Home
News

PF மெம்பர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்.. EPFO கொடுக்கும் ரூ.15000 பணம்.. வாங்குவது எப்படி?

இபிஎப்ஓ (EPFO) என்கிற ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees' Provident Fund Organisation) ஆனது பல பிஎப் மெம்பர்களுக்கு, உமாங் ஆப் (UMANG app) மூலம் ஆதார் முக அங்கீகாரத்தை (Aadhaar Face Authentication - FAT) நிறைவு செய்யுமாறு மெசேஜ் அனுப்பி வருகிறது.

அந்த மெசேஜ் "அன்புள்ள உறுப்பினரே, உங்கள் யுஏஎன் (UAN) ஆனது ஆதார் முக அங்கீகாரத்தைப் (FAT) பயன்படுத்தி அங்கீகரிக்கப்படவில்லை. பிஎம்விபிஆர்ஒய் (PMVBRY) பலன்களை பெற எப்ஏடி கட்டாயமாகும். தயவுசெய்து உமாங் ஆப் மூலம் உடனடியாக இந்த செயல்முறையை நிறைவு செய்யவும்" என்று கூறுகிறது.

PF மெம்பர்களுக்கு வந்த மெசேஜ்.. EPFO கொடுக்கும் ரூ.15000!

அறியாதோர்களுக்கு பிஎம்விபிஆர்ஒய் என்பது பிரதான் மந்திரி விக்ஸித் பாரத் ரோஜ்கார் யோஜனா (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் பலன்களை பெற எப்ஏடி கட்டாயம் ஆகும் என்றும் அந்த மெசேஜில் கூறப்பட்டு உள்ளது.

முதல் முறை ஊழியர்களுக்கு ரூ.15,000 வரை பலன்: இந்த திட்டம், முதல் முறை ஊழியர்களுக்கு நிதி உதவியையும், முறைசார் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க எம்பிளாயர்களுக்கு ஊக்கத்தொகைகளையும் வழங்குகிறது. பிஎம்விபிஆர்ஒய் திட்டத்தின் கீழ், முதல் முறை ஊழியர்கள் ரூ.15,000 வரை பலனாக பெறலாம்.

இந்தத் தொகை, அதிகபட்சமாக ரூ.15,000 என்ற வரம்பிற்கு உட்பட்டு, ஒரு மாத ஊதிய மானியமாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகை இரண்டு தவணைகளில் செலுத்தப்படும். ஆறு மாத பணிக்காலம் முடிந்த பிறகு முதல் தவணை வரவு வைக்கப்படும். 12 மாதங்களுக்கு பிறகு இரண்டாவது தவணை வழங்கப்பட்டு, அது ஒரு சேமிப்புத் திட்டத்திற்கு மாற்றப்படும்.

இத்திட்டம், இபிஎப்ஓ-வில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனத்தில் முதல் முறையாக சேரும் ஊழியர்களுக்கு பொருந்தும். மாத சம்பளம் ரூ.1,00,000 வரை இருக்க வேண்டும். ஆகஸ்ட் 1, 2025 மற்றும் ஜூலை 31, 2027 ஆகிய தேதிகளுக்கு இடையில் உருவாக்கப்படும் பணிகளுக்கு இந்த பலன் கிடைக்கும்.

கூடுதல் நன்மைகள் மற்றும் எம்பிளாயர்களுக்கான ஊக்கத்தொகைகள்: பண பலனை தவிர, ஊழியர்கள் இபிஎப்ஓ ​​திட்டத்தின் கீழ் சமூக பாதுகாப்பையும் பெறுகிறார்கள். இந்த திட்டத்தில், வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக நிதி எழுத்தறிவு திட்டங்களும், பணியிட பயிற்சியும் கூட கிடைக்கும். எம்பிளாயர்களுக்கு, இந்த திட்டம் ஒவ்வொரு புதிய ஊழியருக்கும் மாதம் ரூ.3,000 வரை ஊதிய மானியத்தை வழங்குகிறது.

இந்த ஆதரவு பெரும்பாலான துறைகளில் இரண்டு ஆண்டுகளுக்கும், உற்பத்தி துறைக்கு நான்கு ஆண்டுகள் வரையிலும் கிடைக்கிறது. நிறுவனங்கள் அதிக தொழிலாளர்களை பணியமர்த்தவும், தங்கள் பணியாளர் எண்ணிக்கையை விரிவுபடுத்தவும் ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். வரையறுக்கப்பட்ட அடிப்படை அளவை விட வேலைவாய்ப்பை அதிகரிப்பதன் மூலம், முறைசார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது

ஆதார் முக அங்கீகாரம் (எப்ஏடி) கட்டாயம்: இந்த நன்மைகளை பெறுவதற்கு, ஆதார் முக அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது ஆதார் தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் நேரடி முக ஸ்கேனை பொருத்தி அடையாளத்தை சரிபார்க்கும் ஒரு தொடுதலில்லா முறை (contactless) ஆகும். ஊழியர்கள் உமாங் ஆப்பை பயன்படுத்தி இந்த செயல்முறையை செய்து முடிக்கலாம்.

முதலில், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து உமாங் ஆப் மற்றும் ஆதார்பேஸ்ஆர்டி (AadhaarFaceRD) ஆப்பை பதிவிறக்கம் செய்யவும். உமாங்-இல் லாக் -இன் செய்த பிறகு, இபிஎப்ஓ ​​சேவைகளை தேடவும். "யுஏஎன் ஒதுக்கீடு மற்றும் செயல்படுத்துதல்" (UAN Allotment and Activation) அல்லது "ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட யுஏஎன்-களுக்கான முக அங்கீகாரம்" (Face Authentication of Already Activated UANs) என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் ஆதார் எண்ணையும், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணையும் உள்ளிடவும். சரிபார்ப்பிற்காக ஒரு ஒடிபி அனுப்பப்படும். ஒடிபி-ஐ உள்ளிட்ட பிறகு, முக அங்கீகார விருப்பத்தை தேர்ந்தெடுத்து ஒப்புதல் அளிக்கவும். பின்னர், உங்கள் முகத்தை ஸ்கேன் செய்ய, இந்த ஆப் ஆதார்ஃபேஸ்ஆர்டி (AadhaarFaceRD) ஆப்பை திறக்கும்.

அப்போது, உங்கள் முகம் தெளிவாக தெரிவதையும், போதுமான வெளிச்சம் இருப்பதையும் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். ஸ்கேன் வெற்றிகரமாக முடிந்தவுடன், சிஸ்டம் அதை ஆதார் தரவுத்தளத்துடன் பொருத்தும். வெற்றிகரமான அங்கீகாரத்திற்கு பிறகு, உங்கள் யுஏஎன் செயல்படுத்தப்படும் அல்லது புதுப்பிக்கப்படும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு உறுதிப்படுத்தல் மெசேஜ் அனுப்பப்படும்.

Best Mobiles in India

English summary
EPFO send Aadhaar FAT Message to PF Members Are You Eligible for Rs 15000 benefit How to get
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X