PF ஊழியர்கள் கவனத்திற்கு.. அறிமுகமானது புதிய வசதி.. இனி சிரமம் இருக்காது எல்லாமே ஈசிதான்.. இதோ முழு விவரம்..
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தற்போது இரண்டு புதிய வசதிகளை உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. அதாவது பிஎஃப் பேலன்ஸ் விவரங்களைத் தெரிந்துகொள்ள Passbook Lite (பாஸ்புக் லைட்) எனும் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு வேலை மாறுபவர்களுக்குத் தேவையான வசதியை ஆன்லைனில் பெற முடியும்.
குறிப்பாக இந்த புதிய மாற்றங்கள் பிஎஃப் திட்டத்தை எளிதாக்குகிறது. பின்பு இது வாடிக்கையாளர்களின் குறைகளைக் குறைத்துச் சரியான நிவாரணம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய வசதிகள் குறித்து இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அதாவது இந்த Passbook Lite மூலம் பிஎஃப் பேலன்ஸ்-ஐ உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். பின்பு வேலை மாறும்போது தேவைப்படும் Annexure K என்ற ஆவணத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய முடியும். குறிப்பாக இந்த வசதிகள் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும். பின்பு பிஎஃப் விவரங்களை எளிதாக அணுக உதவும்.
முன்பு பிஎஃப் கணக்கு விவரங்களைப் பார்க்க தனி இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். இனி Passbook Lite மூலம் பிஃஎப் போர்ட்டலில் நேரடியாகப் பார்க்கலாம். அதுவும் ஒரே லாகின் மூலமாக அனைத்து விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Passbook Lite நன்மைகள்
இந்த Passbook Lite வந்ததால் பல இணையதளங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. அதாவது பணம் செலுத்தியது, எடுத்தது மற்றும் இருப்பை (பேலன்ஸ்) Passbook Lite மூலம் எளிதாகப் பார்க்கலாம். குறிப்பாக பழைய இணையதளத்தில் இருந்த சுமை குறைவதால், தாமதம் இருக்காது. முழு விவரம் வேண்டும் என்றால் பழைய பாஸ்புக் இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.
ஒரு உதாரணமாக, ஒரு நபர் தனது புதிய நிறுவனம் பிஎஃப் பணம் செலுத்தியுள்ளதா என பார்க்க விரும்புகிறார். முன்பு அவர் பாஸ்புக் இணையதளத்தில் லாகின் செய்ய வேண்டும். சில சமயங்களில் இணையதளம் வேலை செய்யாததால் தாமதம் ஏறப்படும். ஆனால் Passbook Lite மூலம் ஒரே முறை லாகின் செய்து அனைத்தையும் உடனடியாக சரிபார்க்கலாம். இதனால் அவருக்கு நேரம் மிச்சமாகும்.
அதேபோல் வேலை மாறும்போது பிஎஃப் கணக்கை மாற்றுவது எளிதாகிறது. Form 13 மூலம் பிஎஃப் கணக்கு ஆன்லைனில் மாற்றப்படும். குறிப்பாக பரிமாற்ற சான்றிதழ் (Annexure K) என்பது பழைய பிஎஃப் அலுவலகத்தால் உருவாக்கப்பட்டு புதிய அலுவலகத்திற்கு அனுப்பப்படும். இதுவரை ஊழியர்கள் கேட்டால் மட்டுமே Annexure K கிடைக்கும். ஆனால் இப்போது, Annexure K-வை உறுப்பினர் போர்ட்டலில் இருந்து PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
பிஎஃப் உறுப்பினர்களுக்கு அதிக பயன்கள்
பிஎஃப் மாற்று விண்ணப்பத்தின் நிலையை எளிமையாக ஆன்லைனில் தெரிந்துகொள்ள முடியும். மேலும் புதிய கணக்கில் பிஎஃப் பேலன்ஸ் மற்றும் பணி காலம் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தலாம். பின்பு EPS ஓய்வூதிய கணக்கீடுகளுக்கு நிரந்தரமான டிஜிட்டல் ஆவணம் வைத்திருக்க முடியும். பின்பு பிஎஃப் மாற்றுவதில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்.

உதாரணமாக ஒருவர் சென்னையில் இருந்து பெங்களூருக்கு வேலை மாறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். முன்பு அவர் பிஎஃப் அலுவலகங்களை நம்பியிருக்க வேண்டியிருந்தது. அதுவும் Annexure K-வை கேட்ட பிறகு தான் பார்க்க முடியும். ஆனால் இப்போது அவர் எப்போது வேண்டுமானாலும் லாகின் செய்து Annexure K-வை பதிவிறக்கம் செய்து பிஎஃப் பேலன்ஸ் புதிய கணக்கிற்கு வந்துவிட்டதா என்பதைச் சரிபார்க்க முடியும்.
நாட்டில் உள்ள அனைத்து EPFO உறுப்பினர்களுக்கு இந்த இரண்டு வசதிகளும் அதிக கட்டுப்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மையைத் தரும். அதுவும் Passbook Lite மூலம் உறுப்பினர்கள் தங்கள் பணத்தை எளிதாக கண்காணிக்கலாம். பின்பு Annexure K வசதி பிஎஃப் மாற்றத்தில் உள்ள குழப்பத்தை நீக்கும். இந்த வசதிகள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








