இடியை இறக்கிய EPFO.. அமலுக்கு வந்த 3 புது பிஎப் ரூல்ஸ்.. இனி பணம் வர 12 மாதங்கள், புது மினிமம் பேலன்ஸ்!
இந்திய அரசாங்கமானது, இபிஎப்ஓ (EPFO) என்கிற ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (Employees Provident Fund Organisation) இருந்து, ஊழியர்கள் தங்கள் பிஎப் பணத்தை எடுப்பதற்கான விதிகளில் (PF Claim Rules) 3 முக்கியமான மாற்றங்களை செய்து உள்ளதாக அறிவித்துள்ளது.
முதல் மாற்றம் - ப்ரீமெச்யூர் பைனல் செட்டில்மென்ட்டை (Premature final settlement) பெறுவதற்கான காலக்கெடுவானது 2 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மாற்றம் - ப்ரீமெச்யூர் பென்சன் வித்ட்ராவலுக்கு (Premature pension withdrawal) தேவையான காலக்கெடுவானது 2 மாதங்களிலிருந்து 36 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது மாற்றம் - உறுப்பினர்களின் கணக்கில், பங்களிப்புகளில் 25% ஐ உறுப்பினர் எப்போதும் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்பாக (minimum balance) வைத்திருக்க வேண்டும் என்கிற புதிய தேவையையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. வேலையை இழந்த பிறகு முன்கூட்டியே பணத்தை எடுக்க விரும்புவோருக்கு இது பொருந்தாது.
இது உறுப்பினர்கள், இபிஎப்ஓ வழங்கும் அதிக வட்டி விகிதத்தை (தற்போது ஆண்டுக்கு 8.25%) அதிக மதிப்புள்ள ஓய்வூதிய நிதியை குவிப்பதற்கான கூட்டு சலுகைகளுடன் அனுபவிக்க உதவும். மேலும் இது உறுப்பினர்கள் போதுமான ஓய்வூதிய நிதியை பராமரிப்பதை உறுதி செய்யும் என்றும் இபிஎப்ஓ ஒரு அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த முடிவுகள் எல்லாமே - புதுதில்லியில் நடைபெற்ற சென்ட்ரல் போர்ட் ஆப் ட்ரஸ்ட்டீஸ் இபிஎப்-ன் (Central Board of Trustees EPF) 238வது கூட்டத்தில் எடுக்கப்பட்டன. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் ஆன மன்சுக் மண்டவியா தலைமையில் இது நடைபெற்ற இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட புதிய முடிவுகள் ஆனது ஒரு செய்திக்குறிப்பின் வழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதோடு இபிஎப்ஓ ஆனது சிபிடி 13 (CBT 13) விதிகளை ஒரு விதியாக இணைத்து, அத்தியாவசிய தேவைகள் (நோய், கல்வி, திருமணம்), வீட்டுத் தேவைகள் மற்றும் சிறப்பு சூழ்நிலைகள் என அவைகளை மூன்று வகைகளாக வகைப்படுத்தி, அவற்றை எளிமைப்படுத்தியும் உள்ளது.
மேலும் பணியாளர் மற்றும் முதலாளி பங்கு உட்பட, வருங்கால வைப்பு நிதியில் உள்ள தகுதியான நிலுவைத் தொகையில் 100% வரை உறுப்பினர்கள் திரும்ப பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வித்ட்ராவல் லிமிட்களை (Withdrawal limits) தளர்த்துகிறது. மேலும் அனைத்து பார்ஷியல் வித்ட்ராவல்களுக்கும் (All partial withdrawals) குறைந்தபட்ச சேவையின் தேவை ஒரே மாதிரியாக 12 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக "சிறப்பு சூழ்நிலைகள்" என்பதன் கீழ், இயற்கை பேரிடர், நிறுவனங்கள் மூடல் அல்லது மூடப்படுதல், தொடர்ச்சியான வேலையின்மை, தொற்றுநோய் பரவல் என, பார்ஷியல் வித்ட்ராவலை பெறுவதற்கான காரணங்களை உறுப்பினர் தெளிவுபடுத்த வேண்டியிருந்தது. இது பெரும்பாலும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதற்கும், அதன் விளைவாக ஏற்படும் குறைகளுக்கும் வழிவகுத்தது. இப்போது, இந்த பிரிவின் கீழ் எந்த காரணங்களையும் குறிப்பிடாமல் உறுப்பினர் விண்ணப்பிக்கலாம்.
திட்ட ஏற்பாடு எளிமைப்படுத்தல் (Scheme provision simplification), அதிக நெகிழ்வுத்தன்மை மற்றும் எந்த ஆவணங்களும் தேவையில்லை என்பது பர்ஷியல் வித்ட்ராவல்-ஐ பெறுவதற்கான கோரிக்கைகளை 100% தானியங்கி தீர்வுக்கு வழிவகுக்கும் மற்றும் வாழ்க்கையை எளிதாக்குவதை உறுதி செய்யும் என்று இபிஎப்ஓ வெளியிட்டுள்ள அறிக்கையால் கூறப்பட்டுள்ளது.
பர்ஷியல் வித்ட்ராவல்-ஐ பெறுவதை தாராளமயமாக்குவது, உறுப்பினர்கள் தங்கள் ஓய்வூதிய சேமிப்பு அல்லது ஓய்வூதிய உரிமைகளை சமரசம் செய்யாமல் தங்கள் உடனடி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்பதை உறுதி செய்யும் என்றும் இபிஎப்ஓ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








