ஆக்ஸிஜன், ஏழை மக்கள் தடுப்பூசிக்கு ரூ.4.5 கோடி அறிவித்த Ethereum: அதிகரிக்கும் நிவாரணத் தொகை அறிவிப்பு!

|

Ethereum இணை நிறுவனர் விட்டாலிக் புட்டரின் இந்தியாவுக்கான கோவிட்-19 நிவாரணத் தொகையாக சுமார் 606110 டாலர் இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.4.5 கோடி அறிவித்துள்ளார்.

எத்தேரியம் அறிவிப்பு

2014 ஆம் ஆண்டில் ஓப்பன் சோர்ஸ் பிளாக்செயின் மென்பொருளான எத்தேரியம் பிளாக் செயின் ஒப்பந்தங்கள் உருவாக்க பயன்பாடு இருக்கிறது. அதேபோல் எத்தேரியம்-க்கு ஈதர் என்ற நாணயம் இருக்கிறது. க்ரிப்டோ கரன்சியில் இடம்பெறும் இந்த நாணயமானது பிட்காயினுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த நிவாரணத் தொகையை பலரும் அறிவித்து வருகின்றனர். மேலும் ஆக்ஸிஜன் மற்றும் பிற அவசரகால பொருட்களுக்கு நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டு வருகிறது. எத்தேரியம் இந்த அறிவிப்பின்மூலம் உலகின் கிரிப்டோ கரன்சி சமூகத்தை ஊக்குவிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்ஸிஜன், உணவு, ஏழை மக்கள் தடுப்பூசிகளுக்கு இதை செலவிட விட்டாலிக் புட்டரின் வழங்கியதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்று பரவல்

கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. நாட்டின் மருத்துவ கட்டமைப்பு சரிந்து வருகிறது. மருத்துவ பற்றாக்குறைகள் ஏற்பட்டு வருகிறது. சியோமி, ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்கள் சுமைகளை குறைக்கும் வகையில் உதவ முன்வந்திருக்கிறது.

சியோமி நிறுவனம் ரூ.3 கோடி நிவாரண தொகை

சியோமி நிறுவனம் ரூ.3 கோடி நிவாரண தொகை

கோவிட்-19 அவசரநிலைகளை எதிர்கொண்டு டுவிட்டரில் உதவி கோரும் பட்சத்தில் அந்த முறையீடுகளை நிவர்த்தி செய்ய ஒன்பிளஸ் ஒரு சமூக ஊடக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அதேபோல் சியோமி நிறுவனம் ரூ.3 கோடி நிவாரண தொகை அறிவித்திருக்கிறது.

ரூ.3 கோடி நிதியுதவி

மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதை தொடர்ந்து 1000-த்துக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வாங்குவதற்கு ரூ.3 கோடி நிதியுதவி வழங்குவதாக சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. தேவைப்படும் இடங்களில் சிலிண்டர்களை மருத்துவமனைகளுக்கு அல்லது மாநில அரசுகளுக்கு நன்கொடையாக வழங்குவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

boAt அறிவிப்பு

இந்தியச் சந்தையில் ஆடியோ சாதனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வரும் மிக முக்கியமான நிறுவனமான boAt நிறுவனம், மருத்துவமனைகளுக்கு உயர்தர ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை வாங்குவதற்காக ரூ. 50 லட்சம் நன்கொடை அளித்துள்ளது. இது கோவிட்-19 மூலம் பாதிக்கப்பட்டவர்களின் உயிர் காக்கும் திறனை அதிகரிக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா நிலைமை மிகவும் மோசமடைந்து வருவது தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைதெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களும் கொரோனா நிதியாக 135 கோடி ரூபாயை இந்தியாவிற்கும், யூனிசெப்புக்கும் வழங்குவதாக சுந்தர் பிச்சை தகவல் தெரிவித்துள்ளார். அதிலும் தொற்று அபாயம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த நிதியுதவி பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது

File Images

Best Mobiles in India

English summary
Ethereum Co-Founder Announced Rs.4.5 Crore For Covid-19 Relief Fund in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X