PF பணம் எடுக்க இனி சிக்கல் இருக்காது.. புதிய மாற்றத்தை கொண்டுவந்த EPFO அமைப்பு..
இபிஎஃப்ஓ (EPFO) என அழைக்கப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organization) தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்த அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.
செக் புத்தகம் மற்றும் பாஸ்புக்
இந்நிலையில் EPF பணம் எடுப்பதில் தற்போது சில மாற்றங்கள் வந்துள்ளன. அதாவது முன்னர் பிஎப் பணத்தை எடுக்க விண்ணப்பிக்கும் போது உங்கள் வங்கி கணக்கு சரியானதா என உறுதிப்படுத்த சில ஆவணங்கள் தேவைப்பட்டன. ஆனால் இனிமேல் அந்த ஆவணங்கள் தேவைப்படாது. இது குறித்த தகவல்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அதாவது பிஎப் பணத்தைப் பெறுவதற்கான இணையதள கோரிக்கைகளைத் தாக்கல் செய்யும் போது உங்கள் பெயர் அச்சிடப்பட்ட செக் புத்தகம் (காசோலை) அல்லது வங்கி அதிகாரி கையெழுத்திட்ட பாஸ்புக் தேவைப்படும். தற்போது அரசு இந்த இரண்டு நடைமுறைகளையும் நீக்கியுள்ளது. குறிப்பாக கடந்த 2024-ம் ஆண்டு மே 28-ம் தேதியில் சோதனை திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 1.7கோடி இபிஎப் உறுப்பினர்கள் பயன்பெற்றுள்ளனர் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
வெற்றிகரமான சோதனை முயற்சியைத் தொடர்ந்து, தற்போது இபிஎஃப்ஓ இந்த தளர்வை அனைத்து உறுப்பினர்களுக்கும் நீட்டித்துள்ளது. குறிப்பாக இது சுமார் 6 கோடி உறுப்பினர்களுக்கு உடனடி நன்மை அளிக்கிறது. பின்பு குறைந்த தரமான அல்லது வாசிக்க முடியாத பதிவேற்றங்களால் ஏற்படும் கோரிக்கை நிராகரிப்புகளைத் தவிர்க்கிறது.
அதாவது மோசமான அல்லது படிக்க முடியாத பதிவேற்றங்கள் மூலமாக உரிமைகோரல் நிராகரிக்கப்புக்கான சாத்தியக்கூறுகள் வெகுவாக குறையும் என்று கூறப்படுகிறது.
ஆட்டோ செட்டில்மென்ட்
மேலும் சமீபத்தில் வெளியான தகவலின்படி, பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பை (auto settlement limit) ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக நிர்வாக குழுவால் இந்த நடவடிக்கை அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், மத்திய அறங்காவலர் குழுவிலிருந்து இதற்கு ஒப்புதல் கிடைக்க வேண்டும். அதன்பின்பு தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்.
EPFO மூலம் பிஎப் (PF) பணத்தைப் பெறுவதற்கான விதிகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. எனவே இதன் மூலம் முன்பணம் பெறுவதற்கான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.1 லட்சமாக இருந்த வரம்பு இப்போது ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முன்மொழிவுக்குத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் சுமிதா தாவ்ரா ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த மார்ச் 28-ம் தேதி அன்று ஸ்ரீநகரில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தியும் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆனாலும் இந்த பரிந்துரை CBT-யின் ஒப்புதலுக்குச் செல்ல வேண்டும். அங்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதும், EPFO உறுப்பினர்கள் ஆட்டோ செட்டில்மென்ட் ஆஃப் தி அட்வான்ஸ்டு க்ளெய்ம் (ASAC) மூலம் ரூ.5 லட்சம் வரையிலான PF நிதியைப் பெறத் தகுதி பெறுவார்கள்.
ஏப்ரல் 2020-ல் ஆட்டோ க்ளைம் செட்டில்மென்ட்டை அறிமுகம் செய்தது EPFO அமைப்பு. முதலில் ரூ.50,000 வரை மட்டுமே இதன் மூலம் பெறமுடியும் என்ற நிலை இருந்தது. அதன்பின்பு இந்த வரம்பு 2024-ல் ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. அதுவும் முன்னதாக நோய்வாய்ப்பட்டாலோ அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலோ மட்டுமே பிஎஃப் பணத்தைப் பெறமுடியும். ஆனால் தற்போது கல்வி, திருமணம், வீட்டுவசதி போன்ற நோக்கங்களுக்காக முன்பணம் பெறும் வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
source 1


Click it and Unblock the Notifications