Home
News

இனி PF, UAN கணக்கு எண்ணை பெறுவது சுலபம்.. EPFO கொண்டுவந்த சூப்பர் வசதி.. இதோ முழு விவரம்..

இபிஎஃப்ஓ (EPFO) என அழைக்கப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organization) உமாங் மொபைல் செயலி மூலம் முக ஆதார் முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி (Aadhaar-based Face Authentication Technology) யூஏஎன் (UAN) கணக்கை உருவாக்கிச் செயல்படுத்தும் ஒரு டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது இது கோடிக்கணக்கான EPFO ​​உறுப்பினர்களுக்குத் தொடர்பு இல்லாத, பாதுகாப்பான மற்றும் முற்றிலும் டிஜிட்டல் சேவை விநியோகத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும். அதாவது முன்னதாக யுஏஎன் (UAN) உருவாக்கம் பொதுவாக பணியாளர்களின் நியமனத் துறை மூலம் செய்தது. இதன் மூலம் பெயர்கள் மொபைல் எண்கள் மற்றும் பிற விவரங்களில் பிழைகள் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தது.

இனி PF, UAN கணக்கு எண்ணை பெறுவது சுலபம்.. EPFO கொண்டுவந்த சூப்பர் வசதி

குறிப்பாக இந்த பிழைகள் பெரும்பாலும் வைப்புத் தொகை திரும்பப் பெற கோரும் செயல்முறையின் போது அல்லது பிற பிஎப் சேவைகளைப் பெற முயற்சிக்கும்போது சிக்கலை உண்டாகும். அப்போது திருத்தங்கள் தேவைப்பட்டன.

எனவே இதுபோன்ற சாவல்களை எதிர்கொள்ளத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இப்போது உமாங் செயலி வழியாக முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தி நேரடி யூஏஎன் உருவாக்கத்தைச் செயல்படுத்துகிறது. குறிப்பாக இதற்கு நிறுவனங்களின் தலையீடு தேவையில்லை. அதாவது இதற்கு ஊழியர்கள் UMANG மற்றும் AadhaarFaceRD செயலிகள் இரண்டையும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

செயல்முறை

அதாவது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து UMANG மற்றும் AadhaarFaceRD ஆகிய இரண்டு செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அடுத்து UMANG செயலியை ஓபன் செய்து UAN சேவைகளின் கீழ் UAN ஒதுக்கீடு மற்றும் செயல்படுத்தல் எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

அதன்பின்னர் உங்களது ஆதார் எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை உள்ளிடவும். அடுத்து ஒப்புதலை வழங்கி மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓடிபி-ஐ சரிபார்க்கவும். இதை தொடர்ந்து சாதனத்தின் கேமராவைப் பயன்படுத்தி நேரடி புகைப்படத்தை எடுக்கவும்.

அடுத்து கணினி அந்த புகைப்படத்தை ஆதார் பதிவுகளுடன் பொருத்தி, UAN-ஐ உருவாக்குகிறது அதன்பிறகு, அந்த UAN எண் SMS மூலம் அனுப்பப்படுகிறது.

குறிப்பாக UAN உருவாக்கப்பட்ட பின்பு, அது தானாகவே செயல்படுத்தப்படுகிறது. மேலும் ஊழியர்கள் உடனே தங்களது e-UAN கார்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இதன் முக்கிய நன்மைகள் என்னவென்றால், ஆதார் அடிப்படையிலான முகப் பொருத்தம் 100 சதவீதம் அடையாள சரிபார்ப்பை உறுதி செய்கிறது. மேலும் ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் தானாகச் சரிபார்க்கப்படுகிறது. குறிப்பாக நிறுவனங்களின் தலையீடு இல்லாமல் ஊழியர்கள் தாங்களே UAN ஐ உருவாக்கி செயல்படுத்த முடியும்.

அதேபோல் இந்த புதிய முறை மூலம் ஊழியர்கள் பாஸ்புக், KYC அப்டேட் மற்றும் கோரிக்கை சமர்ப்பிப்பு (claim submission) போன்ற EPFO ​​ ​​ சேவைகளை உடனடியாக அணுகலாம். பின்பு இந்த புதிய முறை ஆனது UAN ஆன்போர்டிங்கில் பொதுவான பிழைகள் மற்றும் தாமதங்களைக் குறைக்கிறது.

Best Mobiles in India

English summary
EPFO introduces Aadhaar-based face authentication for UAN creation and activation: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X