ரேன்சம்வேர் என்பது வெறும் ஆரம்பம் தானாம், ஏடர்னல்ராக்ஸ் தான் முடிவாம்.!

By Prakash
|

கடந்த சில நாட்களாகவே ரேன்சம்வேர் சைபர் தாக்குதல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் இத்தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிவருகின்றன. மேலும் பல மக்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. ரேன்சம்வேர் ஆராய்ச்சியாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது.

குறிப்பாக பள்ளிகள், கடைகள், மருத்துவமனைகள், இ-மெயில், நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள கம்ப்யூட்டர்களை குறி வைத்து இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது ரேன்சம்வேர் போலவே ஏடர்னல்ராக்ஸ் சைபர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.

 விண்டோஸ்:

விண்டோஸ்:

வானாக்ரை தாக்குதலால் 150 க்கு மேற்பட்ட நாடுகளில் 3 லட்சத்துக்கு மேற்பட்ட கணினிகள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது வானக்ரை போன்ற மற்றொரு ரேன்சம்வேர் மேற்கத்திய நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளில் விண்டோஸ் கணினிகளை தாக்குதவதாக சீனாவின் செய்தி பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது ஏடர்னல்ராக்ஸ் பொருத்தமாட்டில் விண்டோஸ் கணினிக்கு மிகப்பெரிய பாதிப்பு உள்ளது. எனப் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏடர்னல்ராக்ஸ்:

ஏடர்னல்ராக்ஸ்:

ஏடர்னல்ராக்ஸ் பொதுவாக ஏடர்னல்சாம்பியன், ஏடர்னல்ப்ளூ, ஏடர்னல்ரோம், மற்றும் என்எஸ்ஏ போன்ற கருவிகளைக் கொண்டு கணினியை தாக்குகின்றன என பார்ச்சூன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயந்திரங்கள்:

இயந்திரங்கள்:

இந்த தாக்குதல் பொருத்தமாட்டில் கணினியில் மறைத்துவைக்கப்பட்ட அனைத்துக் கோப்புகளுக்கும் பாதிப்பு உண்டாகும், மேலும் பல இயந்திரங்களுக்கு தீங்கிழைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏடர்னல் ப்ளூ:

ஏடர்னல் ப்ளூ:

ஏடர்னல் ப்ளூ கருவி பொருத்தமாட்டில் கணினியில் அதிக அளவு பாதிப்பு இருக்காது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ரேன்சம்வேர் தாக்குதலும் வானாக்ரை போன்றே பழைய விண்டோஸ் இயங்குதளங்களை ஹேக் செய்து பிட்காயின் வழியாக பணத்தை செலுத்த வேண்டுகோள் விடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆய்வுகள்:

ஆய்வுகள்:

ஏடர்னல்ராக்ஸ் தற்போது வலுவாக உள்ளது. மேலும் பல கணினியின் கோப்புகளை திருட அதிகவாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை ஆய்வு செய்ய முயற்சிகள் தற்போது அனைத்து நாடுகளிலும் தொடங்கிவிட்டன.

அமெரிக்கா:

அமெரிக்கா:

அமெரிக்காவின் தேசிய பாது காப்பு ஏஜென்சியால் உருவாக்கப் பட்ட சில ஹேக்கிங் மென்பொருட் கள் கடந்த ஏப்ரல் மாதம் ஆன் லைனில் வெளியாகி களவாடப் பட்டதே இத்தனை பிரச்சினைக்கும் காரணம் என்று கூறப்படுகிறது.

நிறுவனங்கள்:

நிறுவனங்கள்:

ஏடர்னல்ராக்ஸ் தற்போது அதிகமாக பரவவில்லை ஆனால் என்எஸ்ஏ பொருத்தமாட்டில் பல்வேறு கோப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த இணைய தாக்குதலைநிறுவனங்கள் அதிகமாக கண்டிருக்கிறது.

 மைக்ரோசாப்ட்:

மைக்ரோசாப்ட்:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்ப்பட்டுள்ளன. இந்தியாவில் 48,000 க்கும் அதிகமான ரேன்சம்வேர் தாக்குதல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் 60 சதவீத முயற்சிகள் நிறுவனங்கள் இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. 40 சதவீதத்தினர் தனிப்பட்ட வாடிக்கையாளர்களாக கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

Best Mobiles in India

Read more about:
English summary
EternalRocks could be the end: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X