4G சேவையின் "அழிவு" ஆரம்பம்? அடுத்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட கதம் கதம்!

|

இந்தியாவில் முக்கிய பங்களிப்பாக இருக்கும் 4ஜி சேவை 68% இல் இருந்து 2027 இல் 55% ஆக குறையும். 2027 ஆம் ஆண்டில் 4ஜி சந்தாதாரர்கள் எண்ணிக்கை 700 மில்லியன் வரை குறையும் என கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த 4ஜி சந்தாதாரர்கள் அனைவரும் 5ஜிக்கு இடம்பெயர்வார்கள் என எரிக்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

500 மில்லியன்கள் 5ஜி சந்தாதாரர்கள்

500 மில்லியன்கள் 5ஜி சந்தாதாரர்கள்

ஸ்வீடன் நாட்டின் தொலைத்தொடர்பு உபகரண தயாரிப்பு நிறுவனமான எரிக்சன், மொபிலிட்டி அறிக்கையை வெளியிட்டது. அதில் வணிக ரீதியாக 5ஜி இன்னும் அறிமுகமாகவில்லை என்றாலும் இந்தியாவில் 5ஜி-க்கான அடித்தளம் மிக சிறப்பாக இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டுக்கள் இந்தியாவில் 500 மில்லியன்கள் 5ஜி சந்தாதாரர்கள் இருப்பார்கள் என எதிர்பார்ப்பதாக எரிக்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மொத்த மொபைல் டேட்டா டிராஃபிக்

மொத்த மொபைல் டேட்டா டிராஃபிக்

"இந்தியாவில் மொத்த மொபைல் டேட்டா டிராஃபிக் என்பது 2021 மற்றும் 2027 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் மட்டும் 4 மடங்களவு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது ஸ்மார்ட்போன் பயன்படுத்தவோரின் எண்ணிக்கையில் அதிக வளர்ச்சி இருக்கும் என்பதையும் குறிக்கிறது" என எரிக்சன் இந்திய தலைவர் தியாவ் செங் எங் குறிப்பிட்டார். இந்தியாவில் ஒரு ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் சராசரி டேட்டா டிராஃபிக் ஆனது 2021-ல் மாதத்திற்கு 20 ஜிபி டேட்டாவில் இருந்து 2027-ல் மாதத்திற்கு சுமார் 50ஜிபி டேட்டாவாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

5ஜி மூலமாக 56% டேட்டா டிராஃபிக்

5ஜி மூலமாக 56% டேட்டா டிராஃபிக்

5ஜி தொழில்நுட்பமானது 2030-க்குள் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு $17 பில்லியன் வரை வருமானம் ஈட்ட உதவும். அதேபோல் 2027 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த டேட்டா டிராஃபிக்கில் 56% 5ஜி மூலமாகவே பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவின் முதல் 5ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை ஜூலை 26முதல் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 72GHz அலைக்கற்றைகள் ஏலத்தில் விடப்பட இருக்கிறது. இதில் பெரும் பங்கை ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், விஐ பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5ஜி சந்தாதாரர்களின் எண்ணிக்கை

5ஜி சந்தாதாரர்களின் எண்ணிக்கை

வட அமெரிக்கா மற்றும் சீனாவில் 5ஜி சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் எனவும் இதன்மூலம் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் உலகளாவிய 5ஜி சந்தாதாரர்கள் 1 பில்லியனுக்கு மேல் இருக்கும் என கணிக்கப்படுவதாக எரிக்சன் தெரிவித்துள்ளது.

