உற்சாகத்தில் EPFO உறுப்பினர்கள்.. ஏடிஎம் மூலம் PF பணம்.. மொபைல் ஆப்.. முக்கியத் தகவலை வெளியிட்ட அமைச்சர்..
EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்த உள்ளது. அதாவது பாதுகாப்பு விஷயம், ஏடிஎம் கார்டுகள் மூலம் பணம் எடுக்கும் வசதி, பி.எப் கணக்கில் கூடுதலாகப் பணத்தைச் சேமிக்கும் வசதி எனப் பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி உள்ளது. இந்நிலையில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஒரு முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அதாவது EPFO அமைப்பால் உருவாக்கப்பட்ட திட்டம் தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம். குறிப்பாக இந்த திட்டத்திற்கு பணிபுரியும் போது தொழிலாளர் மற்றும் நிறுவனங்கள் இணைந்து பங்களிப்பு செய்ய வேண்டும். பின்பு அதற்கு வட்டி வருமானமும் வழங்கப்படும். ஒருவேளை வேலையிழப்பு அல்லது வேறு ஏதாவது பிரச்சனைகள் வந்து பணத்தட்டுப்பாடு ஏற்பட்டால் இந்த நிதியை எடுத்து சிரமமின்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் முன்பு பி.எஃப் தொகையை எடுக்கும் செயல்முறை சிக்கலானதாக இருந்தது. இந்த சிக்கலை நீக்க தான் அரசு ஒரு புதிய திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது ஏடிஎம் கார்டுகள் மூலம் பணம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அதுவும் இந்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதம் EPFO உறுப்பினர்களுக்கு மொபைல் அப்ளிகேஷன் மற்றும் டெபிட் கார்டு வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக EPFO உறுப்பினர்களுக்கு ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டாலும், தங்கள் முழு பங்களிப்புத் தொகையைத் திரும்பப் பெற முடியாது எனக் கூறப்படுகிறது. அதாவது பணம் திரும்ப பெறுவதற்கான வரம்பு EPFO அமைப்பால் நிர்ணயிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல் ஏற்கனவே வெளியான தகவலின்படி, பி.எப் கணக்கில் மாத ஊதியத்தில் தொழிலாளர் சார்பில் 12 சதவீதம் பணம் செலுத்தப்படுகிறது. ஆனால் இந்த வரம்பை மாற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. அதாவது இந்த ஆண்டு வரும் புதிய விதிகளில் ஊழியர்கள் 12%க்கும் அதிகமான தொகையை PF-க்கு அளிக்க முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஓய்வுக்குப் பிறகு பெரிய ஓய்வூதிய நிதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் EPFO அதன் ஐடி (IT) உள்கட்டமைப்பை மேம்படுத்தப் போகிறது. அதாவது EPFO ஐடி சிஸ்டம் அப்கிரேடு (EPFO IT system upgrade) செய்யப்பட உள்ளது. இதன் மூலம் பி.எஃப் தொகையை க்ளெய்ம் செய்யும் பயனாளிகளுக்கு தங்கள் வைப்புத்தொகையைக் குறைந்தபட்ச மனித தலையீட்டுடன் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும். அதேபோல் ஐடி மேம்படுத்தல் ஜூன் 2025க்குள் முடிவடையும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதுவும் EPFO IT சிஸ்டம் அப்கிரேடு செய்வதன் முக்கிய நன்மைகள் என்னவென்றால், பி.எஃப் பயனர்களின் க்ளெய்ம்கள் விரைவாக செட்டில் செய்யப்படும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும், மோசடி வழக்குகள் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் EPFO ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு மிகப் பெரிய மாற்றம் வரப் போகிறது. அதாவது புதிய விதியின் கீழ், ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத் தொகையை நாட்டில் எந்த வங்கியிலிருந்தும், எந்த வங்கிக் கிளையிலிருந்து எடுக்க முடியும். இதற்காக அவர்களுக்குக் கூடுதல் சரிபார்ப்பு தேவை இருக்காது. குறிப்பாக எந்த வங்கியிலிருந்தும் ஓய்வூதியத்தைப் பெறலாம் என்பதால் காத்திருப்பு நேரம் கணிசமாகக் குறையும்.


Click it and Unblock the Notifications








