புது EPFO ரூல்ஸ் 2025.. அவசர தேவைகளுக்காக இனி PF பணம் எடுப்பது ரொம்ப சுலபம்.. இதோ முழு விவரம்..
இபிஎஃப்ஓ (EPFO) என்று அழைக்கப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organization) கடந்த சில மாதங்களில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. அதேபோல் விரைவில் பிஎஃப் பணத்தை ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் எடுக்கும் வசதியும் இந்த அமைப்பு கொண்டுவர உள்ளது.
குறிப்பாக இந்த பிஎஃப் கணக்கில் ஊழியரின் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியும், நிறுவனத்தின் ஒரு பங்களிப்பும் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த பணம் நமது ஓய்வுக்குப்பிறகு பயனுள்ள வகையில் இருக்கும். அதேசமயம் சில முக்கிய சூழ்நிலைகளில், ஓய்வு பெறும் முன்பே பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை திரும்பப் பெறவும் அனுமதிக்கப்படுகிறது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்த 2025-ல் இபிஎஃப்ஓ (EPFO) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் திருமணம், உங்கள் குழந்தைகள் அல்லது உடன்பிறந்தவர்களின் திருமணத்திற்காக இந்த பிஎஃப் பணத்தை எடுக்கலாம். அதுவும் பிஎஃப் கணக்கு குறைந்தது 7 வருடம் பழமையானதாக இருக்க வேண்டும். பின்பு கணக்கில் குறைந்தபட்சம் ரூ.1000 இருப்பு இருக்க வேண்டும். அதேபோல் மொத்த பிஎஃப் தொகையின் 50 சதவீதம் வரை வட்டி உட்பட எடுக்கலாம். மேலும் இந்த வசதி வாழ்நாளில் மூன்று முறை மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் உங்களது குழந்தைகளின் உயர்கல்விக்காக பிஎஃப் பணம் எடுக்கலாம். ஆனால் பிஎஃப் கணக்கு 7 ஆண்டுகள் பழையதாக இருக்க வேண்டும். அதுவும் மொத்த பங்களிப்பின் 50 சதவீதம் வரை பணம் எடுக்கலாம். பின்பு வாழ்நாளில் மூன்று மட்டுமே இந்த வசதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடு வாங்க, கட்ட,பழுது பார்க்க அல்லது புதுப்பிக்க பிஎஃப் பணம் எடுக்க முடியும். அதுவும் இதற்கு பிஎஃப் உறுப்பினர் குறைந்த 5 வருடங்கள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். வீடு வாங்க/கட்டுதல்: ஒரே முறை மட்டும் பணம் எடுக்கலாம். இதற்குத் திட்டமிட்டு முடிவு செய்ய வேண்டும். வீடு பழுது/புதுப்பிப்பு: வீடு கட்டப்பட்ட 5 வருடங்களுக்குப் பிறகு பெறலாம். 10 வருட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் எடுக்க அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் Para 68J-இன் கீழ் மருத்துவ அவசரத்துக்கு எந்த நேரமும் பிஎஃப் பணத்தை எடுக்கலாம். இதற்கு எந்தவித சேவை கால வரம்பும் தேவையில்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் பெறலாம். குறிப்பாக மருத்துவச் செலவுகள், பெரிய நோய்களுக்கு இது மிக முக்கியமான நிதி ஆதரவாகும்.
பிஎஃப் உறுப்பினர் ஓய்விற்கு ஒரு வருடத்திற்கு முன், மொத்த பிஎஃப் தொகையில் 90 சதவீதம் வரை பணம் எடுக்கலாம். பின்பு இது ஒரே முறை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இது ஓய்வு வாழ்க்கையைத் திட்டமிட உதவுகிறது. மேலும் உடல் குறைபாடுகள் உள்ளவர்கள், தங்களுக்குத் தேவையான சாதனங்களை வாங்க பிஎஃப் பணத்தை எடுக்கலாம். Para 68J-இன் கீழ் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இந்த வசதி கிடைக்கும்.
Para 68H-இன் கீழ் நிறுவனம் 15 நாட்களுக்கு மேல் மூடப்பட்டிருந்தால் அல்லது 2 மாதங்கள் சம்பளம் வரவில்லையெனில், பணியார் தனது பங்களிப்பு கூடுதலாக வட்டியை முழுவதும் எடுக்கலாம். குறிப்பாக வேலை இல்லாத சமயத்தில் இந்த தொகை மிகவும் உதவியாக இருக்கும். அதேபோல் Para 68BB இன் கீழ் வீட்டு கடனின் முதன்மை தொகையும் வட்டியும் திருப்பச் செலுத்த பிஎஃப் பணத்தைப் பயன்படுத்தலாம். ஆனால் இதற்கு 10 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க.
இந்த 2025-ல் வெளியிடப்பட்ட EPFO திரும்பப் பெறுதல் விதிகள், பிஎஃப் பணத்தை நம் வாழ்க்கையின் முக்கிய கட்டங்களில் பயன்படுத்த வசதியாக இருக்கிறது என்றே கூறலாம். மேலும் விரைவில் இபிஎஃப்ஓ (EPFO)பல்வேறு புதிய திட்டங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








