Home
News

PF அக்கவுண்ட் வைத்து இருப்பவர்களுக்கு புது நடைமுறை.. Google Pay, PhonePe ஆப்களில் பணம்.. எப்படி கிடைக்கும்?

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான (Employees' Provident Fund Organisation) இபிஎப்ஓ (EPFO) ஆனது மெம்பர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த சேவையை வழங்கவுள்ளது. இனிமேல் பிஎஃப் உறுப்பினர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி (PF) பணத்தை யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் எனப்படும் யுபிஐ (UPI) வழியாக நேரடியாகவும், உடனடியாகவும் தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த புதிய வசதிக்கான சோதனை முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்துவிட்டன. இருப்பினும், இது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அதிகாரப்பூர்வமாக எப்போது வரும் என்ற துல்லியமான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மே மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகலாம். இருப்பினும், இந்த சேவை எப்படி செயல்படும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

PF அக்கவுண்ட் வைத்து இருப்பவர்களுக்கு புது நடைமுறை.. என்ன?

யுபிஐ (UPI) மூலம் பிஎஃப் பணம் எடுப்பது எப்படி செயல்படும்?
தற்போது திட்டமிடப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறை மிகவும் எளிமையானதாகவும், பேப்பர் லெஸ் சேவையாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பணம் எடுப்பதற்கான காத்திருப்பு காலம் பெருமளவில் குறைக்கப்பட உள்ளது. இந்த செயல்முறை பின்வரும் எளிய படிகளின் மூலம் நடைபெறும்.

1. இருப்பு தொகையைச் சரிபார்த்தல்: பிஎஃப் உறுப்பினர்கள் முதலில் தாங்கள் கணக்கிலிருந்து எடுக்கக்கூடிய தகுதியான இபிஎஃப் (EPF) இருப்பு தொகை எவ்வளவு என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
2. வங்கி கணக்கு இணைப்பு: இதற்கென தனியாக எந்த வங்கி விவரங்களையும் தர வேண்டியதில்லை. இபிஎஃப்ஓ பதிவுகளில் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள (Seeded) உறுப்பினரின் வங்கி கணக்கோடு இந்த தொகை நேரடியாகத் தொடர்புபடுத்தப்படும்.
3. யுபிஐ பின் (UPI PIN) மூலம் சரிபார்ப்பு: பயனர் தனது யுபிஐ பின் (UPI PIN) எண்ணை உள்ளிட்டு இந்த பரிவர்த்தனையை அங்கீகரிக்க வேண்டும். ஆகவே, வழக்கமான யுபிஐ பரிவர்த்தனைகளை போலவே இது மிகவும் பாதுகாப்பான பணப் பரிமாற்றத்தை உறுதி செய்கிறது.
4. உடனடி வரவு: அனைத்து சரிபார்ப்புகளும் முடிந்ததும், கோரப்பட்ட பிஎஃப் தொகையானது மெம்பர்களின் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் உடனடியாக அல்லது மிகக் குறுகிய காலத்திற்குள் வரவு வைக்கப்படும்.

கவனிக்க வேண்டியவை: தொழிலாளர் அமைச்சகத்தின் தகவல்படி, பிஎஃப் கணக்கில் உள்ள ஒட்டுமொத்த தொகையையும் இப்படி எடுக்க முடியாது. அவசர தேவைகளுக்காக ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமே இந்த யுபிஐ வசதி மூலம் உடனடியாக எடுக்க அனுமதிக்கப்படும். மீதமுள்ள தொகை தற்போதைய இபிஎஃப் விதிகளின் கீழ் தொடர்ந்து இருப்பு வைக்கப்பட்டிருக்கும்.

தற்போதைய நடைமுறைக்கும் புதிய முறைக்கும் உள்ள வேறுபாடுகள்
தற்போதுள்ள நடைமுறையில், இபிஎஃப்ஓ சந்தாதாரர்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக பணம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை (Withdrawal Claim) சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு, அந்த விண்ணப்பம் பல்வேறு கட்ட சரிபார்ப்புகள் மற்றும் செயல்முறைகளைக் கடந்த பின்னரே பணம் வங்கிக் கணக்கிற்கு வரும்.

தற்போதைய முறையிலுள்ள சிக்கல்கள்:
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதில் சற்று கால தாமதம் ஏற்படுகிறது. சில குறிப்பிட்ட கணக்குகளுக்கு மேனுவல் (Manual) சரிபார்ப்பு தேவைப்படுகிறது. அவசரக் காலங்களில் உடனடியாக பணத்தைப் பெறுவது மிகவும் கடினமான ஒன்றாகவும், அலைச்சலை ஏற்படுத்துவது போலவும் இருக்கிறது.

புதிய யுபிஐ முறையின் நன்மைகள்: இதற்கு நேர்மாறாக, வரவிருக்கும் புதிய யுபிஐ சார்ந்த முறை பிஎஃப் பணத்தை எடுப்பதை வேகமானதாகவும், எளிமையானதாகவும் மாற்ற இருக்கிறது. இந்த வசதி அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்த பிறகு, வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் பிஎஃப் தொகையை, உறுப்பினர்கள் உடனடியாக டிஜிட்டல் கட்டணங்களைச் செலுத்தவோ அல்லது ஏடிஎம் (ATM) மூலம் பணமாகப் பெறவோ பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
EPFO UPI Withdrawal Every PF Member Should Know This Process How UPI EPF Transfers Will Work
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X