Home
News

பிஎஃப் பணம்.. இனிமேல் அந்த பிரச்சனை இருக்காது.. வருகிறது புதிய ரூல்ஸ்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

நாட்டில் EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டமாக இருக்கிறது. குறிப்பாக ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தனித்தனி EPF கணக்கு வழங்கப்படுகிறது. இந்த EPF கணக்கில் ஒவ்வொரு மாதமும் வரவு வைக்கப்படுகிறது. ஆனாலும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) பணத்தை மோசடி செய்யும் வழக்குகள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

அதாவது சமீபத்தில் கூட டெல்லி காவல்துறையினர் ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) அதிகாரிகள் மீது இதேபோன்ற வழக்கைப் பதிவு செய்தனர். அதில் அந்நிறுவனம் தனது ஊழியர்களின் பிஎஃப் பணத்தை அவர்களின் கணக்கில் டெபாசிட் செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஃப் பணம்.. இனிமேல் அந்த பிரச்சனை இருக்காது.. வருகிறது புதிய ரூல்ஸ்!

எனவே இதுபோன்ற மோசமான சம்பவங்களைத் தடுக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஒரு புதிய முறையை அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி நிறுவனம் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்தவுடன் உடனடியாக ஊழியர்களின் மொபைலுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும். இந்த எஸ்எம்எஸ் மூலம் தொழிலாளர்கள் தனது கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டதா இல்லையா என்பதை நிகழ் நேரத்தில் தெரிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பெரும்பாலான ஊழியர்களுக்கு அவர்களின் பிஎஃப் கணக்கில் பணம் சரியான நேரத்தில் டெபாசிட் செய்யப்படுகிறதா இல்லையா என்பது தெளிவாகத் தெரியாது. குறிப்பாக சில வழிமுறைகள் மூலம் ஊழியர்கள் தங்கள் பிஎஃப் இருப்பு (பேலன்ஸ்) பற்றிய தகவல்களைப் பெறமுடிகிறது. ஆனாலும் இதுவரை பிஃஎப் டெபாசிட் நிலையைப் பற்றிய தகவல்களை நிகழ் நேரத்தில் வழங்கக்கூடிய அத்தகைய அமைப்பு எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இப்போது வங்கிகள் போன்ற அதன் தகவல் தொழில்நுட்ப அமைப்பை வலுப்படுத்தி வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே இதன் மூலம் ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பிஎஃஎப் பணம் அவர்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டதா இல்லையா என்பதை உடனடியாக எஸ்எம்எஸ் மூலம் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை எந்த மாதத்திலும் எஸ்எம்எஸ் வரவில்லை என்றால் நிறுவனம் பிஎஃப் டெபாசிட் செய்யவில்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இது தொடர்பாக தொழிலாளர் சம்பந்தப்பட்ட துறையைத் தொடர்பு கொள்ளலாம்.

குறிப்பாக நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் பிஎஃப் பணத்தை பிடித்தம் செய்தாலும், அதை ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்வதில்லை என்ற பிரச்சனை பல முறை எழுந்துள்ளது. அதுவும் சிலருக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பணம் என்ன ஆனது என்று தெரியாத நிலை இருக்கிறது. இதுபோன்ற மோசடிகளால் ஊழியர்கள் பெரும் இழப்பைச் சந்திக்கின்றனர்.

பிஎஃப் பணம்.. இனிமேல் அந்த பிரச்சனை இருக்காது.. வருகிறது புதிய ரூல்ஸ்!

எனவே தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கொண்டுவரும் புதிய முறையானது, ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் சரியான நேரத்தில் பணத்தை டெபாசிட் செய்ய நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கும். இதன் மூலம் ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் எஸ்எம்எஸ் மூலம் பிஎஃப் கணக்கில் பணம் சரியான நேரத்தில் பணம் வருகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

அதேபோல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தொடர்ந்து புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்த அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு அம்சமும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

source

More from GizBot

Best Mobiles in India

English summary
EPFO to introduce instant SMS alerts to prevent problems in PF accounts: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X