Home
News

EPFO புது ரூல்ஸ்.. ரூ. 1 லட்சம் வரை உடனே கையில் கிடைக்கும்.. இனி காத்திருக்க அவசியமில்லை.. கவனியுங்க மக்களே..

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான (Employees' Provident Fund Organisation) இபிஎப்ஓ (EPFO) அமைப்பு புதிய தகவலை தற்போது வெளியிட்டுள்ளது. மிக விரைவில் EPFO அமைப்பு அதன் பயனர்கள் பயன்பெறும் வகையில், உடனுக்குடன் பணம் எடுக்க உதவும் யுபிஐ அடிப்படையிலான கிளைம் பிராஸஸ் (UPI based claim processing) செயல்முறையை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய செயல்முறைப்படி, EPFO பயனர்கள் அவர்களின் PF கணக்கில் இருந்து எவ்வளவு பணம் எடுக்கலாம் என்ற விபரணத்தையும் EPFO அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

அரசாங்கத்தின் பல சேவைகள் இப்போது டிஜிட்டல் தளம் வழியாக (Government services through digital platforms) அணுக கிடைக்கிறது. மக்களின் தேவையை அறிந்து இந்திய அரசாங்கம் பல்வேறு புதிய சேவைகளை தொடர்ந்து அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தற்போது அதன் பயனர்கள் பயன் பெரும் வகையிலான பல புதிய மாற்றங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

EPFO புது ரூல்ஸ்.. ரூ. 1 லட்சம் வரை உடனே கையில் கிடைக்கும்.. கவனியுங்க

EPFO புது ரூல்ஸ்.. ரூ. 1 லட்சம் வரை உடனே கையில் கிடைக்கும்:

இந்த வரிசையில், தற்போது மிக விரைவில் EPFO அமைப்பு, ஆன்லைன் மூலம் PF பணத்தை வித்ட்ராவல் (PF amount withdrawal) செய்யும் புதிய செயல்முறையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பான செய்திகள், சில காலத்திற்கு முன்பு வெளியிடப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த புதிய ஆன்லைன் வித்ட்ராவல் (PF online withdrawal) மூலம் எவ்வளவு பணம் எடுக்கலாம் எந்த முறையில் எடுக்கலாம் என்பது போன்ற முக்கியமான தகவல்கள் தெளிவாக இல்லாமல் இருந்தது வந்தது.

தற்போது இந்த கேள்விகளுக்கான விடைகள் கிடைத்துவிட்டது. எப்பபோ அமைப்பு மே (May) மாதம் இறுதிக்குள், யுபிஐ (UPI) மூலம் பணம் எடுக்கும் புதிய யுபிஐ அடிப்படையிலான கிளைம் பிராஸஸ் (PF amount claim process) செயல்முறையை அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது. இந்த செயல்முறை மூலம், EPFO பயனர்கள் இனி அவர்களுடைய பிஎப் கணக்கில் (PF account) இருந்து பணம் எடுக்க 2 அல்லது 3 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளது.

யுபிஐ அடிப்படையிலான கிளைம் பிராஸஸ் செயல்முறை (UPI based claim processing):

அதேபோல், இந்த புதிய யுபிஐ அடிப்படையிலான கிளைம் பிராஸஸ் (EPFO claim process) மூலம் பணம் எடுக்க மக்கள் வீட்டில் இருந்தபடி விண்ணப்பம் செய்தால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது. இது பல லட்சம் EPFO பயனர்களின் எளிமையான PF கிளைம்ஸ் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அம்சமாக நடைமுறைக்கு வரவிருக்கிறது என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு செயலாளர் சுமிதா தாவ்ரா (Labour and Employment Secretary Sumita Dawra) தெரிவித்திருக்கிறார்.

இவர் மேலும் கூறுகையில், இந்த அம்சம் நிச்சயம் மே மாத இறுதி அல்லது ஜூன் (June) மாத துவக்கத்திற்குள் நடைமுறைக்கு வரும் என்று கூறியுள்ளார். பலதரப்பட்ட சோதனைக்கு பிறகு, EPFO அமைப்பு அதன் புதிய யுபிஐ அடிப்படையிலான கிளைம் பிராஸஸ் அம்சத்தை வெளியிடவுள்ளது. EPFO பயனர்கள் அவர்களின் PF கணக்கில் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை UPI ஆப்ஸில் (UPI apps) நேரடியாக அணுகும் வசதி ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

EPFO பயனர்கள் ரூ. 1 லட்சம் வரை UPI வழியாக பணம் எடுக்கலாமா?

