Home
News

EPFO புது ரூல்ஸ்.. இப்போ 100% PF பணத்தை எடுக்கலாம்.. எப்போது எடுக்கலாம்? யாரெல்லாம் எடுக்கலாம்?

புதிய இபிஎப்ஓ விதிகள் ஆனது (New EPFO Rules) ஆனது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் (Employees' Provident Fund Organization) பணம் எடுக்கும் செயல்முறையை முற்றிலுமாக எளிமைப்படுத்தி உள்ளது. இதன் மூலம் இபிஎப்ஓ மெம்பர்கள் தங்கள் சேமிப்பை இன்னும் எளிதாக அணுக முடிகிறது.

புதிய மற்றும் திருத்தப்பட்ட கட்டமைப்பானது, பல பிரிவுகளை மூன்று பரந்த குழுக்களாக குறைத்து, எப்போது, ​​எப்படி நிதியை எடுக்கலாம் என்பது குறித்து அதிக தெளிவை வழங்குகிறது. நினைவூட்டும் வண்ணம் முன்னதாக பிஎப் (PF) என்கிற வருங்கால வைப்பு நிதியை (Provident Fund) எடுப்பது 13 வெவ்வேறு காரணங்களுக்காக பிரிக்கப்பட்டிருந்தது, இது செயல்முறையைச் சிக்கலாக்கியது.

100% PF பணத்தை எடுக்கலாம்.. எப்போது எடுக்கலாம்? யாரெல்லாம் எடுக்கலாம்?

இப்போது இவை அத்தியாவசிய தேவைகள் (Essential Needs), வீட்டு வசதி தேவைகள் (Housing Needs) மற்றும் சிறப்பு சூழ்நிலைகள் (Special Circumstances) என மூன்று பரந்த குழுக்களாக ஒன்றிணைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் இபிஎப்ஓ உறுப்பினர்கள் எப்போது, ​​எப்படி தங்கள் பணத்தை எடுக்கலாம் என்பதை தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.

திருத்தப்பட்ட விதிகளின்படி, சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், உறுப்பினர்கள் தங்களின் தகுதியான வருங்கால வைப்பு நிதி இருப்பில் 100 சதவீதம் வரை, ஊழியர் மற்றும் முதலாளியின் பங்களிப்புகள் உட்பட, எடுக்கலாம். இதன்கீழ் - ஓய்வு பெறுதல், 58 வயதை அடைதல் மற்றும் விருப்ப ஓய்வு ஆகியவைகள் அடங்கும்.

மேற்கண்ட 3 சூழ்நிலைகள் அல்லது காரணங்கள் தவிர்த்து - ஒரு உறுப்பினர் நிரந்தரமாக ஊனமுற்றவராக ஆனாலோ, வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டாலோ, அல்லது நிரந்தர குடியேற்றத்திற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டாலோ முழு பிஎப் பணத்தையும் எடுக்க அனுமதிக்கப்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

வேலையின்மையின் போது பிஎஃப் பணம் எடுப்பது எப்படி? வேலையின்மை காலங்களில் பிஎஃப் பணத்தை எடுக்க விதிகள் அனுமதிக்கின்றன. ஒரு உறுப்பினர் தனது வேலையை இழந்தால், அவர் தனது பிஎஃப் இருப்பில் 75% வரை உடனடியாக எடுக்கலாம். அந்த நபர் தொடர்ந்து வேலையில்லாமல் இருந்தால், மீதமுள்ள 25% 12 மாதங்களுக்கு பிறகு எடுக்கலாம். இது உறுப்பினர்கள் செலவுகளை நிர்வகிக்கவும், அதே நேரத்தில் சேமிப்பில் ஒரு பகுதியை தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

பகுதி தொகை எடுப்புகள் (Partial Withdrawals) இப்போது இன்னும் எளிதாகவும், மேலும் நெகிழ்வாகவும் உள்ளன: உறுப்பினர்கள் இப்போது 12 மாத சேவையை நிறைவு செய்த பிறகு, நோய், கல்வி, திருமணம் மற்றும் வீட்டுவசதி போன்ற தேவைகளுக்காக தங்கள் பிஎஃப் இருப்பில் 75% வரை எடுக்கலாம். கல்விக்காக சேவை காலத்தில் 10 முறை வரை பணம் எடுக்கலாம். திருமணம் தொடர்பான தொகை எடுப்புகள் 5 முறை வரை அனுமதிக்கப்படுகின்றன, இது முந்தைய வரம்புகளை விட அதிகமாகும்.

மருத்துவம் மற்றும் வீட்டுவசதிக்கான பணம் எடுக்கும் விதிகள் விளக்கப்பட்டுள்ளன: மருத்துவ சிகிச்சைக்காக பிஎஃப் பணம் எடுப்பது, தமக்கோ, துணைவருக்கோ, குழந்தைகளுக்கோ அல்லது பெற்றோருக்கோ அனுமதிக்கப்படுகிறது. இது புற்றுநோய் அல்லது காசநோய் போன்ற கடுமையான நோய்களை உள்ளடக்கியது மற்றும் ஒரு நிதியாண்டில் மூன்று முறை வரை செய்யலாம்.

உறுப்பினர்கள் வீடு வாங்குவதற்கோ, கட்டுமானம், புதுப்பித்தல் அல்லது வீட்டுக்கடனை திருப்பி செலுத்துவதற்கோ பிஎப் பணத்தை எடுக்கலாம். அந்த சொத்து - உறுப்பினரின் பெயரிலோ, வாழ்க்கை துணையின் பெயரிலோ அல்லது கூட்டாகவோ இருக்கலாம், மேலும் சேவை காலத்தில் இவ்வாறு 5 முறை வரை பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.

குறைந்தபட்ச பேலன்ஸ் விதி ஆட்டு சேமிப்பை வளர்க்க உதவுகிறது: புதிய இபிஎப்ஓ விதியின் கீழ், உறுப்பினர்கள் தங்களின் மொத்த பிஎப் பங்களிப்புகளில் குறைந்தபட்சம் 25 சதவிகிதத்தை தங்கள் கணக்கில் வைத்திருக்க வேண்டும். இது, மீதமுள்ள தொகைக்கு தற்போதைய இபிஎப்ஓ ​​விகிதமான ஆண்டுக்கு 8.25 சதவிகிதத்தில் தொடர்ந்து வட்டி கிடைப்பதை உறுதி செய்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
EPFO New Rules When you Can Take 100 percent of your PF amount and What is the Eligibility
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X