இதுக்கு தானே காத்திருந்தோம்.. PF வாடிக்கையாளர்களுக்கு அமைச்சர் சொன்ன குட் நியூஸ்.. இதோ முழு விவரம்..
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான (Employees' Provident Fund Organisation) இபிஎப்ஓ (EPFO) தொடர்ந்து பல்வேறு புதிய வசதிகளை கொண்டுவருகிறது. குறிப்பாக இந்த அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு வசதியும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். இந்நிலையில் பிஎஃப் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
பிஎஃப் பணத்தை எடுக்க தற்போது ஆன்லைனில் கிளைம் கோரிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதற்குப் பிறகு, பணம் இன்று வருமா? நாளை வருமா? என்று பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் இனி அந்த கவலை தேவையில்லை. உறுப்பினர்கள் சந்திக்கும் இந்த சிக்கலை கவனத்தில் கொண்டு, கூகுள் பே, போன்பே போன்ற யுபிஐ தளங்கள் மூலம் பிஎஃப் பணத்தை எளிதாகப் பெறும் வசதியை EPFO விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

மேலும் இந்த புதிய வசதி குறித்து பேசிய மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரான மன்சுக் மாண்டவியா இனி EPFO உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை யுபிஐ மூலம் தங்கள் வங்கி கணக்கிற்குக் கொண்டுவரலாம். இதற்கான டெஸ்டிங் ப்ராசஸ் தற்போது வெற்றிகரமான முடிவடைந்துள்ளது. யுபிஐ மூலம் எடுக்கப்படும் பணம் நேரடியாக இபிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு வந்து சேர்ந்துவிடும் என்று கூறியுள்ளார்.
குறிப்பாக உங்கள் பிஎஃப் கணக்கில் பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது என்பதை நீங்களே பார்த்துக் கொண்டு உங்களது வங்கி கணக்கிற்கு யுபிஐ மூலம் ட்ரானஸ்பர் செய்யலாம். அதன்பின்னர் எப்போதும் போல் உங்களது வங்கி கணக்கிற்குப் பணம் வந்தடைந்த பின் அதை நீங்கள் பிற விஷயங்களுக்கு யுபிஐ வழியாக செலவு செய்யலாம். ஆனாலும் இந்த வசதியைப் பயன்படுத்தி உங்களால் முழு பிஎஃப் பணத்தை எடுக்க முடியாது. அதாவது அவசர தேவைக்காகக் குறிப்பிட்ட தொகையை இபிஎஃப்ஓ அமைப்பு முடக்கி வைத்திருக்கும். பெரும்பகுதியான பணத்தை நீங்களே யுபிஐ மூலம் எடுத்துக் கொள்ளலாம்.
தற்போது நடைமுறையில் உள்ள பிஎஃப் பணம் எடுக்கும் செயல்முறை பல உறுப்பினர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில், பணத்தை பெற ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு சில நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதை எளிதாக்கும் வகையில் EPFO ஏற்கனவே சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
அதில் முக்கியமானது 'ஆட்டோ செட்டில்மென்ட்' முறை. இந்த முறையில், மனித தலையீடு இல்லாமல் முழுக்க முழுக்க தானியங்கி செயல்முறை மூலம் PF கிளைம் தொகைகள் மூன்று நாட்களுக்குள் செட்டில் செய்யப்படுகின்றன. தற்போது ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை உள்ள தொகைகள் இந்த ஆட்டோ செட்டில்மென்ட் முறையிலேயே அனுப்பப்பட்டு வருகின்றன. அதேபோல் அவசர மருத்துவச் செலவுகள், குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் வீடு கட்டுதல் போன்ற தேவைகளுக்கு இந்த முறை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனுடன் விரைவில் அறிமுகமாக உள்ள யூபிஐ வசதி, உறுப்பினர்களுக்கு இன்னும் வேகமாக பணம் கிடைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர வாட்ஸ்அப் சேவையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது EPFO அமைப்பு. EPFO அமைப்பின் அதிகாரப்பூர்வ எண்ணிற்கு "ஹலோ" என்று ஒரு மெசேஜ் அனுப்பினாலே, உங்கள் PF கணக்கில் உள்ள இருப்புத் தொகையை உடனடியாக தெரிந்து கொள்ளலாம். இதனால், பிஎஃப் தொடர்பான தகவல்களைப் பெறுவது மேலும் எளிதாகியுள்ளது.
வருங்காலங்களில், PF உறுப்பினர்கள் வீட்டிலிருந்தபடியே சில நொடிகளில் பல சேவைகளைப் பெறும் வசதிகள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக EPFO அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு வசதியும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications