அடிதூள்.. PF அட்வான்ஸ் வாங்க விருப்பமா? இனி 3 நாளில் பணம் கிடைக்கும்.. எப்படி தெரியுமா?
EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டமாக உள்ளது. குறிப்பாக ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தனித்தனி EPF கணக்கு வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த EPF கணக்கில் ஒவ்வொரு மாதமும் வரவு வைக்கப்படுகிறது.
அதேபோல் ஊழியர்கள் மற்றும் முதலாளிகளும் குறிப்பிட்ட சதவீதம் ஊழியர்களின் ஊதியத்திலிருந்து இந்த இபிஎப் அக்கவுண்ட்டில் செலுத்துகின்றனர். இந்த நிதி சில காலங்களில் பெரும் தொகையாக வளர்ச்சி அடைகிறது. இந்நிலையில் விண்ணப்பித்தவர்களுக்கு பி.எப் அட்வான்ஸ் இனி 3 நாட்களில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதாவது கல்வி, திருமணம், வீடு கட்டுதல் ஆகியவற்றிக்காக பி.எப் தொகையில் அட்வான்ஸ் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முறை தானியங்கி நடைமுறையாக (auto claim settlement) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்ணப்பித்த 3 நாளில் PF பணம் கிடைக்கும்.
hindustantimes வெளியிட்ட தகவலின்படி, சமீபத்தில் அனிருத் பிரசாத் (Anirudh Prasad) சிகிச்சை செலவுக்காக கிளைம் (claim) செய்திருந்த தொகை 3 நாட்களுக்குள் அவருக்குக் கிடைத்தது. அதாவது அனிருத் பிராசத் கடந்த மே 9-ம் தேதி அன்று மருத்துவச் சிகிச்சைக்காக EPFO -இல் விண்ணப்பித்து, பாரா 68J இன் கீழ் முன்பணம் கோரினார்.

அதன்பின்னர் கடந்த மே 11-ம் தேதி அவரது அட்வான்சுக்கான கிளைம் செட்டில் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மூன்றே நாட்களில் இபிஎஃப்ஓ அனிருத் பிரசாத்துக்கு முன்பணமாக ரூ.92,143 செலுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற பல சமயங்களில தனது கிளைம்கள் உடனடியாக தீர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
குறிப்பாக EPFO அமைப்பு அதன் கோடிக்கணக்கான உறுப்பினர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் கல்வி, திருமணம், வீடு கட்டுதல் போன்ற அட்வான்ஸ் கிளைம்களை செட்டில் செய்வதற்கான தானியங்கி முறையை (Auto Mode Settlement) அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மனித தலையீடு இல்லாமல் IT அமைப்பு மூலம் கிளைம்கள் அனைத்தும் தானாகவே தீர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி பல்வேறு மக்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.
அதேபோல் நோய் சிகிச்சைக்காக கோரப்படும் பி.எப் அட்வான்ஸ்-க்கு விரைவில் செட்டில் செய்வதற்கான ஆட்டோ மோட் வசதி கடந்த ஏப்ரல் 2020 இல் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சரி இப்போது பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது என்பதை எளிதாகத் தெரிந்துகொள்வதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம். அதாவது உங்களுடைய UAN எண் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து மிஸ்டு கால் செய்வதன் மூலம் உங்களது இபிஎப் பேலன்ஸை தெரிந்துகொள்ள முடியும். அதாவது 9966044425 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள். குறிப்பாக மிஸ்டு கார்டு கொடுத்த சில நிமிடங்களில் எஸ்.எம்.எஸ் வந்துவிடும், அதில் பிஎப் பேலன்ஸ் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

அதேபோல் உங்களிடம் UAN எண் இணைக்கப்பட்ட மொபைல் எண் இருக்கிறது என்றால், அதில் இருந்து எஸ்எஸ்எம் அனுப்புவதன் மூலம் இபிஎப் பேலன்ஸ் தெரிந்துகொள் முடியும். அதாவது உங்களது போனில் இருந்து EPFOHO UAN ENG என்ற வடிவில் 7738299899 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிய உடன் பேலன்ஸ் விவரங்கள் எளிமையாகத் தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர www.epfindia.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று அங்கு யூஏஎன் (UAN) எண் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். அதன்பின்னர் நீங்கள் பிஎப் கணக்கின் மீது கிளிக் செய்து, அதில் View PF Passbook என்பதை கிளிக் செய்தால் உங்களது பேலன்ஸ் எளிதாகத் தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








