EPFO அப்டேட்.. PF பயனர்களுக்கு இந்த சேவை இணையதளத்தில் கிடைக்காது.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
இபிஎஃப்ஓ (EPFO) என்று அழைக்கப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organization) தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. அதுவும் நாட்டில் ஊழியர்களுக்கும் என்றே தனித்தனி PF கணக்கு வழங்கப்படுகிறது.குறிப்பாக இந்த PF கணக்கில் ஒவ்வொரு மாதமும் வரவு வைக்கப்படுகிறது.
அதாவது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) ஓய்வூதிய சேமிப்பு திட்டத்தின் மூலம் ஊழியர்கள் பெறும் சம்பள தொகையில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு பகுதி முதலீடு செய்யப்படுகிறது. அதேபோல் தொழிலாளர் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து ஒரு தொகையும் இந்த கணக்கில் டெபாசிட் செய்யப்படும். குறிப்பாக இந்த தொகை ஒவ்வொரு ஊழியர்களும் ஓய்வு பெறும் போது எடுத்துக்கொள்ள முடியும்.

ஒருவேளை ஓய்வுக்கு முன்பே தொழிலாளர்கள் இந்த பணத்தை மருத்து செலவுகள், கல்வி, வீட்டுக் கடன்கள், திருமணம், வீடு கட்டுதல் போன்ற அவசரமான தேவைகளுக்கு முன்பாகவே எடுத்த கொள்ளலாம். குறிப்பாக இந்த பிஎஃப் கணக்கு மேலாண்மையில் அவ்வப்போது மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன.
அந்த வகையில் தற்போது பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நீங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவோ அல்லது பாஸ் புக்கை சரி பார்க்கவோ யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (universal account number) எனப்படும் UAN எண் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் இந்த UAN எண்ணை நீங்கள் ஆக்டிவேட் செய்தால் மட்டுமே பிஎஃப் சேவைகளை ஆன்லைனில் பெற முடியும்.
குறிப்பாக UAN எண்ணை இபிஎஃப்ஓ இணையதளம் வாயிலாக ஆக்டிவேட் செய்ய முடியும் நிலை இருந்தது. ஆனால் தற்போது இபிஎஃப்ஓ இணையதளத்தில் UAN எண்ணை ஆக்டிவேட் செய்யும் விருப்பம் சரியாக செயல்படுவதில்லை. எனவே இப்போது Umang செயலியில் மட்டுமே UAN எண்ணை ஆக்டிவேட் செய்ய முடிகிறது.
UAN எண் ஆக்டிவேட் செய்தால் மட்டுமே உங்களால் பிஎஃப் நிதியை நிர்வாகம் செய்ய முடியும். அதுவும் உங்களுடைய பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது. நிறுவனம் மாதந்தோறும் உங்கள் பணத்தைச் சரியாக டெபாசிட் செய்கிறதா, உங்களுக்கு வட்டி பணம் கிடைக்கிறதா போன்ற தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.
அதேசமயம் நீங்கள் நிறுவனம் மாறும்போதும் புதிய நிறுவனத்திற்கு உங்கள் பிஎஃப் கணக்கை மாற்ற வேண்டும் என்றாலும் இந்த UAN எண் ஆக்டிவேட் செய்யப்பட்டிருப்பது கட்டாயம் ஆகும். சரி இப்போது umang செயலியில் UAN activation செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
umang செயலியில் UAN எண்ணை ஆக்டிவேட் செய்வது எப்படி?
வழிமுறை 1: முதலில் நீங்கள் உங்களது மொபைல் போனில் umang செயலியைப் பதிவிறக்கம் செய்யவும். அடுத்து அந்த செயலியில் உள்ள UAN activation எனும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அதை தொடர்ந்து உங்களின் UAN எண், ஆதார் எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் போன்றவற்றை உள்ளிட வேண்டும்.

வழிமுறை 2: அதன்பின்பு சப்மிட் கொடுக்கும்போது உங்களுடைய மொபைல் எண்ணுக்கு வரக்கூடிய ஓடிபி-ஐ இந்த செயலியில் பதிவிட வேண்டும். அடுத்து உங்களின் முக அடையாளம் சரிபார்க்கப்படும். இந்த நடைமுறை முடித்த உடனே உங்களின் UAN எண் ஆக்டிவேட் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது Epfo இணையதளத்தில் இந்த செயல்முறையைச் செய்தால் கூட அங்கே umang செயலியை பயன்படுத்துங்கள் என்ற மெசேஜ் தான் வருகிறது. ஆகவே இணையதளத்தில் இந்த UAN எண்ணை ஆக்டிவேட் செய்ய முடியவில்லை.


Click it and Unblock the Notifications








