UPI செயலிகள் மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி.. முக்கிய அறிவிப்பு வெளியானது.. இதோ முழு விவரம்..
இந்தியாவில் யுபிஐ (UPI) செயலிகள் வாயிலாக பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதியை வரும் டிசம்பர் மாதத்திற்குள் அறிமுகம் செய்ய சோதனை துவங்கியது. இந்த புதிய வசதி பிஎஃப் (PF) உறுப்பினர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில், அவசர தேவைகளுக்காக குறிப்பிட்ட தொகையை மட்டும் வைத்துக்கொண்டு, மீதமுள்ள பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது. தற்போது, பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை வங்கி மூலம் பெறும் நடைமுறை உள்ளது.

இந்த நிலையில் EPFO சந்தாதாரர்கள் தங்களது பிஎஃப் பணத்தை UPI செயலி மூலம் எளிதாகப் பெறும் வசதியை அறிமுகப்படுத்துவதற்கான முதல்கட்ட சோதனை தொடங்கியுள்ளது. இந்த வசதி நடைமுறைக்கு வந்தால், அவசர தேவைகளுக்காக பிஎஃப் பணத்தை யுபிஐ செயலிகள் மூலம் விரைவாகப் பெற முடியும்.
தற்போது வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், பிஎஃப் பணத்தைப் பெற ஆன்லைன் போர்ட்டல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துக்கு ஒப்புதல் கிடைத்த பிறகே, பணம் அவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படுகிறது. இதனால், பிஎஃப் பணம் கிடைக்க சில நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்த தாமதத்தைத் தவிர்க்கும் வகையில், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் தங்களது பிஎஃப் தொகையை UPI மூலம் நேரடியாக வங்கி கணக்கில் பெற்றுக்கொள்ளும் வசதியை தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான நடவடிக்கையாக, UPI தளம் மூலம் பிஎஃப் பணத்தை நேரடியாகப் பெறும் வசதிக்கான முதற்கட்ட சோதனை தற்போது தொடங்கியுள்ளது.
அதுவும் வங்கிகளுடன் இணைந்து இந்த முதற்கட்ட சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனை வெற்றிகரமாக முடிந்தால், டிசம்பர் மாதத்துக்குள் UPI மூலம் பிஎஃப் பணத்தைப் பெறும் வசதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய வசதி நடைமுறைக்கு வந்தால், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் தங்களது கணக்கில் இருந்து பெறத் தகுதியான தொகையை, வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட UPI மூலம் நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும். பணப் பரிமாற்றத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய, UPI PIN பயன்படுத்தும் முறையும் இதில் இடம்பெறும்.

சந்தாதாரர்களின் ஓய்வுகால சேமிப்பு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதால், பிஎஃப் கணக்கில் உள்ள முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் எடுக்க முடியாது. அதற்குப் பதிலாக, உறுப்பினர் பெறத் தகுதியான தொகையில் அதிகபட்சம் 75 சதவீதம் வரை மட்டுமே UPI மூலம் உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
UPI மூலம் பிஎஃப் பணத்தைப் பெறும் வசதி நடைமுறைக்கு வந்தால், அவசர தேவைகளுக்காக பணம் தேவைப்படும் சந்தாதாரர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆன்லைனில் விண்ணப்பித்து, பணம் வங்கி கணக்கில் வருவதற்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையும் குறையும். அதே நேரத்தில், ஓய்வுகால சேமிப்பு பாதிக்கப்படாமல் இருக்க பணம் எடுப்பதற்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய UPI வசதி பயன்பாட்டுக்கு வந்தால், பிஎஃப் பணத்தைப் பெறும் நடைமுறை மேலும் எளிமையாகவும் விரைவாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
