ஒவ்வொரு PF உறுப்பினர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய 7 முக்கிய விஷயங்கள்.. EPFO வெளியிட்ட அப்டேட்..
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தொடர்ந்து பல புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்த அமைப்பு உறுப்பினர்களின் வசதிக்காக இணையதளத்தை அப்டேட் செய்துள்ளது. ஆகவே இனி EPFO சந்தாதாரர்கள் வருங்கால வைப்பு நிதி (PF) எடுப்பது, UAN-ஐ செயல்படுத்துவது அல்லது KYC-ஐப் புதுப்பிப்பது போன்ற சில முக்கிய பணிகளுக்காக அலுவலகங்களுக்குச் செல்லவோ அல்லது தங்கள் முதலாளிகளைச் சார்ந்திருக்கவோ தேவையில்லை.
அதாவது மேம்படுத்தப்பட்ட இணையதளத்தில் குறை தீர்க்கும் செயல்முறை மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், பல சேவைகளும் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளன. தற்போது ஆன்லைனில் என்னென்ன EPFO சேவைகள் கிடைக்கின்றன என்பதை இப்போது பார்க்கலாம்.

1.யுஏஎன் ஆக்டிவேஷன்(UAN Activation): உறுப்பினர்கள் உமாங் செயலி மூலம் ஆதார் அடிப்படையிலான முக அங்கீகாரத்தின் மூலம் தங்களின் புதிய யுஏஎன்-ஐ உருவாக்கி செயல்படுத்தலாம். குறிப்பாக இதற்கு ஆதார் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் தேவைப்படும்.
2. ஆன்லைன் மூலம் பிஎஃப் பணம் எடுத்தல் (Online PF withdrawal): அதாவது உடல்நலக்குறைவு, கல்வி, உடல்நலக்குறைவு, திருமணம் அல்லது வீடு வாங்குதல் போன்ற காரணங்களுக்காக பிஎஃப் முன்பணம் மற்றும் இறுதி பிஎஃப் தொகை கோரிக்கைகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக இதற்கு செயல்பாட்டில் உள்ள யுஏஎன் (UAN) மற்றும் முழுமையான கேஒய்சி (KYC) ஆகியவை கட்டாயமாகும்.
3.இ-நாமினேஷன் வசதி ( E-Nomination Facility): இந்த இ-நாமினேஷன் வசதி என்னவென்றால், PF உறுப்பினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதியப் பலன்களுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களாக (நாமினிகளாக) சேர்க்கலாம். குறிப்பாக இதன் மூலம் எதிர்பாராதவிதமாக ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், பலன்களைப் பெறுவதில் குடும்பத்திற்கு எந்தச் சிக்கலும் ஏற்படாது.
4.KYC மற்றும் வங்கி விவரங்களைப் புதுப்பித்தல்: உங்களது யுஏஎன் (UAN) உடன் ஆதார், பான் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை எளிதாக இணைக்கவும் அல்லது புதுப்பிக்கவும் முடியும்.
5. பிஎஃப் டிரான்ஸ்பர் சர்வீஸ் (PF Transfer Service): நீங்கள் புதிய வேலையில் சேரும்போது, பிஎஃப் தொகை மற்றும் சேவைக் குறிப்புகளைப் (service records) பழைய நிறுவனத்திலிருந்து புதிய நிறுவனத்திற்கு ஆன்லைனில் மாற்றிக்கொள்ளலாம்.
6.இ-பாஸ்புக் டவுன்லோடு ( E-Passbook Download): பணியாளர் மற்றும் நிறுவனத்தின் பங்களிப்புகள், பெறப்பட்ட வட்டி மற்றும் பரிவர்த்தனை வரலாறு (transaction history) உள்ளிட்ட PF கணக்கு விவரங்களை ஆன்லைனில் பார்த்து, இ-பாஸ்புக்கை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
7.மரண இழப்பீடுகள் (Death Claims): உறுப்பினர் இறந்துவிட்டால், தகுதியுடைய நாமினிகள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் PF, ஓய்வூதியம் மற்றும் காப்பீடு (EDLI) தொடர்பான பலன்களுக்கான கோரிக்கைகளை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

EPFO சேவைகளை எளிதாகப் பயன்படுத்த, உங்கள் ஆதாருடன் மொபைல் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், UAN-ல் உள்ள பெயர், பிறந்த தேதி, பாலினம் போன்ற KYC விவரங்கள் ஆதார் தகவல்களுடன் சரியாகப் பொருந்த வேண்டும். வேலையை விட்டு விலகிய பிறகு, சரியான பணிவிலகல் தேதியையும் இணையதளத்தில் புதுப்பிக்க வேண்டும்.
உங்கள் KYC தகவல்களை அவ்வப்போது சரிபார்த்து புதுப்பிப்பதுடன், இ-நாமினேஷனையும் பூர்த்தி செய்து வைத்திருப்பது முக்கியம். இதன் மூலம் PF பணத்தைப் பெறுதல் அல்லது வேறு கணக்கிற்கு மாற்றுதல் போன்ற செயல்களில் தேவையற்ற தாமதங்களைத் தவிர்க்கலாம். எனவே, உங்கள் UAN கணக்கில் உள்நுழைந்து அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை இன்றே சரிபார்க்கவும்.


Click it and Unblock the Notifications