4ஜி சந்தாதாரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

4ஜி சந்தாதாரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

முதல் காலாண்டில் 5ஜி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 70 மில்லியன் அதிகரித்து சுமார் 620 மில்லியனாக இருக்கிறது. அதேசமயத்தில் 4ஜி சந்தாதாரர்கள் எண்ணிக்கையும் 70 மில்லியன் அதிகரித்து சுமார் 4.9 பில்லியனாக உள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய 5ஜி பயனர்கள்

உலகளாவிய 5ஜி பயனர்கள்

அதேபோல் இந்த ஆண்டு 4ஜி சந்தாக்கள் எண்ணிக்கை 5 பில்லியனாக உயரும் எனவும் இதே 2027 ஆம் ஆண்டின் இறுதியில் 3.5 பில்லியனாக குறையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 4ஜியில் இருந்த அனைத்து சந்தாதாரர்களும் 5ஜி-க்கு இடம்பெயர்வார்கள் என அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. இந்த காலக்கட்டதில் உலகளாவிய 5ஜி சந்தாதாரர்கள் எண்ணிக்கை 4.4 பில்லியனாக உயரும் எனவும் குறிப்படப்பட்டுள்ளது.

காற்றின் வேகத்தில் பயணிக்கலாமா?

காற்றின் வேகத்தில் பயணிக்கலாமா?

இந்தியாவில் 4 ஜி இணைய வேகம் அனைத்து பகுதியிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2ஜி, 3ஜி, 4ஜி போன்ற இணைய சேவைகள் ஒவ்வொரு காலக்கட்டங்களாக அறிமுகம் செய்யப்பட்டது. காற்றின் வேகத்தில் நாம் பயணிக்க ஆசைப்பட்டால் காற்றோடு பயணிக்கும் பறவைகள் எங்கு போகும் என்ற கேள்விகள் நம் மனதில் எழாமல் இல்லை. 2ஜி சேவையில் எம்எம்எஸ், 3 ஜி சேவையில் வீடியோ கான்பரன்ஸ் என தொடங்கி தற்போதைய 4 ஜி சேவையில் பெரும்பாலான சேவைகளை வீடியோ மூலமாக மேற்கொண்டு வருகிறோம்.

அடுத்த தலைமுறைக்கான 5ஜி சேவை

அடுத்த தலைமுறைக்கான 5ஜி சேவை

அடுத்த தலைமுறைக்கான 5ஜி சேவையில் இந்தியாவின் தொழில்நுட்பங்கள் பல்வேறு கட்டங்களுக்கு முன்னேறப் போகிறது. தற்போது பயன்படுத்தப்படும் 4 ஜி சேவையை விட பலமடங்கு இணைய வேகம் அதிகரிக்கும். 5 ஜி சேவையானது 28 ஜிகா ஹெட்ஜில் இருந்து 39 ஜிகாஹெட்ஜ் அலைவரிசையில் இயங்க இருக்கிறது. அதாவது இணைய வேகம் 56 mbpsஇல் இருந்து 490 mbps வேகத்திற்கும், பதிவிறக்கம்(Download) 8mbps இல் இருந்து 100 mbps வேகத்திலும் இருக்கும்.

கமாண்டிங் ஆப்பரேஷன் மூலம் இயக்கலாம்

கமாண்டிங் ஆப்பரேஷன் மூலம் இயக்கலாம்

ஆரம்பக்காலக்கட்டத்தில் வீட்டில் உள்ள தொலைக்காட்சிக்கும் ரிமோட்டுக்கும் மட்டுமே சென்சார் பயன்படுத்தப்பட்டது. தற்போது வீட்டில் உள்ள டியூப் லைட், பேன் என பல்வேறு பொருட்களுக்கும் சென்சார் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ளது.5ஜி அறிமுகத்தின் மூலம் வீடுகளில் உள்ள டிவிகள், பிரிட்ஜ்கள், ஏசிகள், வாசிங்மெஷின்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் கமாண்டிங் ஆப்பரேஷன் (தொலைவில் இருந்து கட்டுப்படுத்தும் கருவி) மூலம் இயக்க உள்ளோம். 5 ஜி சேவை மூலம் தானியங்கி வாகனங்கள் சர்வசாதாரனமாக இயக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Ericsson reports: 700 million subscribers might migrate to 5G by 2027

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X