பிஎஃப் கணக்கு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்! PF பணத்தை ஈசியாகவும், அதிகமாகவும் எடுக்கலாம்.. வருகிறது புது ஆப்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது சந்தாதாரர்களுக்காக தற்போது ஒரு புதிய மொபைல் செயலியை (ஆப்) உருவாக்கி வருகிறது. குறிப்பாக இந்த செயலி வரும் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இப்போது இந்த புதிய செயலி குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
இந்த புதிய மொபைல் செயலி மூலம் EPFO சந்தாதாரர்கள் தங்களது பிஎஃப் (PF) கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை யுபிஐ வழியாக நேரடியாக தங்கள் வங்கி கணக்கிற்கு மாற்ற முடியும். மேலும் இதற்காக மத்திய தொழிலாளர் அமைச்சகம் ஒரு திட்டத்தில் செயல்பட்டு வருவதாகவும், அதன் கீழ் பிஎஃப் திட்டத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி பாதுகாப்பு வைக்கப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

அதேபோல் EPFO சந்தாதாரர்கள் மொத்த பிஎஃப் தொகையில் ஒரு பெரிய பகுதியை யுபிஐ மூலம் வங்கி கணக்கிற்கு மாற்றுவதன் மூலம் எளிதாக எடுக்கலாம். மேலும் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை மாற்றுவதோடு, சந்தாதாரர்கள் வேறு சில வசதிகளையும் பெறுவார்கள்.
அதாவது பிஎஃப் சந்தாதாரர்கள் யுபிஐ கேட்வேயைப் பயன்படுத்தி நிதியை எடுக்கலும், பாஸ்புக் பேலன்ஸ் போன்ற பிற சேவைகளை பெறவும் இந்த புதிய EPFO மொபைல் செயலி பயன்படும் என்று கூறப்படுகிறது. தற்போது வரை சந்தாதாரர்கள் தங்கள் பிஎஃப் கணக்கை அணுகவும் சேவைகளைப் பெறவும் EPFO போர்டல் அல்லது 'உமாங்' செயலியைப் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
EPFO அமைப்பு அறிமுகப்படுத்த உள்ள புதிய மொபைல் செயலி ஆனது தற்போது சோதனை கட்டத்தில் உள்ளது. குறிப்பாக இதில் உள்ள சில சிக்கல்கள் தீர்க்கப்பட்டு வருகின்றன. சந்தாதாரர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றுவதற்குத் தகுதியான பிஎஃப் தொகையை மொபைல் செயலி மூலம் எளிதாகப் பார்க்க முடியும் என தகவல் வெளிவந்துள்ளது.
குறிப்பாக பிஎஃப் பணத்தை மாற்றுவதற்கான பரிவர்த்தனையை முடிக்க பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் யுபிஐ பின் நம்பரை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இது வங்கி கணக்குகளுக்கு இடையில் நிதியின் பாதுகாப்பான பரிமாற்றத்தை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அந்த புதிய செயலியைப் பயன்படுத்துவதில் எதிர்கொள்ளும் சிக்கல்களை நிவர்த்தி செய்து வருகிறது EPFO அமைப்பு. இதனால் அந்த செயலி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும்போது, EPFO சந்தாதாரர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் அனைத்து வசதிகளையும் பெற முடியும் என்று கூறப்படுகிறது.

மேலும் தொழிலாளர் அமைச்சகம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த புதிய செயலியை மிகப் பெரிய அளவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதவிர பிஎஃப் திட்டத்தில் இப்போது நிறைய மாற்றங்கள் வந்துகொண்டிருக்கின்ற. ஊழியர்கள் சந்திக்கும் பல பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன.
ஆனாலும் பிஎஃப் பணக் கோரிக்கைகளில் தாமதம், நிராகரிப்புகள், போர்ட்டலில் தொழில்நுட்ப பிழைகள் ஆகிய பிரச்சினைகள் இன்னும் இருக்கின்றன. மேலும் மொபைல் எண் சரியாக இருந்தாலும் ஒடிபி வராமல் போவது, போர்ட்டலில் இருந்து தானாக வெளியேறுவது, பாஸ்புக்கை சரியான நேரத்தில் புதுப்பிக்காதது போன்ற பிரச்சனை சந்தாதாரர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்துகின்றன. இதுபோன்று சூழலில் புதிய EPFO செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய செயலியில் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








