PF-இல் இணைவதில் வந்த புதிய சிக்கல்.. புதிய விதி தளர்த்தப்படுமா? இதோ முழு விவரம்..
இ.பி.எப்.ஓ (EPFO) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்த அமைப்பு கொண்டுவரும் திட்டங்கள் பயனுள்ள வகையில் இருக்கிறது. ஆனால் சமீபத்தில் இ.பி.எப்.ஓ அமைப்பு கொண்டுவந்த புதிய விதியால், முதல் முறையாக பணியில் சேரும் பணியாளர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இந்தியப் பணியாளர் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
புதிய சிக்கல்
இந்தியாவில் பல தனியார் நிறுவனங்களில் கோடிக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக அவர்களின் எதிர்காலத்திற்காக மத்திய அரசு ஏற்படுத்தியது தான் இந்த இ.பி.எப்.ஓ (EPFO) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு. அதுவும் பணியில் சேரும் தொழிலாளர்களின் ஊதியத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை மாதம்தோறும் பிடித்தம் செய்யப்படுகிறது. அதற்கு இணையாக நிறுவனம் அளிக்கும் தொகையையும் சேர்த்து பி.எப் கணக்கில் சேர்க்கப்படும்.

மேலும் இதற்காகத் தான் யு.ஏ.என். (UAN) எனப்படும் தனி அடையாக எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதல் முறையாக ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் பணியாளருக்கு யு.ஏ.என். வழங்குவதில் இ.பி.எப்.ஓ அமைப்பு ஒரு புதிய விதியை கொண்டுவந்தது. இந்த விதி ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதாவது இந்த புதியி விதியின்படி, ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேரும் பணியாளர் உமாங் செயலி வழியாக எப்ஏடி (FAT) எனப்படும், முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முக அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும். ஆனால் இந்த விதி அமலான இரண்டே நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய பணியாளர்களுக்கு யு.ஏ.என்.பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதாக இந்திய பணியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த ஆகஸ்ட் 5, 2025 அன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், முக அடையாளத்தைப் பதிவு செய்வதில் பல நடைமுறை சிக்கல் இருப்பதால், புதிதாக வேலைக்கு சேரும் தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் வழங்குவதில் பிரச்சனை உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பளம் தாமதமாவதால் பணியாளரும், நிறுவனங்களும் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர பெரும்பாலான ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியர்களிடம் ஸ்மார்ட்போன்கள் மற்றும் நிலையான இணைய சேவை இல்லாததால் ஊமாங் செயலி மூலம் முக அடையாளத்தை உறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருவதையும் இந்தியப் பணியாளர் கூட்டமைப்பு சுட்டிக்காட்டுள்ளது.
குறிப்பாக யு.ஏ.என் எண் பெற முடியாத காரணத்தால் சம்பளம் மற்றும் பி.எஃப் (PF) தொகையை வழங்குவதில் தாமதம் ஏற்படுத்துவது, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அலுவல் பணியை பார்த்திருக்கிறது. ஆகவே முதல் முறையாக பணிக்கு சேருபவர்களுக்கு பி.எப் பதிவின் போதே ஆன்லைன் மூலம் யு.ஏ.என் வழங்கும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என இந்தியப் பணியாளர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை
அதேபோல் ஏற்கனவே வெளியான தகவலின்படி, பத்து (10) ஆண்டுகளுக்கு ஒருமுறை பிஎஃப் பயனர்கள் தங்கள் கணக்கில் இருக்கும் மொத்த பணத்தை எடுக்கும் வகையில் மாற்றம் கொண்டுவர EPFO அமைப்பு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எனவே ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் ஒரு முறையும் பிஎஃப் பயனர்கள் தங்களில் கணக்கில் இருக்கும் பணத்தை முழுவதும் எடுத்துப் பயன்படுத்துவதற்காக வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

இப்போது ஒரு ஊழியர் தங்களது பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை அவர் பணி ஓய்வு பெறும்போது அல்லது இரண்டு மாதங்களுக்கு மேல் எந்த வேலைக்கு செல்லாமல் இருக்கும்போது பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஒருவேளை அரசு இந்த புதிய திட்டத்திற்கு அனுமதி கொடுத்தால் பிஎஃப் கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுப்பதற்கான வாய்ப்பு ஊழியர்களுக்கு கிடைக்கும்.
அதேசமயம் மொத்தம் பணம் இல்லாமல் 60 சதவீதம் தொகையை மட்டும் எடுத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கலாமா என்ற ஆலோசனையும் நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இப்போது நாம் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை மருத்து அவசர தேவை, திருமண செலவுகள், வீடு கட்டுவது உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பம் செய்து கணிசமான தொகையைப் பெறமுடிகிறது.


Click it and Unblock the Notifications








