Home
News

உடனே உங்க PF பேலன்ஸ் செக் செய்யுங்க.. நினைவுபடுத்திய EPFO அமைப்பு.. 1.. 2.. 3.. உடனே இப்படி செக் பண்ணுங்க..

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தற்போது மில்லியன் கணக்கான அரசு ஊழியர்களுக்கு பிராவிடன்ட் ஃபண்ட் (PF) அணுகலை எளிமையாக்கும் புரட்சிகரமான நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது. விரைவில் இபிஎப்ஓ 3.0 (EPFO 3.0) என்ற புதிய மேம்படுத்தப்பட்ட சேவையை அறிமுகம் செய்யவும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்து இயங்கி வருகிறது. இதற்கு நடுவே, ஒவ்வொரு மாதமும் அவரவர் தனி PF கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்படுகிறது. உங்கள் PF கணக்கில் இந்த மாதம் எவ்வளவு வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை உடனே இப்படி செக் செய்யுங்கள்.

அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதி ஒவ்வொரு மாதமும் அவர்களின் வருங்கால வைப்பு நிதி (PF account) கணக்கில் ஒதுக்கப்பட்டு, வரவு வைக்கப்படுகிறது. இது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலம் மேற்பார்வை செய்யப்படுகிறது. ஒவ்வொரு EPFO பயனர்களும் தங்கள் PF கணக்கில் இருக்கும் இருப்புத்தொகையை (PF balance) அணுகுவதற்கு அரசாங்கம் பல எளிமையான வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.

உடனே உங்க PF பேலன்ஸ் செக் செய்யுங்க.. நினைவுபடுத்திய EPFO அமைப்பு..

இந்த மாதம் எவ்வளவு வரவு வைக்கப்பட்டது? உடனே உங்க PF பேலன்ஸ் செக் செய்யுங்க.. நினைவுபடுத்திய EPFO அமைப்பு:

இந்த இபிஎஃப்ஓ ஆன்லைன் சேவைகளை (EPFO online service) பயன்படுத்தி, ஊழியர்கள் தங்கள் சேமிப்பு கணக்கின் முழு விபரங்களை சில நொடியில் அறிந்துகொள்ளலாம். இதை சரியாக செய்து முடிக்க UAN எனப்படும் யுனிவர்சல் கணக்கு எண் (UAN) உங்களிடம் இருக்க வேண்டும். ஒவ்வொரு PF கணக்கு வைத்திருப்பவருக்கும் இந்த UAN எண் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த PF அடையாள எண்ணை வைத்துக்கொண்டு எப்படி உங்கள் இருப்பு தொகை விபரங்களை அறிந்துகொள்ளலாம் என்பது இங்கே.

1. SMS மூலம் எப்படி உங்கள் PF பேலன்ஸ் விபரங்களை அறிந்துகொள்வது?
உங்கள் PF கணக்கில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து '7738299899' என்ற எண்ணிற்கு EPFOHO'UANNumber' என்ற வடிவத்தில் உங்கள் UAN எண்ணை அனுப்பி, உங்கள் தற்போதைய இருப்புத்தொகையை நேரடியாக உங்கள் மொபைலில் பெறலாம். இந்த அம்சம் இணைய அணுகல் தேவையில்லாமல் உங்கள் PF பேலன்ஸ் பற்றி அறிந்துகொள்ள உதவும்.

2. மிஸ்டு கால் மூலம் எப்படி PF பேலன்ஸ் விபரங்களை அறிந்துகொள்வது?
உங்கள் PF கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து கட்டணமில்லாத எண் ஆன '011-22901406' என்ற எங்களை டயல் செய்து ரிங் செய்வதன் மூலம், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உங்கள் PF இருப்புத்தொகையைக் கொண்ட ஒரு SMS தகவலை உங்கள் போனிற்கு அனுப்பும். ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்த விரும்பாதவர்கள் அல்லது SMS சேவையை விரும்பாதவர்களுக்கு இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

3. ஆன்லைன் மூலம் எப்படி உங்கள் PF பேலன்ஸ் தகவலை தெரிந்துகொள்வது?
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organisation) தற்போது அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் உங்கள் PF இருப்புத்தொகையை சரிபார்க்க அனுமதிக்கிறது. passbook.epfindia.gov.in என்ற இணையதள பக்கத்தின் மூலம், உங்கள் UAN எண்ணுடன் உள்நுழைவதன் (login) மூலம், உங்கள் கணக்கு விவரங்களை எளிதாக அணுகலாம். இந்த டிஜிட்டல் அணுகுமுறை பேலன்ஸ் மட்டுமின்றி, ஒட்டுமொத்த PF கணக்கின் பரிவர்த்தனை வரலாற்றை காண்பிக்கிறது.

PF கணக்கு வைத்துள்ள ஒவ்வொரு EPFO பயனர்களும் அவரவர் கணக்கில் எவ்வளவு இருப்புத்தொகை இருக்கிறது என்பதை அறிந்துகொள்வது மிகவும் முக்கியமானது அவசியமானது என்பதை EPFO மீண்டும் இப்போது நினைவுபடுத்தியுள்ளது. ஒவ்வொரு மாதமும், ஒரு ஊழியரின் சம்பளத்தில் இருந்து 12% தொகை அவர்களின் PF கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதை EPFO 3.0 சேவையில் உங்கள் விருப்பம் போல மாற்றிக்கொள்ள அனுமதிக்கும் புதிய சேவையும் பயன்படுத்த கிடைக்கும் என்று கூறப்படுகிறது. EPFO 3.0 சேவை ஜூன் 2025ல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
EPFO ​​system reminds 1 2 3 Check your PF balance immediately like this via SMS missed calls and website
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X