Home
News

PF பணத்தை எடுக்க அலையாதீங்க.. EPFO சொன்ன புது வழி.. வீட்டில் இருந்தபடி Online-ல் PF கிளைம்ஸ் பெறலாம்.. எப்படி?

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), தற்போது அதன் பயனர்கள் எளிமையாக பயன்பெறும் வகையில், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் PF தொகையை வித்ட்ரா (PF amount withdrawal) செய்ய அனுமதிக்கும் புதிய வழிமுறை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இனி EPFO பயனர்கள் அவர்களுடைய PF தொகையை (PF amount) வெளியில் எடுக்க நீண்ட காலம் அலைய வேண்டிய சூழ்நிலையை இந்த புதிய செயல்முறை குறைக்கிறது. இந்த செயல்முறையை வெற்றிகரமாக செய்து முடிக்க உங்களிடம் UMANG ஆப்ஸ் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஓய்வூதிய நிதி (Pension fund) அமைப்பான ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமீபத்தில் வருங்கால வைப்பு நிதி வைத்திருப்பவர்களுக்கு பல புதிய செயல்முறைகளையும், விதிமுறைகளையும் நடைமுறைக்கு கொண்டுவந்து செயல்பட துவங்கியது. EPFO தனது பயனர்கள் (EPFO users) எளிமையான முறையில் பயன்பெறும் வகையிலான பல புதிய மாற்றங்களை தொடர்ந்து செய்து, EPF சேவையை (EPF service) மேம்படுத்தி வருகிறது.

PF பணத்தை எடுக்க அலையாதீங்க.. EPFO சொன்ன புது வழி.. Onlineல் PF கிளைம்

PF பணத்தை எடுக்க அலையாதீங்க.. EPFO சொன்ன புது வழி.. Onlineல் PF கிளைம்:

இப்படி பல புதிய மாற்றங்களுக்கு இடையே PF தொகையை வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் கிளைமஸ் செய்ய (PF amount easy online claims) அனுமதிக்கும் புதிய வசதியையும் EPFO சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. இது EPFO பயனர்கள் அல்லது PF கணக்கில் இருக்கும் தொகையை வித்ட்ரா (PF amaount withdrawal) செய்ய முயலும் மக்கள் அருகில் உள்ள EPFO அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலையை இது முற்றிலுமாக குறைக்கிறது. இந்த புதிய வழிமுறை பற்றிய கூடுதல் விபரங்கள் இதோ.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தற்போது, பிஎஃப் தொகையை (PF amount) உமாங் ஆப்ஸ் (UMANG Apps) மூலம் வித்ட்ரா செய்ய அனுமதிக்கிறது. இந்த UMANG ஆப்ஸை பயன்படுத்தி எப்படி PF தொகையை வீட்டில் இருந்தபடியே வித்ட்ரா செய்யலாம் என்ற செயல்முறை இங்கே.

UMANG ஆப்ஸை பயன்படுத்தி எப்படி PF தொகையை கிளைம் செய்வது?

1. முதலில் UMANG App செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.
2. அதில் EPFO விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
3. Employee Centric கிளிக் செய்து, Raise Claim விற்பதை கிளிக் செய்து உங்கள் EPF UAN நம்பரை உள்ளிடுங்கள்.
4. உங்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் OTP-ஐ உள்ளிட்டு withdrawal முறையை தேர்வு செய்யுங்கள்.
5. Submit கிளிக் செய்து, உங்கள் PF தொகை கிளைம்ஸ் நம்பரை நோட் செய்துகொள்ளுங்கள்.

அவ்வளவு தான், குறிப்பிட்ட காலத்திற்குள் உங்கள் PF கணக்கில் இருக்கும் தொகை, நீங்கள் தேர்வு செய்த வித்ட்ரா முறைப்படி (EPF amount withdrawal) உங்களுக்குகிடைத்துவிடும். இனி உங்கள் PF தொகையை வெளியில் எடுக்க அருகில் உள்ள EPFO அலுவலகத்திற்கு நீங்கள் நேரில் செல்ல வேண்டுமென்ற தேவை இருக்காது. இந்த செயல்முறையை சரியாக செய்து முடிக்க சில முக்கிய நிபந்தனைகளை நீங்கள் செய்திருக்காக வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த மூன்று முக்கிய நிபந்தனைகளை நீங்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் EPFO பயனர்களே:

- உங்கள் யுனிவர்சல் கணக்கு எண் (UAN) ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
- உங்கள் தொலைபேசி எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
- உங்கள் UMANG ஆப்ஸ் தகவல் ஆதாருடன் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

இந்த மூன்று முக்கிய நிபந்தனைகளை நீங்கள் சரியாக செய்திருந்தால், UMANG ஆப்ஸை பயன்படுத்தி, எந்தவித சிக்கலும் இல்லாமல் உங்கள் PF தொகையை வீட்டில் இருந்தபடி வித்ட்ரா செய்திட முடியும். இந்த புதிய செயல்முறை குறித்து, உங்கள் EPFO கணக்கு வைத்திருக்கும் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
EPFO New Method To Withdrawal PF Amount By Using UMANG App Online From UAN Account
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X