. 2024 இல் USB-C போர்ட் மட்டும் தான் அலோவ்ட்..

|

ஆப்பிள் ஐபோன் சாதனங்களில் பல ஆண்டுகளாக லைட்னிங் போர்ட் (Lightning port) மட்டுமே சார்ஜ் செய்யப் பயன்படுத்துகின்றது. ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் சாதனைகளில் மட்டும் யுஎஸ்பி டைப்-சி (USB-C) போர்ட்டை நிறுவனம் பயன்படுத்துகிறது. இருப்பினும், நிறுவனம் அதன் ஆப்பிள் ஐபோன் சாதனங்களில் இந்த USB-C போர்ட்டை செயல்படுத்தவில்லை. இந்த செயலுக்கான சரியான காரணமும் ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து வெளியிடப்படவில்லை என்பதே உண்மை. ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்து ஐரோப்பா ஒரு சட்டத்தை வெளியிட்டுள்ளது.

ஐரோப்பாவில் நிறைவேற்றப்பட்ட ஒரு புதிய சட்டம்

ஐரோப்பாவில் நிறைவேற்றப்பட்ட ஒரு புதிய சட்டம்

சமீபத்தில் வெளியான தகவலின் படி, ஐரோப்பாவில் நிறைவேற்றப்பட்ட ஒரு புதிய சட்டம் இப்போது ஆப்பிள் ஐபோன்கள் உட்பட அதன் அனைத்து சாதனங்களில் பயன்படுத்தப்படும் லைட்னிங் போர்ட் அம்சத்தை நிறுவனம் மாற்றி அமைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆப்பிள் பயன்படுத்தும் லைட்னிங் போர்ட்களை நிறுவனம் இனி USB-C போர்ட்டுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பதை இந்த புதிய சட்டம் கட்டாயப்படுத்துகிறது. இப்படி திடீர் சட்டம் பிறப்பிக்க என்ன காரணம்? எதற்காக இந்த புதிய சட்டம் என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்.

எல்லா சாதனங்களுக்கும் ஒரே 'சார்ஜிங் போர்ட்' வேண்டும்

எல்லா சாதனங்களுக்கும் ஒரே 'சார்ஜிங் போர்ட்' வேண்டும்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சட்டமியற்றுபவர்கள் செவ்வாயன்று மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கேமராக்களுக்கான ஒற்றை மொபைல் சார்ஜிங் போர்ட்டை ஒப்புக்கொண்டனர். ஐரோப்பிய ஆணையம் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் ஒரு மொபைல் சார்ஜிங் போர்ட்டை முன்மொழிந்திருந்தாலும், நிறுவனங்கள் பொதுவான தீர்வைப் பயன்படுத்த ஒரு உடன்பாட்டிற்கு வரத் தவறிவிட்டன என்று கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக இப்போது புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் வானத்தில் தோன்றும் அதிசயம்: 'ஸ்ட்ராபெரி மூன்'.. நிலவு இப்படி சிவப்பாக தெரிய காரணம் என்ன?அடுத்த வாரம் வானத்தில் தோன்றும் அதிசயம்: 'ஸ்ட்ராபெரி மூன்'.. நிலவு இப்படி சிவப்பாக தெரிய காரணம் என்ன?

ரூ. 2,075 கோடி நுகர்வோருக்குக் கிடைக்குமா?

ரூ. 2,075 கோடி நுகர்வோருக்குக் கிடைக்குமா?

"இன்று காலை நாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலம் சுமார் 250 மில்லியன் யூரோக்கள், அதாவது இந்திய மதிப்பின் படி சுமார் ரூ. 2,075 கோடி நுகர்வோருக்குக் கிடைக்கும்" என்று ஐரோப்பிய ஒன்றிய தொழில்துறைத் தலைவர் தியரி பிரெட்டன் தனது சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். "இது வயர்லெஸ் சார்ஜிங் போன்ற புதிய தொழில்நுட்பங்களை வெளிவர அனுமதிக்கும், மேலும் நுகர்வோர் சிரமத்திற்கு ஆதாரமாக விடாமல் முதிர்ச்சியடையச் செய்யும்," என்று அவர் கூறியுள்ளார்.

லேப்டாப்கள் முதல் நேவிகேஷன் சாதனம் வரை USB-C

லேப்டாப்கள் முதல் நேவிகேஷன் சாதனம் வரை USB-C

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கேமராக்களுக்கான பொதுவான சார்ஜிங் போர்ட்டாக யூ.எஸ்.பி டைப்-சி மாறும் என்று ஐரோப்பிய பாராளுமன்றம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. "லேப்டாப்கள், இ-ரீடர்கள், இயர்பட்கள், விசைப்பலகைகள், கம்ப்யூட்டர் மவுஸ்கள் மற்றும் போர்ட்டபிள் நேவிகேஷன் சாதனங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்" என்று சட்டமியற்றுபவர் அலெக்ஸ் அஜியஸ் சாலிபா கூறியுள்ளார்.

இலவசமாக YouTube Premium சந்தா வேண்டுமா? அப்போ 'இதை' உடனே செய்யுங்கள்.. ஆனா..ஒரு சின்ன பிடிப்பிருக்கு..இலவசமாக YouTube Premium சந்தா வேண்டுமா? அப்போ 'இதை' உடனே செய்யுங்கள்.. ஆனா..ஒரு சின்ன பிடிப்பிருக்கு..

சட்டம் நடைமுறைக்கு 40 மாதங்களுக்குள் இதுவும் மாற வேண்டும்

சட்டம் நடைமுறைக்கு 40 மாதங்களுக்குள் இதுவும் மாற வேண்டும்

சட்டம் நடைமுறைக்கு வந்த 40 மாதங்களுக்குள் லேப்டாப்களும் இந்த சட்டத்திற்கு இணங்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்தச் சட்டம் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் மட்டுமின்றி இ-ரீடர்கள், இயர்பட்கள் மற்றும் பிற தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கியுள்ளது. இதன் பொருள் ஆப்பிள் இப்போது யூ.எஸ்.பி-சியை அதன் ஐபோன்களில் செயல்படுத்த வேண்டும், இனி லைட்னிங் போர்ட்களுக்கு ஐரோப்பாவில் வேலை இல்லை என்பதே அர்த்தம்.

Apple ரசிகர்கள் மகிழ்ச்சி

Apple ரசிகர்கள் மகிழ்ச்சி

ஐரோப்பிய நாடுகளுக்குச் சட்டம் இயற்றப்பட்டாலும், ஐரோப்பாவைத் தவிர்த்து உலகம் முழுவதும் லைட்டிங் போர்ட் மூலம் இயங்கும் ஐபோன்களை விற்பனை செய்வதற்கான வழியை Apple கொண்டு வரும் வரையில், USB-C இயங்கும் ஐபோன்கள் உலக அளவில் கிடைக்கும் என்பதையும் இது குறிக்கிறது. இந்த செய்தி ஒரு வகையில் ஆப்பிள் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இந்த புதிய சட்டம் பற்றி உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உங்களுக்கு டைப்-சி போர்ட் பெஸ்டாக இருக்குமா? அல்லது லைட்டினிக் போர்ட் வசதியாக இருக்குமா?

உலகின் அதிவேக இன்டர்நெட் சேவையின் வேகம் எவ்வளவு தெரியுமா? அசுர வேகம்.! நம்ம ஊர்ல வேகம் பத்தல பத்தல..உலகின் அதிவேக இன்டர்நெட் சேவையின் வேகம் எவ்வளவு தெரியுமா? அசுர வேகம்.! நம்ம ஊர்ல வேகம் பத்தல பத்தல..

Best Mobiles in India

English summary
EU Lawmakers Have Passed a New Law With Apple To Use USB-C On iPhones By 2024 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X