PF உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்.. ஆட்டோ கிளைம் செட்டில்மெண்ட்.. வரம்பு உயர்வு.. இதோ முழு விவரம்..
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அவ்வப்போது புதிய திட்டங்களைக் கொண்டு வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்த அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் பிஎஃப் ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அந்த வகையில் இப்போது EPFO அமைப்பு ஆட்டோ கிளைம் செட்டில்மெண்ட் (Auto Claim Settlement) வரம்பில் ஒரு முக்கிய மாற்றத்தைச் செய்துள்ளது.
அதாவது பிஎஃப் ஊழியர்களுக்கு பெரும் நிவாரணத்தை அளிக்கும் வகையில் உள்ளது இந்த மாற்றம். முன்பு ரூ.1 லட்சமாக இருந்த ஆட்டோ கிளைம் செட்டில்மெண்ட் வரம்பு இப்போது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. குறிப்பாக இந்த தகவலை மத்திய மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்துள்ளார்.

அதுவும் 2025 மார்ச் மாதம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழுவின் நிர்வாக குழு ரூ.5 லட்சம் வரை ஆட்டோ கிளைம் செட்டில்மெண்ட் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. எனவே இனி பிஎஃப் உறுப்பினர்கள் ரூ. 5 லட்சம் வரை பிஎஃப் அட்வான்ஸ் தொகையை ஆட்டோ கிளைம் செட்டில்மெண்ட் முறையில் பெறலாம்.
முன்னதாக பிஎஃப் உறுப்பினர்கள் ரூ.1 லட்சத்திற்கு மேல் எடுக்க வேண்டும் என்றால் நேரடி சரிபார்ப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலைமை இருந்தது. ஆனால் தற்போது இந்த செயல்முறை மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. பின்பு இது விரைவாகவும் டிஜிட்டல் முறையிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக EPFO அமைப்பின் இந்த புதிய அறிவிப்பின் மூலம் பிஎஃப் (PF) ஊழியர்கள் தங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் உடனடியாக பிஎஃப் பணத்தை எடுக்க முடியும். அதுவும் அவசர சிகிச்சை அல்லது பிற அவசர தேவைகளுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதேபோல் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பிரச்சனை வந்த சமயத்தில் தான் அட்வான்ஸ் கிளைம் ஆட்டோ செட்டில்மெண்ட் வசதியைத் தொடங்கியது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு. அதுவும் சில கடினமான நேரங்களில் பிஎஃப் ஊழியர்கள் தங்களுக்குத் தேவையான பணத்தை உடனே எடுத்துப் பயன்படுத்தும் வகையில் இந்த வசதி தொடங்கப்பட்டது. அந்த கொரோனா சமயத்தில் அதிக பிஎஃப் ஊழியர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டனர்.
இந்த அட்வான்ஸ் கிளைம் ஆட்டோ செட்டில்மெண்ட் வசதி நிறைய ஊழியர்களுக்குப் பயனளித்ததால் தற்போது இது பரவலாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டது. அதாவது மூன்றாம் தரப்பு முகவரிடமிருந்து சேவைகளைப் பெற வேண்டாம் எனவும், பிஎஃப் கணக்குகளும் அதில் உள்ள தகவல்களும் ரகசியமாக இருக்க வேண்டும் எனவும் கூறி இருந்தது.

அதாவது பிஎஃப் சேவையை அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளம் மூலம் மட்டுமே பெற வேண்டும். அப்படி செய்தால் தகவல் கசிவு அபாயத்தைத் தவிர்க்கலாம் எனவும், சேவையின் வெளிப்படைத்தன்மையைப் பராமரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. ஒருபோதும் மூன்றாம் தரப்பு முகவரிடமிருந்து சேவைகளைப் பெற வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள ரூ.5 லட்சம் வரை ஆட்டோ கிளைம் செட்டில்மெண்டை அனுமதிப்பதன் மூலம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் சந்தாதாரர்களுக்கு ஒரு பெரிய நிவாரணம் வழங்கியுள்ளது. குறிப்பாக இந்த வசதி பிஎஃப் உறுப்பினர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications