Home
News

பேங்க் அக்கவுண்ட்.. 5,000 ரூபாயோ.. 10,000 ரூபாயோ.. 3 நாட்களில் EPFO கொடுக்கும் பணம்.. எப்படி பெறுவது?

இபிஎப்ஓ (EPFO) என்கிழ ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees' Provident Fund Organisation) ஆனது முன்பணத் திரும்பப் பெறும் கோரிக்கைகளை (Advance Withdrawal Claims) 3 நாட்களில் முடித்து வைக்கிறது. பல இபிஎப்ஓ மெம்பர்களுக்கு ரூ,5,000 ஆக இருந்தாலும், ரூ.10,000 ஆக இருந்தாலும் பணம் வந்துவிடுகிறது.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் இருந்து அட்வான்ஸ் (முன்பணம்) முறையில் பணத்தை திரும்ப பெற கோரிக்கை வைக்கும் ஊழியர்களுக்கு 3 நாட்களில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பணத்தை செட்டில்மெண்ட் செய்துவிடுகிறது. 71 சதவீத ஊழியர்களுக்கு 3 நாட்களில் பணம் கிரெடிட் செய்யப்பட்டு உள்ளது.

பேங்க் அக்கவுண்ட்.. 5,000 ரூபாயோ.. 10,000 ரூபாயோ.. 3 நாட்களில் EPFO!

கேஒய்சி விவரங்கள் சரியாக இருக்கும் ஊழியர்களுக்கும், சரியான பிஎப் படிவத்தை சமர்ப்பிக்கும் ஊழியர்களுக்கும் இப்படி 3 நாட்களில் பணம் கிரெடிட் செய்யப்படும். தானியங்கி செயலாக்க அமைப்பு (Automated Processing System) வழியாக முன்பண கோரிக்கைகள் செயல்படுத்தப்படுகிறது. ஆகவே, விவரங்கள் மற்றும் கோரிக்கைகள் சரியாக இருந்தால் போதும் பணத்தை பெறலாம்.

புதிய இபிஎப்ஓ மெம்பர்களாக இருந்தால், யுஏஎன் ஆக்டிவேட் செய்திருக்க வேண்டும். ஆதார் மற்றும் பேங்க் அக்கவுண்ட் விவரங்களை கொடுத்து வெரிபிகேஷன் செய்திருக்க வேண்டும். இந்த வெரிபிகேஷனுக்கே 7 முதல் 20 நாட்கள் வரையில் பிடிக்கும். இதை முடித்த பிறகே முன்பண கோரிக்கையை வைக்க முடியும்.

அப்போதுதான், 3 நாட்களில் பணத்தை பேங்க் அக்கவுண்ட் வழியாக பெற்று கொள்ள முடியும். இதற்கு ஆதார் எண் (Aadhaar Number), அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் கட்டாயமாக இருக்க வேண்டும். பேங்க் அக்கவுண்ட்டிலும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை கொடுத்திருக்க வேண்டும். இது முழுக்க ஆதார் மற்றும் மொபைல் நம்பர் அடிப்படையில் முடிக்கப்படுகிறது.

பிஎப் பணத்தை ஆன்லைனில் திரும்ப பெறுவது எப்படி? யுஏஎன் மெம்மர் போர்டல் (UAN Member Portal) சென்று லாகின் செய்ய வேண்டும். யுஏஎன் நம்பர் மற்றும் பாஸ்வேர்ட் இருக்க வேண்டும். ஆன்லைன் சர்வீசஸ் (Online Services) விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். கோரிக்கை (படிவம்-31, 19, 10சி & 10டி) இடம்பெற்றிருக்கும்.

இதில் தேவைக்கு ஏற்ப தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். பிறகு பேங்க் அக்கவுண்ட் விவரங்களை கொடுக்க வேண்டும். இது இபிஎப்ஓ மெம்மர் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்ட பேங்க் அக்கவுண்ட்டின் விவரங்களாக இருக்க வேண்டும். பேங்க் அக்கவுண்ட் நம்பர் (Bank Account Number) மற்றும் ஐஎப்எஸ்சி கோட் (IFSC Code) இருக்கும்.

இதை கொடுக்க பிறகு ஆன்லைன் திரும்ப பெறுதலை தொடரவும் (Proceed for Online Claim) கொடுக்க வேண்டும். இப்போது, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு (Aadhaar-linked Mobile Number) ஓடிபி அனுப்பப்படும். இதை கொடுத்தால் போதும், திரும்ப பெறுதல் கோரிக்கை கொடுக்கப்பட்டுவிடும்.

பிஎப் கிளைம் ஸ்டேட்டஸ் (PF Claim Status) வழியாக இந்த கோரிக்கையை டிராக் செய்து கொள்ளலாம். இதற்கு முன்னதாக கேஒய்சி விவரங்களை சரிபார்க்க வேண்டும். ஆதார் மற்றும் பேங்க் அக்கவுண்ட் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளதா மற்றும் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்து கொள்ள வேண்டும். இப்போது படிவங்களுக்கு வருவோம்.

வருங்கால வைப்பு நிதி முன்பணம் (படிவம் 31), பணிபுரிந்து கொண்டிருக்க வேண்டும். தேவைக்கு பணத்தை எடுக்க வேண்டும். பிஎப் திரும்பப் பெறுதல் மட்டும் (படிவம் 19), பணியை விட்டு விலகியிருக்க வேண்டும். பென்ஷன் திரும்ப பெறுதல் மட்டும் (படிவம் 10சி), பணியை விட்டு விலகியிருந்தால், மட்டும் இந்த படிவத்தை கொடுக்க வேண்டும்.

மேலும், பிஎப் பணத்தை ஆன்லைனில் திரும்ப பெறுவதற்கு முன்பாக யுஏஎன் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆதாருடன் பேங்க் அக்கவுண்ட் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த பேங்க் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருடன் ஆதாரும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த விவரங்களை கேஒய்சி வெரிபிகேஷன் செய்திருக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
EPFO Clears 71 Percent Advance Withdrawal Claims From PF Members in 3 Days How to Proceed Claim
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X