Home
News

EPFO அப்டேட்.. PF பணத்தை முழுமையாக எடுக்க சிக்கல் இருக்காது.. எல்லாமே மாறுது.. வருகிறது புதிய விதிகள்..

இபிஎப்ஓ (EPFO) என்று அழைக்கப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organization) வேலைக்குச் செல்லும் அனைவருக்கும் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. அதாவது மாதச் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை ஊழியர்களின் பிஎப் கணக்கில் வரவு வைக்கப்படும். குறிப்பாக இந்த தொகைக்கு கூட்டு வட்டி முறையில் மத்திய அரசு வட்டியைச் செலுத்துகிறது.

இந்த நிலையில் பிஎப் (PF) பணத்தை சந்தாதாரர்கள் எளிதாக அணுகும் வகையில் விதிகளைத் தளர்த்தி வருகிறது EPFO. அதாவது முன்பு கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை சரிபார்ப்பது கூட கடினமாக இருந்தது. ஆனால் தற்போது அனைத்துமே டிஜிட்டல் முறையில் மாறிவிட்டதால், பிஎப் சேவைகளை எளிதில் அணுக முடிகிறது.

 EPFO அப்டேட்.. PF பணத்தை முழுமையாக எடுக்க சிக்கல் இருக்காது..

குறிப்பாக பிஎப் கணக்கில் எதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் கூட ஆன்லைன் மூலம் மிகி எளிதாகச் செய்யும்படி வசதிகள் வந்துவிட்டன. இதுதவிர வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில் எடுப்பது போன்று பிஎப் பணத்தையும் ஏடிஎம்-இல் இருந்து எடுப்பதற்கான வசதிகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

அதேபோல் சந்தாதாரர்கள் தங்களது பிஎப் பணத்தைப் பயன்படுத்த அதிக சுதந்திரத்தை வழங்க பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(Employees Provident Fund Organization) முடிவு செய்துள்ளது. குறிப்பாக இதற்காக சில விதிகளில் மாற்றங்களைக் கொண்டு வர மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி குறைந்த மற்றும் நடுத்தரமான சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு உடனடி பணத் தேவைகள் அதிகமாக இருக்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு பிஎப் விதிகளைத் தளர்த்தினால், அவர்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதுவும் பிஎப் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை ஆனது பென்சன் பிரிவில் சேர்ந்து விடும். பிஎப் பயனர்கள் 58 வயதை எட்டிய பிறகோ அல்லது 2 மாதங்கள் வேலையில்லாமல் இருந்தாலோ மட்டும் தான் முழுப் பணத்தையும் எடுக்கும் வசதி உள்ளன. ஆனால் தற்போது ஓய்வுக்கு முன்னரே பென்சன் பணத்தை எடுப்பதற்காக விதிகளைத் தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 EPFO அப்டேட்.. PF பணத்தை முழுமையாக எடுக்க சிக்கல் இருக்காது..

இதேபோன்று கல்வி, திருமணம், வீடு வாங்குவதல் உள்ளிட்ட தேவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே பிஎப் பணத்தை எடுக்க முடியும். இந்த விதிகளில் முழுச் சுதந்திரத்தை அளிக்க EPFO நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. பின்பு மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த ஓராண்டுக்குள் பிஎப் விதிகளில் மாற்றம் செய்யப்படும். இது வாடிக்கையாளர்களின் பணம், அவர்கள் இந்த பணத்தை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் இருப்பது சரியாக இருக்காது. ஆகவே இனி பயனர்கள் தங்களின் பிஎப் பணத்தை தேவைப்படும் போது சுதந்திரமாகச் செலவழிக்க முடியும்.

அதுவும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள ஒருவர் வீட்டு வசதிக்காக 90 சதவீதம் பிஎப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். பின்பு 7 ஆண்டுகள் பணி அனுபவம் இருந்தால், திருமண செலவுகளுக்கு 50 சதவீதம் மற்றும் கல்விக்கு 50 சதவீதம் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த கல்வி செலவை பொறுத்தவரையில் மெட்ரிகுலேஷன் கல்விக்குப் பிந்தைய கல்விக்கு மட்டுமே பணம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இபிஎப்ஓ கொண்டுவரும் புதிய விதிகள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.

Best Mobiles in India

English summary
EPFO withdrawal rules are set to change to provide more flexibility to subscribers: Read Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X