இதன் மூலம், PF கணக்கில் இருக்கும் இருப்பு (PF account balance amount) தகவலை அறிந்துகொண்டு, EPFO பயனர் தங்களுக்கு தேவையாக தொகையை வித்ட்ராவல் (EPFO PF UPI withdrawal) செய்துகொள்ளலாம். அதிகபட்சமாக, EPFO பயனர்கள் ரூ. 1 லட்சம் வரை இந்த புதிய யுபிஐ அடிப்படையிலான கிளைம் பிராஸஸ் மூலம் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

நீங்கள் விரும்பும் வங்கி கணக்கு விபரங்களை (bank account details) உள்ளிட்ட, PF கணக்கில் இருக்கும் பணத்தை வங்கி கணக்கிற்கு (PF amount to bank account) நேரப்படியாக மாற்றம் செய்துகொள்ளலாம். இந்த புதிய யுபிஐ அடிப்படையிலான கிளைம் பிராஸஸ் செயல்முறை மூலம் சில மணி நேரம் அல்லது சில நிமிடங்களில், உங்கள் PF கணக்கில் இருக்கும் பணத்தை நீங்கள் ஒரே நாளில் எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சேவை தொடர்பான தகவலை விரைவில் அப்டேட் செய்கிறோம். இதேபோல், EPFO பயனர்கள் பிரத்தியேக EPFO ATM கார்டு மூலம் பணம் எடுக்கும் சேவையும் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய EPFO ஏடிஎம் கார்டு (ATM card) செயல்முறையும் கூட விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த செயல்முறையை பின்பற்றி EPFO பயனர்கள் எந்தவித காத்திருப்பும் இல்லாமல் நேரடியாக, அவர்களுடைய PF கணக்கில் இருக்கும் பணத்தை, அவர்களுடைய வங்கி ATM மையங்களில் இருந்து, ATM அட்டைகளை பயன்படுத்தி, பணம் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

EPFO ஏடிஎம் சேவை மற்றும் விரிவுபடுத்தப்பட்ட காரணங்கள்:

விரைவாக பணம் எடுக்க உதவும் புதிய அம்சங்களை தவிர EPFO இப்போது இன்னும் சில விபரங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ளது. UPI சேவை (EPFO UPI service) மற்றும் ATM மூலம் (EPFO ATM service) பணம் எடுப்பது போன்ற ஆன்லைன் மூலம் (EPFO online) விரைவான பணம் எடுக்கும் அம்சங்களை தவிர, EPFO ​​நிதி பயன்பாட்டின் நோக்கத்தையும் விரிவுபடுத்தியுள்ளது. EPFO உறுப்பினர்கள் இப்போது வீட்டுவசதி, கல்வி மற்றும் திருமண செலவுகள் காரணத்திற்காக PF நிதியை எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள பிஎப் கிளைம்ஸ் விதிமுறைகளுக்கு (PF claims rules) கூடுதலாக, இவை செயல்படும் என்று தாவ்ரா தெரிவித்துள்ளார். பிஎப் (PF) பயனர்களின் தேவைக்கேற்ற அம்சங்களை EPFO தற்போது வழங்க துவங்கியுள்ளது. இந்த மாற்றத்தை சாத்தியமாக்க, EPFO ​​ஒரு குறிப்பிடத்தக்க டிஜிட்டல் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. உரிமைகோரல் செயலாக்கத்தை சீராக்க 120 -க்கும் மேற்பட்ட தரவுத்தளங்கள் (databases) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

மேலும் 95% உரிமைகோரல்கள் ஏற்கனவே தானியங்கி முறையில் செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த செயல்முறையை மேலும் எளிதாக்குவதை EPFO நோக்கமாக கொண்டுள்ளது. குறிப்பாக காகிதப்பணி மற்றும் தாமதங்களைக் குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எப்பபோ அமைப்பு எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
EPFO to introduce instant PF withdrawals by UPI service and by ATM service before June 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X