இதோ.. ஸ்மார்ட்போன்களுக்கான 7 அடுக்கு பாதுகாப்பு...!

|

ஸ்மார்ட்போன் வாங்கிட்டா மட்டும் நாம ஸ்மார்ட் ஆகிட முடியாது. கொஞ்சம் யோசிச்சு பாருங்க உங்க ஸ்மார்ட்போன்ல எவ்ளோ விஷயங்கள் அடங்கி இருக்குனு, உங்க பெர்சனல் புகைப்படங்கள் தொடங்கி பேங்க் அக்கவுண்ட் விவரங்கள், பின் நம்பர்கள் என சொல்லிக் கொண்டே போகலாம்.

மூக்கு புடைப்பா இருந்தா இப்பிடிதான் யோசிக்க தோணும்..!

சிலர் தங்கள் ஒட்டுமொத்த விவரங்களையும் தங்கள் ஸ்மார்ட்போனில் அடக்கி வைத்துள்ளனர், இருந்தும்கூட 'நம்ம போன்தானே' என்று அஜாக்கிரதையுடன்தான் கையாளுகின்றனர்.

சின்ன சின்ன பாதுகாப்பு முறைகளை செய்தால் போதும் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு பலத்த பாதுகாப்பு போட்டு விடலாம், அவைகள் என்ன என்ன என்பதை பின் வரும் ஸ்லைடர்களில் காணலாம் வாங்க..

பாஸ்வோர்ட் :

பாஸ்வோர்ட் :

யாரு எப்போ உங்க போனை கையில் எடுப்பார்கள், என்ன செய்வார்கள் என்று சொல்லவே முடியாது. அன்லாக் செய்ய பாஸ்வோர்ட் செட் செய்வது புத்திசாலித்தனம்.

நம்பிக்கை :

நம்பிக்கை :

கிடைத்ததையெல்லாம் செய்யாமல், நம்பிக்கையான ஆப்ஸ்களை மட்டுமே இன்ஸ்டால் செய்யவும்..!

ஃப்ரீ செக்யூரிட்டி ஆப்ஸ் :

ஃப்ரீ செக்யூரிட்டி ஆப்ஸ் :

ஸ்மார்ட்போனை கெடுக்கும் நோக்கம் கொண்ட ஆப்ஸ்களை கண்டறியும் செக்யூரிட்டி ஆப்ஸ்களை பயன்படுத்த வேண்டும், எடுத்துக்காட்டுக்கு வெப்ரூட்.

நிறுத்துங்கள் :

நிறுத்துங்கள் :

விளம்பரங்கள் மற்றும் உங்களை ட்ராக் செய்யும் இதர சேவைகளை வழங்குபவர்களை நிறுத்துங்கள். ஏனெனில், அவர்கள் உங்களை ட்ராக் செய்வதின் மூலம் நீங்கள் ஹாக் செய்யப்படுவது எளிமையாகிவிடும்.

தயார் நிலை :

தயார் நிலை :

ரிமோட் லோக்கேஷன் மற்றும் வைப்பிங் ஆப்ஷன்களை பயன்பாட்டில் வைக்கவும். அவசர நேரத்தில் இது உதவும்.

விலகியே இருங்கள் :

விலகியே இருங்கள் :

பொதுவான வை-பை தொடர்பில் இருந்து முடிந்த அளவு ஒதுங்கியே இருங்கள். பேங்கிங் மற்றும் பண பரிமாற்றம் போன்றவைகளை நிகழ்த்துவதை தவிர்த்திடுங்கள்..!

மிகவும் முக்கியம் :

மிகவும் முக்கியம் :

உங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை விற்கும் போதே அல்லது நண்பர்களிடம் கொடுத்துவிடும் போதே, அதனுள் உள்ள விவரங்கள் அத்தனையையும் முழுமையாக டெலீட் செய்துவிட மறக்காதீர்கள் !

Best Mobiles in India

Read more about:
English summary
Check out here some steps to secure your smartphone. Its very simple and interesting, you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X