EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மார்ச் 15 வரை கெடு.. PF கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த வேலையை உடனே முடிங்க..
இபிஎஃப்ஓ (EPFO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organization) தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறது. குறிப்பாக இந்த அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு வசதியும் பிஎஃப் பி.எப் (PF) பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முக்கிய அறிவிப்பு:
இந்நிலையில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது உலகளாவிய கணக்கு எண்ணை (UAN) செயல்படுத்துவதற்கும் வங்கி கணக்குகளை ஆதார் உடன் இணைப்பதற்கும் காலக்கெடுவை மீண்டும் நீட்டித்துள்ளது EPFO அமைப்பு. அதுவும் வரும் மார்ச் 15 2025 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பு யுனிவர்சல் கணக்கு எண் (UAN) மற்றும் வங்கி கணக்குகளை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான காலக்கெடு 2025 பிப்ரவரி 15-ம் தேதி என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது காலக்கெடுவை மீண்டும் நீட்டித்து வரும் மார்ச் 15-ம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு.
அதுவும் யுனிவர்சல் கணக்கு எண் (UAN) என்பது ஒரு EPFO இன் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தனித்துவமான மற்றும் நிரந்தர 12 இலக்க எண்ணாகும். குறிப்பாக இந்த யுனிவர்சல் கணக்கு எண் ஒரு பணியாளரின் வாழ்க்கை முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் EPFO சேவைகளை அணுக UAN ஐ செயல்படுத்துவது மிகவும் அவசியம் ஆகும்.
குறிப்பாக UAN செயல்படுத்தப்பட்டதும் ஊழியர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) கணக்குகளை ஆன்லைனில் எளிதாக நிர்வகிக்க முடியும். அதாவது ஆன்லைனில் PF பாஸ்புக்கைப் பார்க்கவும் பதிவிறக்கவும் செய்யலாம். பின்பு ஆன்லைனில் பிஎஃப் முன்பணத்திற்கு விண்ணப்பித்தல் மற்றும் உங்கள் கோரிக்கையின் நிலையைத் தெரிந்துகொள்ளலாம். இதுபோன்ற பல நன்மைகள் இதில் உள்ளன.
அதேபோல் வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை - ஈஎல்ஐ (Employment Linked Incentive- ELI) திட்டத்தை பெறுவதற்கு யுஏஎன் ஆக்டிவேட் (UAN Activate) செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஈபிஎப்ஓ தொழிலாளர்களுக்கு யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் - யுஏஎன்(Universal Account Number - UAN) மூலம் மட்டுமே திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது. எனவே நடப்பாண்டில் பணிக்கு சேர்ந்த் தொழிலாளர்கள் அவர்களின் வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை பெறுவதற்கு அதை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இப்போது யுஏஎன் ஆக்டிவேட் எப்படி என்று இங்கே பார்க்கலாம்
முதலில் unifiedportal-mem.epfindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ EPFO இணையதளத்தைப் பார்வையிடவும். இந்த தளத்தில் லிங்குகள் (Important Links) பக்கத்தின் கீழ் இருக்கும் ஆக்டிவேட் யுஏஎன் (Activate UAN) எனும் விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.

அதன்பின்பு உங்களது ஈபிஎப்ஓ விவரங்கள் கேட்கப்படும். அதில் யுஏஎன் நம்பர், ஆதார் நம்பர், உங்களது பெயர் மற்றும் பிறந்த தேதி கொடுக்கப்பட வேண்டும். இதுதவிர உங்களது ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரும் கொடுக்க வேண்டும். அனைத்து விவரங்களையும் நிரப்பிய பின்னர் 'Get Authorization PIN' என்பதைக் கிளிக் செய்யவும். அதன்பின்பு உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP பெறுவீர்கள். OTP ஐ உள்ளிட்டு அதைச் சரிபார்க்கவும்.
இப்போது அனைத்தும் சரிபார்க்கப்பட்டதும், உங்கள் UAN எண் ஆக்டிவேட் செய்யப்படும். அதன்பின்பு EPFO சேவைகளை அணுக பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லையும் (பாஸ்வேர்டு) பெறுவீர்கள். ஊழியர்கள் தங்கள் பிஎஃப் கணக்குகள் அல்லது பிற EPFO சேவைகளை அணுகுவதில் ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க இந்த செயல்முறையை உடனே முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
photo credit: freepik


Click it and Unblock the Notifications








