எல்லாம் முன்னேற்றம்தான்- நடனமாடும் ரோபோட் நாய்கள்- வியக்க வைக்கும் வீடியோ!
போஸ்டன் டைனமிக்ஸ் அதன் ரோபோ டாக் ஸ்பாட் என்ற இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளது. ஒரு வீடியோ ஏழு ரோபோட் நாய்கள் குழுவாக ஒரே மாதிரி நடனமாடுகிறது. அதேபோல் மற்ற வீடியோவில் ஸ்பாட் கூட்டம் மற்றும் தென்கொரிய கே-பாப் இசைக்குழுவுடன் நடனமாடுகின்றன. போஸ்டன் டைனமிக்ஸ் வெளியிட்டுள்ள ரோபோ நாய் வீடியோக்கள் நம்ப முடியாத வகையில் உள்ளது.

போஸ்டன் டைனமிக்ஸ்
தென்கொரிய மோட்டார் கம்பெனியான ஹூண்டாய் கடந்தவாரம் போஸ்டன் டைனமிக்ஸ்-ன் பெரும்பான்மை பங்குகளை கைப்பற்றியது. இதை கொண்டாடும் விதமாக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதல் வீடியோவில் ஏழு ஸ்பாட்ஸ்களும் 2020 இசையான 'IONIQ: I'm On It' என்ற இசைக்கு நடனமாடுகின்றன.

முன்பில்லாத வகையில் தொழில்நுட்ப சவால்
வீடியோ படப்பிடிப்பு ஆனது முன்பில்லாத வகையில் தொழில்நுட்ப சவாலாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லாம் முன்கூட்டியே தயாராக இருந்தது எனவும் துல்லியமாக ஸ்கிரிப்ட் செய்யப்பட்டது எனவும் கூறப்பட்டது. மற்றொரு பாஸ்டன் டைனமிக்ஸ் ரோபோ, அட்லஸ் என அழைக்கப்படுகிறது. இதுஒரு வகையான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. காரணம் அட்லஸ் ஒரு பயங்கரமான ஆறு அடி உயரமான பைபெடல் ஹ்யூமனாய்ட் ரோபோ.
போஸ்டன் டைனமிக்ஸ் ரோபோக்கள்
போஸ்டன் டைனமிக்ஸ் ரோபோக்கள் வீடியோக்கள் பலமுறை சுட்டிக் காட்டப்படும் வகையில் இருந்துள்ளது. இது இணையத்தில் வைரலாவதும் உண்டு. கே-பாப் மற்றும் பிடிஎஸ் இணைந்து சுயமாகவே இந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். அடித்தளத்தில் இருந்து பொருள் தரும் வகையில் இந்த இணைவு இருக்கிறது. அதேபோல் இதில் இரண்டு வீடியோக்கள் பலரையும் கவரும் வகையில் வேடிக்கையாக இருக்கிறது.
வீடியோவில் ஏழு ரோபோட் நாய்கள்
கடந்தவாரம் ஹூண்டாய் நிறுவனம் போஸ்டன் டைனமிக்ஸ்-ன் பெரும்பான்மை பங்குகளை கைப்பற்றியது. இதையடுத்து ஹூண்டாய் பிராண்ட் தூதர்கள் பிடிஎஸ்-ல் கொண்டுவரப்பட்டனர். இதை கொண்டாடும் விதமாக ரோபோட்கள் உடன் நடனமாடும் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். ரோபோட் நாய்களுடன் 20 நிமிடம் நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது. அதேபோல் மற்றொரு வீடியோவில் ஏழு ரோபோட் நாய்கள் கூட்டமாக ஒரே மாதிரியாக நடனமாடுகிறது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள்
பிடிஎஸ் தோன்றும் இந்த வீடியோ பதிவிட்ட ஒரே நாளில் யூடியூப்பில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. இருப்பினும் இதைவிட முன்னதாக குழு பதிவிட்ட "பட்டர்" என்ற வீடியோ 24 மணிநேரத்துக்குள் 113 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

நாஷ் (NOSH) என்ற சமையல் ரோபோ
அதேபோல் சமீபத்தில் பெங்களூரைத் தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் யூஃபோடிக் லேப்ஸ் உருவாக்கிய நாஷ் (NOSH) என்ற சமையல் ரோபோ, தனிப்பட்ட நபரின் சுவைக்கு ஏற்ப அவர்கள் விருப்பப்படும் சாப்பாட்டைச் சமைத்துத் தருகிறது. இந்த நாஷ் ரோபோட் கடாய் பன்னீர், மாதர் பன்னீர், சிக்கன் குருமா, மீன் குழம்பு, கேரட் ஹல்வா என்று சமையலில் கில்லாடியாக இருக்கிறது. எவ்வளவு ஏன் உருளைக்கிழங்கு பொரியலைக் கூட செமையாக சமைத்துத் தருகிறதாம்.
200க்கும் மேற்பட்ட உணவு வகைகள்
நாஷ் ரோபோட் இந்தியச் சமையல் சாப்பாட்டு வகையில் இருந்து 200க்கும் மேற்பட்ட உணவு வகைகளைத் தானாகச் சமைத்துத் தரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்கின்றனர் இதனை உருவாக்கிய நிறுவனத்தின் உரிமையாளர்கள். குறிப்பாகச் சொந்த ஊரை விட்டு, வீட்டை விட்டு வெளியூர்களில் சென்று நல்ல சாப்பாடு சாப்பிட முடியாமல் தவிக்கும் மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

என்ன உணவை சமைக்க வேண்டும் என்ற தேர்வு
ரோபோவைப் பயன்படுத்த, பயனர்கள் பெட்டி வடிவ மசாலா பெட்டியில் தேவையான மசாலா பொருட்களை வைக்க வேண்டும். பின்னர் அதற்குக் கீழ் இருக்கும் பெட்டியில் தண்ணீர், எண்ணெய் மற்றும் நறுக்கிய காய்கறி போன்றவை சேமித்து வைக்கப்பட்ட வேண்டும். மேலும், நாஷ் ரோபோவை நாம் என்ன உணவைச் சமைக்க வேண்டும் என்ற விருப்பத்தை டிஸ்பிளேயில் உணவுப் பட்டியலில் இருந்து தேர்வு செய்து கிளிக் செய்தால் மட்டும் போதும். அந்த உணவிற்குத் தேவையான எல்லாவற்றையும் நாஷே செய்து முடித்துவிடும்.
Source: engadget.com


Click it and Unblock the Notifications