Home
News

இனி ரூ.1000 இல்லை.. பிரைவேட் கம்பெனி ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த EPFO.. புதிய விதிகள் ரெடி?

இபிஎப்ஓ (EPFO) என்கிற ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organisation) ஆனது தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு (Private Company Employees) இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ஒரு முக்கிய தகவலை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, ​​இபிஎப்ஓ-வின் ஓய்வூதிய கட்டமைப்பின் கீழ் தகுதியுள்ள ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.1,000 ஆக உள்ளது. பணவீக்கம் மற்றும் வாழ்க்கை செலவுகள் அதிகரித்து வந்தாலும், இந்த தொகை பல ஆண்டுகளாக மாறாமலேயே உள்ளது.

EPFO.. இனி ரூ.1000 இல்லை? பிரைவேட் கம்பெனி ஊழியர்களுக்கு ஷாக்!

தனியார் துறையில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்களுக்கு, ஓய்வூதியத்தை மிகவும் யதார்த்தமானதாக மாற்ற இந்திய அரசாங்கமானது ஒரு குறிப்பிடத்தக்க திருத்தத்தை பரிசீலித்து வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. நடந்து வரும் விவாதங்களின்படி, குறைந்தபட்ச இபிஎஸ் (EPS) ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.1,000 இல் இருந்து ரூ.5,000 ஆக அதிகரிக்கப்படலாம்.

இந்த முன்மொழிவை ஊழியர் சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்கள் வலுவாக ஆதரித்ததாகவும், அவர்கள் தற்போதைய ஓய்வூதியம் அடிப்படை வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க போதுமானதாக இல்லை என்று வாதிடுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. நினைவூட்டும் வண்ணம் - இபிஎப்ஓ அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS-95) கீழ் தான் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

தங்கள் பணி ஆண்டுகளில் இபிஎப்-க்கு (Employees' Provident Fund) பங்களிப்பு செய்த ஊழியர்கள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவையை முடித்திருந்தால், இபிஎஎஸ் (Employees' Pension Scheme) சலுகைகளுக்கு தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். ஓய்வூதிய கொடுப்பனவுகள் (Pension payments) பொதுவாக 58 வயதுக்கு பிறகு தொடங்கும்.

ஒருவேளை விவாதத்தில் உள்ள ரூ.5000 என்கிற தொகை அங்கீகரிக்கப்பட்டால், அதன்பின் வரும் திருத்தப்பட்ட ஓய்வூதிய தொகையால் யாரெல்லாம் பயன் அடைவார்கள்? இபிஎப்ஓ-வில் சேர்ந்த தனியார் துறை ஊழியர்கள், இபிஎஸ் சேவை தகுதியைப் பூர்த்தி செய்யும் ஓய்வு பெற்றவர்கள், குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறும் தற்போதைய ஓய்வூதியதாரர்கள்.

இந்த மாற்றம் அமலுக்கு வரும் பட்சத்தில், மில்லியன் கணக்கான ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, குறிப்பாக வேறு வருமான ஆதாரங்கள் இல்லாதவர்களுக்கு நிதி ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஆனாலும் இதுவரையிலாக இபிஎப்ஓ ஆனது எந்த அதிகாரப்பூர்வ ஒப்புதலோ அல்லது அறிவிப்போ வெளியிடப்படவில்லை. வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டின் போது இந்த திட்டம் மதிப்பாய்வு செய்யப்படலாம். எந்தவொரு மாற்றமும் அரசாங்க ஒப்புதலுக்கு பிறகுதான் முறையாக அறிவிக்கப்படும்.

ஓய்வூதிய திருத்தத்துடன் சேர்த்து அதிகாரிகள் பின்வருவனவற்றையும் ஆராய்ந்து வருகின்றனர்: ரூ.1000 இல் இருந்து ரூ.5000 என்கிற ஓய்வூதிய திருத்தத்துடன் சேர்த்து - டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தி எளிதாக பிஎப் பணத்தை திரும்ப பெறுதல், விரைவான ஓய்வூதிய விநியோக வழிமுறைகள், மூத்த குடிமக்களுக்கு இபிஎப்ஓ ​​சேவைகளுக்கான மேம்பட்ட அணுகல் ஆகிய மாற்றங்களும் ஆராயப்பட்டு வருகிறது.

இந்த நடவடிக்கைகள் ஓய்வூதிய சலுகைகளை மேலும் அணுகக்கூடியதாகவும், பயனர் நட்பாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மீண்டும் ஒருமுறை ரூ.5,000 ஓய்வூதியம் என்பது இன்னும் பரிசீலனையில் உள்ளது என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிரோம். இப்போதைக்கு தற்போதைய ஓய்வூதிய விதிகள் அப்படியே மாறாமல் தான் உள்ளன.

அதிகாரப்பூர்வ இபிஎப்ஓ ​​அல்லது அரசாங்க அறிவிப்புகளை மட்டுமே நாம் நம்ப வேண்டும், பரிந்துரைகள் அல்லது விவாதங்களை அல்ல. மேலும் உறுப்பினர்கள் இபிஎப்ஓ ​​அப்டேட்களை தொடர்ந்து சரிபார்த்து, ஓய்வூதிய சலுகைகளில் தாமதத்தை தவிர்க்க அவர்களின் சேவை பதிவுகள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
EPFO to increase Private Employees monthly pension from Rs 1000 to Rs 5000 Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X