புது PF ரூல்ஸ்.. உடனே UAN, பேங்க் அக்கவுண்ட், Aadhaar-ஐ எடுங்க.. நவ.30 குள்ள Activate செய்யணும்.. இல்லனா?
இபிஎஃப்ஓ (EPFO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organization) தொடர்பான ஒரு முக்கிய கெடு, வருகிற நவம்பர் 30 ஆம் தேதியோடு முடிவடைகிறது. அது என்ன கெடு? நவம்பர் 30 ஆம் தேதிக்குள் என்ன செய்ய வேண்டும்? ஏன் செய்ய வேண்டும்? செய்யவில்லை என்றால் என்னவாகும்? இதோ விவரங்கள்:
இபிஎஃப்ஓ மூலம் நிர்வகிக்கப்படும் இஎல்ஐ (ELI) என்கிற எம்ப்ளாய்மென்ட் லிங்க்டு இன்சென்டிவ் (Employment Linked Incentive) திட்டத்தின் பலனை பெற விரும்பும் பணியாளர்கள், 2 கட்டயாமான விஷயங்களை நவம்பர் 30 ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும். முதலாவது - தங்களுடைய யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை (Universal Account Number - UAN), இபிஎஃப்ஓ போர்டல் வழியாக ஆக்டிவேட் (Activate) செய்ய வேண்டும்.

இரண்டாவது - தங்களுடைய பேங்க் அக்கவுண்ட் உடன் ஆதார் அட்டையை சீடிங் (Seeding of Aadhaar to bank account) செய்ய வேண்டும். இவ்விரு செயல்களுமே எம்ப்ளாய்மென்ட் லிங்க்டு இன்சென்டிவ் திட்டத்தின் பலன்களை பெற விரும்பும் பணியார்களுக்கான கட்டாயமான செயல்முறைகள் (Madatory Process) ஆகும். இதை செய்வதற்கான கெடு 2024 நவம்பர் 30 ஆம் தேதியாகும்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024 பட்ஜெட்டின் போது இந்த புதிய திட்டத்தை அறிவித்தார். இதன்கீழ் மூன்று வகையான இஎல்ஐ திட்டங்கள் (ஏ, பி மற்றும் சி) உள்ளன. இதன்கீழ் உள்ள பலன்களாது தகுதியான எம்ப்ளாய்களுக்கு, டைரக்ட் பெனிஃபிட் டிரான்ஸ்பர் (Direct Benefit Transfer - DBT) மூலம் வழங்கப்படும் என்பதால் நவ.30-க்குள் யுஏஎன் ஆக்டிவேஷன் மற்றும் பேங்க் அக்கவுண்ட் உடன் ஆதார் சீடிங்கை உறுதிசெய்ய வேண்டும்.
இஎல்ஐ நன்மைகளை பெற உங்கள் யுஏஎன்-ஐ ஆக்டிவேட் செய்வது எப்படி? இபிஎஃப்ஓ போர்ட்டலில் யுஏஎன்-ஐ எவ்வாறு ஆக்டிவேட் செய்வது (How to activate UAN on the EPFO portal) என்பது குறித்த படிப்படியான வழிகாட்டி இங்கே:
படி 1: இபிஎஃப்ஓ மெம்பர் போர்ட்டலுக்கு (EPFO member portal) செல்லவும். https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ க்குள் செல்லவும்.
படி 2: இம்பார்டென்ட் லிங்க்ஸ் (Important Links) பிரிவின் கீழ் உள்ள ஆக்டிவேட் யுஏஎன் (Activate UAN) என்கிற இணைப்பை கிளிக் செய்யவும்.
படி 3: இப்போது ஒரு புதிய வலைப்பக்கம் (New Webpage) திறக்கும், இங்கு உங்கள் யுஏஎன் நம்பர் (UAN number), ஆதார் நம்பர் (Aadhaar number), பிறந்த தேதி (Date of birth) மற்றும் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை (Aadhaar linked mobile number) உள்ளிட வேண்டும்.
இபிஎஃப்ஓ வின் முழு அளவிலான டிஜிட்டல் சேவைகளை (EPFO's digital services) அணுக, ஊழியர்கள் தங்கள் மொபைல் நம்பரை ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். கேட்கப்பட்ட விவரங்களை உள்ளிட்ட பிறகு, ஆதார் ஓடிபி சரிபார்ப்பை (Aadhaar OTP verification) ஏற்கவும்.
படி 4: ஆதார் உடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணில் ஒடிபி-ஐ பெற கெட் ஆத்தரைசேஷன் பின் (Get Authorization PIN) என்பதைக் கிளிக் செய்யவும். ஆக்டிவேஷனை முடிக்க உங்களுக்கு கிடைத்த ஒடிபி-ஐ உள்ளிடவும். கடைசியாக, வெற்றிகரமாக ஆக்டிவேஷன் செய்யப்படவுடன் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு பாஸ்வேர்ட் (Password) அனுப்பப்படும்!
மேலும் இபிஎஃப்ஓ-வின் சமீபத்திய சுற்றறிக்கையானது, இபிஎஃப்ஓ-வின் ஒவ்வொரு சந்தாதாரரும் ஆதார் உடன் இணைக்கப்பட்ட யுஎன்ஏ-ஐ வைத்திருக்க வேண்டும், இது மெம்பர் போர்ட்டலில் லாக்-இன்-ஐ உருவாக்குவதன் மூலம் செயல்படுத்தப்பட வேண்டும். இதன்கீழ் ஒரே விண்டோவின் கீழ் பல வசதிகளை பெற முடியும். இத்தகைய வசதிகளில் பிஎப் பாஸ்புக்குகளைப் பார்ப்பது மற்றும் பதிவிறக்கம் செய்வது, வித்ட்ராவல்களுக்கானகு ஆன்லைன் க்ளெய்ம்களை சப்மிட் செய்வது ஆகியவைலம் அடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








