PAN கார்டு இல்லனா மாச சம்பள காரங்களுக்கு TDS ரொம்ப.. EPFO புது ரூல்ஸ்.. பணத்த மிச்சப்படுத்த இதை பண்ணுங்க!
பணி காலம், பான் கார்டு விவரங்கள், பணம் எடுக்கும் வகை மற்றும் கிளைம் கன்டிஷன்களின் அடிப்படையில் எப்போது வரி விதிக்கப்படும் என்பது உட்பட, இபிஎஃப் பணம் எடுப்பதற்கான டிடிஎஸ் (TDS) விதிகளை இபிஎஃப்ஓ (EPFO) கொண்டுவந்துள்ளது. இந்த விதிகளின்படி இபிஎஃப் பணம் எடுக்கும்போது எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு - இபிஎஃப்ஓ (Employees' Provident Fund Organisation - EPFO), ஊழியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து (EPF) எடுக்கப்படும் பணத்துக்கு டிடிஎஸ் பொதுவாக கழிக்கப்படுவது கிடையாது. மெம்பர்களின் தொடர் பணி காலம், நிரந்தரக் கணக்கு எண் (பான்) வைத்திருத்தல் மற்றும் திரும்ப பெறப்படும் தொகை உள்ளிட்ட நிபந்தனைகளை கழிக்கப்படுகிறது.

தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பணி செய்த பிறகு மேற்கொள்ளப்படும் இபிஎஃப் திரும்ப பெறுதல்கள் ஆனது பொருந்தக்கூடிய விதிகளுக்கு உட்படுவதால், டிடிஎஸ் பிடித்தத்திற்கு உள்ளாகாது. பணி காலம் ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், திரும்பப் பெறும் தொகையின் தன்மை மற்றும் அளவு உள்ளிட்ட நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.
இபிஎஃப் திரும்பப் பெறுதல் கோரிக்கைகளுக்கு பான் நம்பர் கட்டாயம் தேவைப்படுகிறது. பான் நம்பர் சமர்ப்பிக்கப்படாத மெம்பர்களுக்கு, பொருந்தக்கூடிய வருமான வரி விதிகளின்படி, டிடிஎஸ் கூடுதல் விகிதங்களில் பிடிக்கப்படலாம். வருமான வரி விதிகளின்படி, உரிய நிபந்தனைகளுக்கு மெம்பர்கள் உட்பட வேண்டி இருக்கிறது. இது தகுதிவாய்ந்த பணம் எடுத்தலுக்கு வழிவகுக்கிறது.
ஆகவே, டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாமல் இருக்க கோரி சமர்ப்பிக்கக்கூடிய படிவம் 15எச் (Form 15H) மற்றும் படிவம் 15ஜி (Form 15G) இதில் பங்கு வகிக்கிறது. ஆகவே, இபிஎஃப் திரும்ப பெறுதல்களின் மீது டிடிஎஸ் எத்தகைய நிபந்தனைகளின் கீழ் பொருந்தும் என்பது அந்தந்த மெம்பர்களுக்கு ஏற்ப மாறுபடுக்கூடியது. பொதுவாக டிடிஎஸ் பிடித்தம் இருக்காது என்பதை உறுதிப்படுத்துகிறது.
பணிபுரிந்த கால அளவு, பான் நம்பர் இருப்பு மற்றும் வரி பிடித்தத்திற்கான தகுதி வரம்புகள் உள்ளிட்டவையில் அடிப்படையில் இருக்கிறது. ஐந்து ஆண்டுகள் தொடர் பணி காலத்துக்கு பிறகு திரும்பப் பெறுதலில் டிடிஎஸ் பொருந்தாது (விதிமுறைகளுக்கு உட்பட்டது). 5 ஆண்டுகள் பணி காலத்துக்கு முன் திரும்பப் பெறுதலுக்கு குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் டிடிஎஸ் பொருந்தும்.
பான் நம்பர் சமர்ப்பிக்கப்பட்டால், வழக்கமான பொருந்தக்கூடிய விகிதங்களில் அடிப்படையில் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். பான் நம்பர் சமர்ப்பிக்கப்படவில்லை என்றால், வருமான வரி விதிகளின்படி, அதிக விகிதங்களில் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். படிவம் 15ஜி / படிவம் 15எச் சமர்ப்பித்தால், டிடிஎஸ் பிடித்ததில் இருந்து, விலக்கு கோர முடியும்.
இருப்பினும், இபிஎஃப் மெம்பர்கள் தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்தால், இபிஎஃப் திரும்பப் பெறுதல்களின் மீதான டிடிஎஸ் விலக்கு கோரி தவிர்க்க படிவம் 15ஜி அல்லது படிவம் 15எச் ஆகியவற்றை பயன்படுத்த முடிந்தது. 2026-27 நிதியாண்டு முதல், இபிஎஃப் திரும்ப பெறுதல்களின் மீதான டிடிஎஸ் விலக்கை கோருவதற்குப் புதிய படிவம் 121 (Form 121) தேவைப்படலாம்.
மேலும், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் இருந்து அட்வான்ஸ் (முன்பணம்) முறையில் பணத்தை திரும்ப பெறும் கோரிக்கைகளை 3 நாட்களில் முடித்து வைக்கப்படுகிறது. இதுபோக ஏடிஎம் மற்றும் யுபிஐ வழியாகவும் பிஎப் பணத்தை எடுக்க ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அனுமதி கொடுக்க இருக்கிறது. மே மாதத்தில் இது நடைமுறைக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications