Home
News

அடடே.. EPFO-வின் இந்த விதி தெரிந்தால் ரூ.50,000 நன்மையா? யாருக்கெல்லாம் கிடைக்கும்? இப்படி செக் பண்ணுங்க..

இபிஎஃப்ஓ (EPFO), பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் சந்தாதாரர்களுக்கு ரூ.50,000 நன்மை கிடைக்கும் வாய்ப்பை வழங்குகிறது. EPFO அமைப்பின் சில பிரத்தியேகமான விதிகளை பற்றி அறிந்தவர்களுக்கு இந்த ரூ.50,000 தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. அது என்ன விதியென்பது இங்கே.

EPFO என்றால் என்ன? இபிஎஃப்ஓ என்பது, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) என்று அழைக்கப்படுகிறது. இதுவொரு அரசியலமைப்பு சாராத அமைப்பாகும். இது ஊழியர்களை ஓய்வூதியத்திற்கான நிதியைச் சேமிக்க ஊக்குவிக்கிறது. இந்த அமைப்பு இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் 1951 இல் தொடங்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. உங்களுக்கும் EPFO கணக்கு இருக்கிறது என்றால், கட்டாயம் இந்த பதிவு மிகவும் முக்கியமானது.

அடடே.. EPFO-வின் இந்த விதி தெரிந்தால் ரூ.50,000 நன்மையா?

இபிஎஃப்ஓ பயனர்களுக்கு ரூ.50,000 வரை நன்மை யாருக்கெல்லாம் கிடைக்கும்? (EPFO users can avail benefits of up to Rs.50,000):

இபிஎஃப்ஓ பல வழிகளில் அதன் சந்தாதாரர்களுக்கு உதவுகிறது. இபிஎஃப்ஓ பல நன்மைகள் அடங்கிய பல விதிகளை பின்பற்றுகிறது. குறிப்பாக இது சில பிரத்தியேகமான நன்மைகளை வழங்கும் பிரத்தியேக விதிகளையும் இபிஎஃப்ஓ கொண்டுள்ளது. இபிஎஃப்ஓ-வின் எல்லா விதிகளையும் பற்றி அதன் சந்தாதாரர்கள் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மையாகும். அப்படி இபிஎஃப்ஓ-வால் பின்பற்றப்படும் ஒரு முக்கிய விதியை பற்றி தான் இங்கு பார்க்கவிருக்கிறோம்.

இந்த முக்கிய விதியை இபிஎஃப்ஓ அமைப்பு லாயல்ட்டி-கம்-லைஃப்-பெனிபிட்ஸ் (loyalty-cum-life benefits) என்று அழைக்கிறது. அதாவது, EPFO சந்தாதாரர்கள் விசுவாசம் மற்றும் வாழ்க்கை நன்மைகள் என்று இது குறிப்பிடப்படுகிறது. இந்த விதியை சரியான நிபந்தனைகளுடன் பின்பற்றும் ஊழியர்களுக்கு ரூ.50,000 நன்மையை EPFO அமைப்பு தவறாமல் வழங்கி வருகிறது. இந்த விதி எப்படி செயல்படுகிறது? என்ன நிபந்தனைகளுக்கு இது உட்பட்டுள்ளது என்ற முழு விபரத்தை இப்போது பார்க்கலாம்.

முன்பே சொன்னது போல, EPFO விதிகளில் ஒன்று விசுவாசம் மற்றும் வாழ்க்கை நன்மைகள். இதில், ஊழியர்கள் ரூ.50,000 வரை நேரடி பலனை பெறுகிறார்கள். ஆனால் ஒரு நிபந்தனை உள்ளது. அனைத்து PF கணக்கு வைத்திருப்பவர்களும் வேலை மாறிய பிறகும் அதே EPF கணக்கில் தொடர்ந்து பங்களிக்க வேண்டும். அதாவது வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து, வேறொரு நிறுவனத்திற்கு மாறினாலும் ஒரே பிஎஃப் கணக்கை பயன்படுத்த வேண்டும்.

அடடே.. EPFO-வின் இந்த விதி தெரிந்தால் ரூ.50,000 நன்மையா?

EPFO அமைப்பு லாயல்டி-கம்-லைஃப் பெனிபிட்ஸ் நன்மை விதி (EPFO Loyalty-Cum-Life-Benefits Rule):

அப்படி, ஒரே கணக்கை தொடர்ந்து 20 வருடங்களுக்கு பயன்படுத்தி, அதே கணக்கில் தொடர்ந்து பங்களித்து வரும் ஊழியர்களை EPFO அமைப்பு லாயல்டி-கம்-லைஃப் பெனிபிட்ஸ் நன்மையின் கீழ் சேர்க்கும். இந்த விதியின் கீழ் சேர்க்கப்படும் சந்தாதாரர்கள் அடிப்படைச் சம்பளம் ரூ.5,000 வரை உள்ளவர்களுக்கு ரூ.30,000 வரை நன்மை கிடைக்கும். அதேபோல், அடிப்படை சம்பளம் ரூ.5,001 முதல் ரூ.10,000 வரை உள்ளவர்களுக்கு ரூ.40,000 வரை நன்மை கிடைக்கும்.

இறுதியாக, அடிப்படை சம்பளம் ரூ.10,000-க்கு மேல் இருக்கும் ஊழியர்களுக்கு ரூ.50,000 வரை நன்மை கிடைக்கும். இந்த திட்டத்திற்கு மத்திய அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. EPFO சந்தாதாரர்கள் இந்தப் பலனைப் பெறுவதற்கான சிறந்த வழி, வேலைகளை மாற்றும்போது அதே EPF கணக்கைத் தொடர வேண்டும் என்று அறிவுரைக்கப்பட்டுள்ளது. இந்த விதியை தெரிந்தோ அல்லது தெரியாமலோ பின்பற்றிய நபர்களுக்கு இப்போது ரூ.50,000 வரை EPFO கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கணக்கில் எவ்வளவு வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள, உடனே ஆன்லைன் மூலம் செக் செய்துகொள்ளலாம்.
- மொபைல் போனில் இருந்து 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து பேலன்ஸை அறியலாம்.
- EPFOHO என்று டைப் செய்து, பின்னர் UAN எண்ணை உள்ளிட்டு, 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்பி பேலன்ஸை அறிந்துகொள்ளலாம்.
- UMANG போர்ட்டல் மூலம் EPFO ​​இன் ஆன்லைன் சேவைகளை அணுகலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
EPFO Loyalty Cum Life Benefits Rule Provide EPF Subscribers Rs 50000 On Account Check Balance Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X