Home
News

EPFO தரும் ரூ.50,000 போனஸ்.. உடனே உங்கள் PF பேலன்ஸ் செக் பண்ணுங்க.. யாருக்கெல்லாம் இது கிடைக்கும்?

இபிஎஃப்ஓ (EPFO), பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees' Provident Fund Organisation) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலம் EPFO பயனர்களுக்கு ரூ. 50,000 வரையிலான போனஸ் தொகை (EPFO bonus amount) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த குறிப்பிட்ட EPFO விதி பற்றி தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த போனஸ் தொகை கிடைக்குமென்று கூறப்பட்டுள்ளது. அது என்ன விதி? இந்த விதியை எப்படி EPFO பயனர்கள் பயன்படுத்தி, இந்த போனஸ் தொகையை பெறலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

EPFO அமைப்பின் சில பிரத்தியேகமான விதிகளை பற்றி அறிந்தவர்களுக்கு இந்த ரூ.50,000 கூடுதல் தொகை கிடைக்கும் வாய்ப்பு கதவு தற்போது திறக்கப்பட்டுள்ளது. இபிஎஃப்ஓ (EPFO) என்பது, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. இதுவொரு அரசியலமைப்பு சாராத அமைப்பாகும். இது ஊழியர்களை ஓய்வூதியத்திற்கான நிதியைச் சேமிக்க ஊக்குவிக்கிறது (employees to save funds for retirement).

EPFO தரும் ரூ.50,000 போனஸ்.. உடனே உங்கள் PF பேலன்ஸ் செக் பண்ணுங்க..

EPFO தரும் ரூ.50,000 போனஸ்.. உடனே உங்கள் PF பேலன்ஸ் செக் பண்ணுங்க:

இந்த அமைப்பு இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் 1951 இல் தொடங்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. உங்களுக்கும் EPFO கணக்கு (EPFO account) இருக்கிறது என்றால், கட்டாயம் இந்த பதிவு மிகவும் முக்கியமானது. இபிஎஃப்ஓ அமைப்பு பரந்தளவில், பல வழிகளில் அதன் பயனர்களுக்கு உதவி புரிந்து வருகிறது. இபிஎஃப்ஓ பல விதமான நன்மைகள் அடங்கிய பல விதிகளை பின்பற்றி இயங்கி வருகிறது என்பதே உண்மையாகும்.

இருப்பினும், குறிப்பாக சில பிரத்தியேகமான நன்மைகளை வழங்கும் பிரத்தியேக விதிகளையும் இபிஎஃப்ஓ கொண்டுள்ளது என்பதை பல PF கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மையாகும். இபிஎஃப்ஓ அமைப்பின் லாயல்ட்டி-கம்-லைஃப்-பெனிபிட்ஸ் (loyalty-cum-life benefits) என்று அழைக்கப்படும் விதியை பற்றி பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை. அதாவது, EPFO சந்தாதாரர்கள் விசுவாசம் மற்றும் வாழ்க்கை நன்மைகள் என்று இது குறிப்பிடப்படுகிறது.

இபிஎஃப்ஓ அமைப்பின் லாயல்ட்டி-கம்-லைஃப்-பெனிபிட்ஸ் (EPFO's loyalty-cum-life benefits):

இந்த விதியை சரியான நிபந்தனைகளுடன் பின்பற்றும் ஊழியர்களுக்கு ரூ.50,000 போனஸ் தொகையை EPFO அமைப்பு தவறாமல் வழங்கி வருகிறது. இந்த விதி எப்படி செயல்படுகிறது? என்ன நிபந்தனைகளுக்கு இது உட்பட்டுள்ளது என்ற முழு விபரத்தை இப்போது பார்க்கலாம். இந்த ரூ. 50,000 போனஸை பெற, அனைத்து PF கணக்கு வைத்திருப்பவர்களும் ஒரே PF கணக்கை பராமரித்து வரவேண்டும்.

அதாவது ஒரு வேலை நிறுவனத்தில் இருந்து மற்றொரு வேலை நிறுவனத்திற்கு மாறிய பிறகும் அதே EPF கணக்கை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். நீண்ட நாள் ஒரே கணக்கை பயன்படுத்தி பங்களிக்கும் விசுவாசமான பயனர்களுக்கு இந்த தொகை கிடைக்கும். இப்படி, ஒரே கணக்கை தொடர்ந்து 20 வருடங்களுக்கு பயன்படுத்தி, அதே கணக்கில் தொடர்ந்து பங்களித்து வரும் ஊழியர்களை EPFO அமைப்பு லாயல்டி-கம்-லைஃப் பெனிபிட்ஸ் நன்மையின் கீழ் சேர்க்கும்.

யாருக்கெல்லாம் எவ்வளவு போனஸ் கிடைக்கும்?

இந்த விதியின் கீழ் சேர்க்கப்படும் சந்தாதாரர்கள் அடிப்படைச் சம்பளம் ரூ.5,000 வரை உள்ளவர்களுக்கு ரூ.30,000 வரை நன்மை கிடைக்கும். அதேபோல், அடிப்படை சம்பளம் ரூ.5,001 முதல் ரூ.10,000 வரை உள்ளவர்களுக்கு ரூ.40,000 வரை நன்மை கிடைக்கும். இறுதியாக, அடிப்படை சம்பளம் ரூ.10,000-க்கு மேல் இருக்கும் ஊழியர்களுக்கு ரூ.50,000 வரை நன்மை கிடைக்கும்.

இந்த போனஸ் தொகை இப்போது பல பயனர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. உங்கள் கணக்கில் எவ்வளவு வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள, உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையை பின்பற்றி ஆன்லைன் மூலம் உங்கள் EPFO Passbook பேலன்ஸை செக் செய்துகொள்ளுங்கள்.

EPFO பாஸ்புக் பேலன்சை எப்படி செக் செய்வது?

- மொபைல் போனில் இருந்து 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கவும்.
- EPFOHO என்று டைப் செய்து, பின்னர் UAN எண்ணை உள்ளிடவும்.
- டைப் செய்த மெசேஜ்ஜை "7738299899" என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.
- இது உங்கள் PF கணக்கு பாஸ்புக் (EPFO passbook) இருப்பு தகவலை காண்பிக்கும்.
- UMANG போர்ட்டல் மூலம் EPFO ​​இன் ஆன்லைன் சேவைகளை அணுகலாம்.

Best Mobiles in India

English summary
EPFO is giving a bonus of Rs 50000 Check your PF balance immediately Who will get this
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X