PF ரிட்டர்ன்ஸ்.. EPFO-வின் புதிய காலக்கெடு.. அக்.22 க்குள் யாரெல்லாம் என்ன செய்ய வேண்டும்?
இபிஎப்ஓ (EPFO) என்கிற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organisation) ஆனது பிஎப் (PF) தொடர்பான ஒரு முக்கிய காலக்கெடுவை சற்று நீடிப்பதாக அறிவித்து உள்ளது. அதென்ன காலக்கெடு? அதற்குள் யார் என்ன செய்ய வேண்டும்?
செப்டம்பர் 2025 ஊதிய மாதத்திற்கான இபிஎப் ரிட்டர்ன்ஸ் (EPF returns) அல்லது இசிஆர் (ECR) என்கிற மின்னணு செலான்-கம்-ரிட்டர்னை (Electronic Challan-cum-Return) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளதாக இபிஎப்ஓ அறிவித்துள்ளது.

எம்பிளாயர்கள் வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதிக்குள் இசிஆர்-ஐ தாக்கல் செய்ய வேண்டும். செப்டம்பர் 2025 முதல் பொருந்தும் வகையில் புதுப்பிக்கப்பட்ட இசிஆர் முறையின் புதிய அம்சங்களுக்கு ஏற்ப பல எம்பிளாயர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த நீட்டிப்பு வந்துள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த புதிய செயல்முறை மேம்பட்ட தரவு துல்லியம், தொடர்ச்சியான வருமான சரிபார்ப்பு மற்றும் மேம்பட்ட இணக்க வசதிகளை வழங்குகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இபிஎப்ஓ-வின் மண்டல மற்றும் பிராந்திய அலுவலகங்கள் ஆனது எம்பிளாயர்களுக்கு நேரடி ஆதரவை வழங்கவும், சரியான நேரத்தில் மற்றும் பிழைகள் இல்லாமல் வருமானத்தை தாக்கல் செய்வதை உறுதி செய்யவும் அமர்வுகள் மற்றும் வொர்க் ஷாப்களும் நடத்துகின்றன.
வருங்கால வைப்பு நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் இணக்கத்தை வலுப்படுத்தும் அதே வேளையில், எம்பிளாயர்களுக்கு தடையற்ற டிஜிட்டல் அனுபவத்தை வழங்குவதில்உறுதியாக இருப்பதாகவும் இபிஎப்ஓ கூறியுள்ளது. இந்த சுமூகமான மாற்றத்தை இன்னும் எளிதாக்குவதற்காக, இபிஎப்ஓ ஆனது நாடு முழுவதும் எம்பிளாயர்கள் மற்றும் தொழில் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியான விழிப்புணர்வு திட்டங்களையும் தொடங்கியுள்ளது.
மத்திய மட்டத்தில், இபிஎப்ஓ அதிகாரிகள் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI), பிஎச்டி வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (PHDCCI) மற்றும் இந்திய முதலாளிகள் கூட்டமைப்பு (EFI) உள்ளிட்ட முக்கிய தொழில் அமைப்புகளுடன் சந்திப்புகளை நடத்தினர், புதுப்பிக்கப்பட்ட இசிஆர் அமைப்பின் நடைமுறை சீர்திருத்தங்கள் மற்றும் நன்மைகள் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கபட்டது.
இபிஎப்ஓ தொடர்பான மற்ற சமீபத்திய அப்டேட்களை பொறுத்தவரை, ஊழியர்கள் தங்கள் பிஎப் பணத்தை எடுப்பதற்கான விதிகளில் (PF Claim Rules) 3 முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முதல் மாற்றம் - ப்ரீமெச்யூர் பைனல் செட்டில்மென்ட்டை (Premature final settlement) பெறுவதற்கான காலக்கெடுவானது 2 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது மாற்றம் - ப்ரீமெச்யூர் பென்சன் வித்ட்ராவலுக்கு (Premature pension withdrawal) தேவையான காலக்கெடுவானது 2 மாதங்களிலிருந்து 36 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மாற்றம் - உறுப்பினர்களின் கணக்கில், பங்களிப்புகளில் 25% ஐ உறுப்பினர் எப்போதும் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்பாக (minimum balance) வைத்திருக்க வேண்டும் என்கிற புதிய தேவையையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. வேலையை இழந்த பிறகு முன்கூட்டியே பணத்தை எடுக்க விரும்புவோருக்கு இது பொருந்தாது.
இது உறுப்பினர்கள், இபிஎப்ஓ வழங்கும் அதிக வட்டி விகிதத்தை (தற்போது ஆண்டுக்கு 8.25%) அதிக மதிப்புள்ள ஓய்வூதிய நிதியை குவிப்பதற்கான கூட்டு சலுகைகளுடன் அனுபவிக்க உதவும். மேலும் இது உறுப்பினர்கள் போதுமான ஓய்வூதிய நிதியை பராமரிப்பதை உறுதி செய்யும் என்றும் இபிஎப்ஓ ஒரு அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த முடிவுகள் எல்லாமே - புதுதில்லியில் நடைபெற்ற சென்ட்ரல் போர்ட் ஆப் ட்ரஸ்ட்டீஸ் இபிஎப்-ன் (Central Board of Trustees EPF) 238வது கூட்டத்தில் எடுக்கப்பட்டன. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் ஆன மன்சுக் மண்டவியா தலைமையில் இது நடைபெற்ற இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட புதிய முடிவுகள் ஆனது ஒரு செய்திக்குறிப்பின் வழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








