Home
News

தீபாவளிக்கு முன்பு குட் நியூஸ் சொன்ன EPFO.. இனி 100 சதவீதம் வரை பணம் எடுக்கலாம்.. இதோ முழு விவரம்..

தீபாவளி நெருங்கும் சமயத்தில் பிஎப் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அதாவது டெல்லியில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நேற்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் வாரியத்தின் கூட்டம் நடந்தது.

குறிப்பாக இந்தக் கூட்டத்தில் பிஎப் பென்ஷன் தொகையை உயர்த்துவது மற்றும் பிஎப் (PF) விதிகளைத் தளர்த்துவது குறித்த முக்கிய ஆலோசனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதாவது கடந்த 2014-ம் ஆண்டு முதல் பிஎப் பென்ஷன் தொகை ரூ.1000 ஆக வழங்கப்பட்டு வருகிறது. 11 ஆண்டுகளை கடந்த பிஎப் பென்ஷன் உயர்த்தப்படாமல் இருப்பது பணியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது.

தீபாவளிக்கு முன்பு குட் நியூஸ் சொன்ன EPFO.. இதோ முழு விவரம்..

பிஎப் பென்ஷனை உயர்த்தி தர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தினர். இந்நிலையில் பென்ஷன் தொகையை ரூ.1, 000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்த மத்திய அறங்காவலர் குழு திட்டமிட்டுள்ளது. அதுவும் பென்ஷன் தொகையை உயர்த்துவது குறித்த விவாதம் மத்திய அங்காவலர் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிலையில், இன்னமும் அது குறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை.

ஆனால் ஒரு ஊழியர் ஓய்வு பெறுவதற்கு முன்பு பிஎப் தொகையை எடுப்பதற்கான விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாதச் சம்பளம் வாங்குவோர் தங்கள் பிஎப் கணக்கில் உள்ள பணத்தை முழுவதுமாக எடுத்துக் கொள்ளும் வசதி அமலுக்கு வருகிறது என மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து மைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தது என்னவென்றால், வருங்கால வைப்புநிதி தொகையில் பகுதி அளவு எடுப்பதற்கான விதிமுறைகள் தற்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதுவும் தேவைக்கான காரணங்கள் 13இல் இருந்து அத்தியாவசியம், வீட்டுத் தேவை மற்றும் சிறப்பு சூழ்நிலை என்று 3 வகைகளாகக் குறைக்கப்பட்டு உள்ளன. இந்த விதிகளின் மூலம் பணியாளர் பங்களிப்பு மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு என பிஎப் கணக்கில் உள்ள இருப்புத் தொகையில் 100 சதவீதம் எடுத்துக் கொள்ளலாம்.

அதேபோல் கல்வி மற்றும் திருமணம் செலவுக்காகப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வரம்புகளும் மாற்றியமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி கல்வி தேவைக்காக 3 முறைக்குப் பதிலாக 10 முறையும், திருமண தேவைக்காக 3 முறைக்குப் பதிலாக 5 முறையும் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

அதேசமயம் வேலையின்மை, தொற்று நோய் பரவல், வேலை செய்த நிறுவனம் திடீரென மூடப்படுதல் மற்றும் இயற்கை சீற்றம் போன்ற சூழ்நிலைகளில் காரணம் எதுவும் தெரிவிக்காமல் பிஎஃப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு முன்பு குட் நியூஸ் சொன்ன EPFO.. இதோ முழு விவரம்..

ஆனாலும் பணியாளர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பிஎப் கணக்கில் ஒரு 25 சதவீதம் தொகையைக் குறைந்தபட்ச இருப்புத் தொகையாகப் பராமரிக்க வேண்டும் என்ற விதியும் கொண்டுவரப்பட்டுள்ளது என அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சில வாரங்களுக்கு முன்பு வெளியான தகவலில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வரும் ஜனவரி 2026 முதல் அதன் சந்தாதாரர்களுக்கு ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
EPFO new rules: You can withdraw up to 100 percentage of the 'eligible balance' in your PF account
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X