இனி ரூ.7500 இல்ல ரூ.15000.. புதிய பென்சன் ரூல்ஸ் 2025.. லிமிட், வயது, க்ளெயிம் என 3 முக்கிய மாற்றங்கள்!
இபிஎப்ஓ (EPFO) என்கிற ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organisation) ஆனது - இந்தியா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான பங்களிப்பாளர்களுக்கு ஓய்வூதிய அணுகல் மற்றும் ஓய்வூதியத்தை அணுகுவதற்கான வசதியை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட 3 முக்கியமான மாற்றங்களை செயல்படுத்தியுள்ளது.
இந்த 3 புதிய மாற்றங்களுமே - ஓய்வூதிய நிர்வாகத்தை நவீனமயமாக்குவதற்கும், ஓய்வு பெற்றவர்களுக்கான சலுகைகளை அதிகரிப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்படியாக 2025 ஆம் ஆண்டிற்கான புதிய இபிஎப்ஓ விதிகளின் (New EPFO rules for 2025) கீழ் என்னென்ன மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன? இதோ விவரங்கள்:

1. பென்சன் லிமிட் அதிகரிப்பு (Increased pension limit): உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் அதிகபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ.7,500 லிருந்து ரூ.15,000 ஆக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, முன்னர் குறைந்த வரம்பால் கட்டுப்படுத்தப்பட்ட உயர் வருமானம் கொண்ட ஊழியர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2. முன்கூட்டியே ஓய்வூதியம் திரும்ப பெறுவதற்கான வயது வரம்பில் மாற்றம் (Early pension withdrawal age limit): பிஎப் மெம்பர்கள் இப்போது 50 வயதில் இருந்து ஓய்வூதியத்தை பெற தொடங்கலாம். நினைவூட்டும் வண்ணம் இதற்கான முந்தைய வரம்பு 58 வயதாக இருந்தது.
இருப்பினும், முன்கூட்டியே பணத்தை திரும்பப் பெறுவதை தேர்ந்தெடுப்பது ஓய்வூதிய தொகையை குறைக்க வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். புதிய விதியின் கீழ், பங்களிப்பாளர்கள் தங்கள் தகுதியான இ பிஎப் பேலன்சில் 100 சதவீதம் வரை திரும்ப பெறலாம். இதில் ஊழியர் மற்றும் முதலாளி பங்களிப்புகளும் அடங்கும்.
3. முழுமையான டிஜிட்டல் ஓய்வூதிய கோரிக்கைகள் (Fully digital pension claims): ஓய்வூதிய செயல்முறையை நெறிப்படுத்தும் நோக்கத்தின் கீழ், இபிஎப்ஓ ஆனது அதன் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி உள்ளது. இதன் கீழ் ஓய்வூதியதாரர்கள் அவர்களுடைய கோரிக்கைகளை முழுமையாக ஆன்லைனில், சமர்ப்பிக்கலாம் மற்றும் கண்காணிக்கலாம்.
இதற்காக சிபிபிஎஸ் (CPPS) என்கிற மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய கட்டண முறை (Centralised Pension Payment System) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது பிபிஓ (PPO) என்கிற ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதிய கட்டண ஆணை (Pension Payment Order) இருப்பிடத்தை பொருட்படுத்தாமல் எந்த வங்கி கிளையிலிருந்தும் பணம் பெற உதவுகிறது.
மேற்குறிப்பிட்டு உள்ள 3 சீர்திருத்தங்களுமே - பென்சன் தொடர்பான வெளிப்படைத்தன்மை மற்றும் பென்சன் அணுகலை எளிதாக்குவதை நோக்கிய குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிக்கின்றன. மேலும் பங்களிப்பாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் தங்கள் சலுகைகளை மிகவும் திறமையாக நிர்வகிக்க முடியும் என்பதையும் உறுதி செய்கின்றன.
இபிஎப்ஓ-வின் இன் தரவுகளின்படி, இந்த அமைப்பு (இபிஎப்ஓ) இந்தியா முழுவதும் ஆறு கோடிக்கும் மேற்பட்ட செயலில் உள்ள உறுப்பினர்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வருகிறது. டிஜிட்டல் டூல்களை செயல்படுத்துதல் மற்றும் அதிகரித்த ஓய்வூதிய சலுகைகள் மூலம், மேற்கண்ட புதிய மாற்றங்கள் ஆனது இந்தியாவின் பணியாளர்களுக்கு மிகவும் ரெஸ்பான்சிவ் ஆன மற்றும் உள்ளடக்கிய ஓய்வூதிய முறையை வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்
முன்னதாக இந்த புதிய விதிகள் அறிவிக்கப்பட்டதும் "குழப்பம் காரணமாக" பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். பின்னர் 75% பணத்தை எடுக்க எவ்வளவு காலம் ஆகும்? 100% பணத்தை எடுக்க எவ்வளவு காலம் ஆகும்? என்று விளக்கம் அளித்து இபிஎப்ஓ ஆனது நிலைமையை சரி செய்தது.
வேலையின்மையின் போது வருங்கால வைப்பு நிதியை முன்கூட்டியே பைனல் செட்டில்மென்ட் ஆக பெறுவதற்கான குறைந்தபட்ச காலத்தை ஏற்கனவே உள்ள 2 மாதங்களிலிருந்து 12 மாதங்களாகவும், இறுதி ஓய்வூதியத்தை திரும்ப பெறுவதற்கான குறைந்தபட்ச காலத்தை 2 மாதங்களிலிருந்து 36 மாதங்களாகவும் அதிகரிப்பதாக இபிஎப்ஓ (EPFO) அறிவித்து இருந்ததது.
குறிப்பாக வேலையின்மையின் போது பிஎப் பணத்தை எடுக்க 12 மாதங்கள் காத்திருக்க வேண்டுமா என்று பிஎப் தாரர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்களுக்கு இந்த புதிய விதியை குறித்து இபிஎப்ஓ விளக்கம் அளித்துள்ளது. அதன்படி ஒரு உறுப்பினரின் 75 சதவீத தொகையை வேலையை விட்டு வெளியேறிய உடனேயே திரும்ப பெறலாம் என்றும், ஒரு வருடம் வேலையில்லாமல் இருந்த பிறகு முழுத் தொகையையும் திரும்ப பெறலாம் என்றும் இபிஎப்ஓ விளக்கம் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications








