Home
News

EPFO புது ரூல்ஸ்.. இனி வித்ட்ராவ் செய்ய புது விதி.. EPS பயனாளிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி வெயிட்டிங்கில்லை..

EPFO பயனாளிகளுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு, தனது 1995ஆம் ஆண்டு ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) திருத்தம் கொண்டு வந்துள்ளது. ஆறு மாதங்களுக்கும் குறைவான சேவையில் உள்ள ஊழியர்களுக்கும் இனி வித்ட்ராவ் நன்மைகள் (withdrawal benefits) வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி இப்போது பல்வேறு துறைகளில் பணிகளில் உள்ள 7 லட்சம் பேருக்கும் அதிகமானோரின் வயிற்றில் பால் வார்த்துள்ளது. இந்த புதிய விதியை EPFO அமைப்பு உடனுக்குடன் நடைமுறைப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

EPFO வெளியிட்டுள்ள இந்த புதிய தகவல் எல்லா EPF பயணிகளுக்கும் கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதியின் படி, இனி ஆறு மாதங்களுக்கும் குறைவான பங்களிப்பு சேவையுடன் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. உண்மையை சொல்ல போனால், குறைந்த காலத்திற்குள் வேலையை விட்டு வெளியேறும் 7 லட்சத்திற்கும் அதிகமான EPS பயனர்களுக்கு இந்த நன்மை பயனளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

EPFO புது ரூல்ஸ்.. இனி வித்ட்ராவ் செய்ய புது விதி.. EPS ஹேப்பி நியூஸ்

EPFO பயனாளிகளுக்கு புது விதி.. இனி வித்ட்ரா செய்ய நீண்ட காலம் தேவையில்லை:
இந்த ஒட்டுமொத்த புதிய சேவையும் அட்டவணை D பதிவின் கீழ் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அட்டவணை D என்பது திட்டத்தின் தகுதிக்கு தேவையான சேவையை வழங்காத உறுப்பினர்கள் அல்லது 58 வயதை எட்டிய உறுப்பினர்களைக் குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அட்டவணையின் கீழ், ஒவ்வொரு மாதத்திற்கான சேவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதையும், வழங்கப்படும் சேவையின் விகிதத்தில் withdrawal benefits பலன்கள் வழங்கப்படுவதையும் உறுதிசெய்யப்படுகிறது.

இந்த சேவையின் படி நீங்கள் வித்ட்ராவ் செய்யும் தொகையானது, அந்த உறுப்பினரின் சேவையை முடித்த மாதங்களின் எண்ணிக்கை மற்றும் EPS பங்களிப்பு பெறப்பட்ட தொகையை பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, வித்ட்ராவ் பலன் நன்மைகள் முடிந்த ஆண்டுகளில் பங்களிப்பு சேவையின் காலம் மற்றும் EPS பங்களிப்பு செலுத்தப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது.

இதில் கட்டாய 6 மாத பங்களிப்பு சேவையும் இணக்கமானது என்பது கவனிக்கத்தக்கது. எனவே, ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட மாதங்கள் ஒரு வேலையில் பங்களிப்பு சேவையை முடித்த பிறகு, உறுப்பினர்களுக்கு அந்தந்த பலன்கள் வழங்கப்பட்டு வந்தது. இதற்கு முன் 6 மாதங்களுக்கும் குறைந்த காலத்தில் வெளியேறும் உறுப்பினர்களுக்கு எந்தவித பலன்களும் கிடைக்காது என்பது கவனிக்கத்தக்கது.

6 மாதத்திற்கும் குறைவான பங்களித்து இருந்தால் கூட, இனி பணம் கிடைக்குமா?
இது பல ஊழியர்களுக்கு ஒரு முடக்க கட்டையாக இருந்து வந்தது. ஆனால், இனி அப்படி இல்லை. இனி ஊழியர்கள் 6 ஆறு மாதங்களுக்கும் குறைவான பங்களிப்பு சேவையுடன் பணியில் இருந்து விலகினால் கூட, அந்த ஊழியர்களுக்கும் அவர்களின் தொகையை வித்ட்ராவ் செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது பல குறுகிய கால ஊழியர்களுக்கு நற்செய்தியாக அமைத்துள்ளது. இந்த திடீர் மாற்றத்தால் ஊழியர்கள் சந்தோஷமடைந்துள்ளனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
EPFO New Rules Now Members With Less Than 6 Months Service Can Use Withdrawal Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X