Home
News

அசத்திட்டீங்க Lenovo.. ரூ.9000 விலையில் இப்படியொரு Tablet-ஆ.! தூள்பறக்கும் விற்பனையில்.. என்ன மாடல்?

லெனோவா (Lenovo) சுற்றுசூழலில் உருவான எரேஸர் (Eraser) என்ற புதிய பிராண்ட், இப்போது அதன் 2வது டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதை எரேஸர் A10 பேட் (Eraser A10 Pad) என்ற பெயருடன் மிகவும் மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது.

தெரியாதவர்களுக்கு, இந்த மாத தொடக்கத்தில் லெனோவா (Lenovo) அமைப்பின் கீழ் எரேஸர் என்ற பிராண்ட் அறிமுகமானது. இந்த அறிமுகத்தை நிறுவனம் அதன் புதிய எரேஸர் K30 பேட் (Erazer K30 Pad) என்ற 12.6" இன்ச் டிஸ்பிளே டேப்லெட் சாதனத்தின் அறிமுகத்துடன் உறுதிப்படுத்தியது. இது பெரிய அளவு டிஸ்பிளேவுடன் பட்ஜெட் விலை டேப்லெட் சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அசத்திட்டீங்க Lenovo.. ரூ.9000 விலையில் இப்படியொரு Tablet-ஆ.!

இப்போது, ​​எரேஸர் பிராண்ட் அதன் அடுத்த டேப்லெட் சாதனத்தை சிறிய டிஸ்பிளேவுடன் இன்னும் மலிவான பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து நம்மை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இப்போது பிராண்ட், அதன் புதிய Erazer A10 Pad சாதனத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இது பெரிய மாடலைப் போலவே லெனோவாவின் JD ஸ்டோர் வழியாக விற்கப்படுகிறது.

எரேஸர் A10 பேட் (Eraser A10 Pad):

இந்த புதிய டேப்லெட் சாதனத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இப்போது பார்க்கலாம். புதிய எரேஸர் A10 பேட் (Erazer A10 Pad) சாதனம் 8mm தடிமன் கொண்ட பிளாஸ்டிக் யூனிபாடி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதுவொரு மிகவும் மலிவான விலை கொண்ட பட்ஜெட் டேப்லெட் என்பதனால் நிறுவனம் இதில் பிளாஸ்டிக் பாடியை பயன்படுத்தியுள்ளது.

இதற்கு முந்தைய டேப்லெட் சாதனமான Erazer K30 Pad இல் நிறுவனம் 12.6" இன்ச் கொண்ட மெட்டல் பாடியை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய எரேஸர் A10 பேட் (Erazer A10 Pad) டேப்லெட் 10.1 இன்ச் IPS LCD பேனல் 1280 x 800 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் நிலையான 60Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்தை வழங்குகிறது.

அசத்திட்டீங்க Lenovo.. ரூ.9000 விலையில் இப்படியொரு Tablet-ஆ.!

எரேஸர் A10 பேட் விலை (Eraser A10 Pad Price):

இந்த டேப்லெட் சாதனம் ஆல்வின்னார் A523 சிப்செட் (Allwinner A523 SoC) மூலம் இயக்கப்படுகிறது. இந்த புதிய எரேஸர் A10 பேட் (Erazer A10 Pad) 4GB ரேம் மற்றும் 64GB | 128GB ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது android 13 (Android 13) உடன் அறிமுகம் செய்யப்படுகிறது. அவுட்ஆப் தி பாக்ஸ் இல் ஆண்ட்ராய்டு 14 ஐ பெற வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த எரேஸர் A10 பேட் (Erazer A10 Pad) டேப்லெட் சாதனம் 8MP பின்புற கேமரா மற்றும் 5MP முன்பக்க கேமராவுடன் வருகிறது. இது வயர்லெஸ் இணைப்பு விருப்பங்களில் டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் புளூடூத் 5.0 போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது. இது டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் தரமான ஆடியோ அம்சத்தை வழங்குகிறது. இது 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் உடன் வருகிறது.

இதில் சிம் கார்டு ஸ்லாட் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், மைக்ரோ எஸ்டி கார்டுகளுக்கு 128GB ஸ்டோரேஜ் ஆதரவை வழங்கியுள்ளது. இறுதியாக, இந்த சாதனம் 6,000mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது USB Type-C மூலம் சார்ஜ் செய்யப்படுகிறது. இதன் விலை $110 டாலர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது Lenovo JD கடையில் விற்பனைக்கு உள்ளது.

இது இந்திய மதிப்பில் வெறும் ரூ.9,100 என்ற விலையை நெருங்குகிறது. இந்த எரேஸர் A10 பேட் (Erazer A10 Pad) தயாரிப்பு பெரும்பாலும் சீனாவிற்கு பிரத்தியேகமாக இப்போதைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை விரைவில் உலக சந்தை மற்றும் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Eraser A10 Pad Tablet Launched With 4GB RAM 64GB and 128GB Storage Powered By Allwinner A523 SoC Check Price and Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X