EPFO அறிவுரை.. ஒருமுறையாவது UAN தகவலை இப்படி ஆகிட்டிவேட் செய்யணும்.. இல்லாட்டி கஷ்டம் உங்களுக்கு தான்..
EPFO பயனர்கள் அனைவருக்கும் மிக முக்கியமான விஷயம் என்றால் அது அவர்களுடைய யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் என்று அழைக்கப்படும் UAN தான். இன்னும் சிலருக்கு UAN நம்பரை எப்படி ஆக்டிவேட் செய்வதென்று தெரியவில்லை. இதை எப்படி ஆன்லைனில் ஆக்டிவேட் செய்வதென்பது இங்கே.
EPFO என்றால் என்ன? இபிஎஃப்ஓ என்பது, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) என்று அழைக்கப்படுகிறது. இதுவொரு அரசியலமைப்பு சாராத அமைப்பாகும். இது ஊழியர்களை ஓய்வூதியத்திற்கான நிதியைச் சேமிக்க ஊக்குவிக்கிறது. இந்த அமைப்பு இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் 1951 இல் தொடங்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. உங்களுக்கும் EPFO கணக்கு இருக்கிறது என்றால், கட்டாயம் இந்த பதிவு மிகவும் முக்கியமானது.

ஒருமுறையாவது UAN தகவலை இப்படி ஆகிட்டிவேட் செய்யணும்.. EPFO உத்தரவு:
முதலில் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் என்று அழைக்கப்படும் UAN என்றால் என்ன என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். யுஏஎன் (UAN) என்பது 12 இலக்க எண்ணாகும். இது தகுதி பெற்ற அணைத்து ஊழியர்களுக்கும் EPFO என்று சுருக்கமாக அழைக்கப்படும் எம்பிளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு அடையாள எண்ணாகும். ஒவ்வொரு UAN அடையாள எண்ணிற்கு பின்னால், வெவ்வேறு நிறுவனங்கள் அதன் ஊழியர்களுக்கு வழங்கிய உறுப்பினர் தகவல்கள் பதிவாகியிருக்கும்.
சரி, ஏன் இந்த யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை எல்லா EPFO பயனர்களும் ஆக்டிவேட் செய்ய வேண்டுமென்று அறிவுரைக்கப்படுகிறது. இதன் அவசியம் என்ன? என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். முதலில் நீங்கள் ஒரு நிறுவனத்தில் சேரும் பொழுது, அந்த நிறுவனம் உங்களுக்காக ஒரு யூனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை உருவாக்கும். இருப்பினும், இந்த நம்பரை பயனர்கள் ஆக்டிவேட் செய்ய EPFO வலைப்பக்கத்தை நாட வேண்டும்.
சரி, இப்போது எப்படி EPFO பயனர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய UAN நம்பரை ஆக்டிவேட் செய்வதென்று பார்க்கலாம்.
- முதலில் நீங்கள் unifiedportal-mem.epfundia.gov.in என்ற வலைத்தளத்தை நீங்கள் பார்க்க வேண்டும்.
- இப்போது காண்பிக்கப்படும் பக்கத்தில் 'Important Links' என்ற டேபின் கீழ் உள்ள 'Activate UAN' விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

- இப்போது கேட்கப்படும் ஆதார் நம்பர், பெயர், பிறந்த தேதி, மொபைல் நம்பர், மெம்பர் ID, கேப்சா கோட்டை உள்ளிடவும்.
- பிறகு, 'Get Authorization PIN' என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு வெரிஃபிகேஷன் பின் நம்பர் அனுப்பப்படும்.
- அதை, வலைத்தளத்தில் வேலிடேட் OTP என்ற இடத்தில் உள்ளீட்டு ஆக்டிவேட் UAN என்பதை கிளிக் செய்யவும்.
- உங்களுக்கு சொந்தமான UAN லாகின் செய்ய உதவும் பாஸ்வோர்ட், உங்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.
- இதை வலைப்பக்கத்தில் உள்ளிட்டு லாக்கிங் செய்துகொள்ளலாம்.
லாகின் செய்த பிறகு, உங்கள் EPFO கணக்கிற்கு தொடர்பான அணைத்து விஷயங்களையும் உங்களால் அந்த UAN நம்பர் தகவல் மூலம் அறிந்துகொள்ள முடியும். இந்த எளிய செயல்முறைகளை பின்பற்றி உங்கள் UAN நம்பரை ஆக்டிவேட் செய்துகொள்ளலாம். ஒருமுறையாவது உங்கள் UAN விபரத்தை இப்படி ஆக்டிவேட் செய்வது மிக முக்கியமானது. இல்லாவிட்டால், EPFO நன்மைகளை முழுமையாக பெறுவதில் கஷ்டங்கள் ஏற்படலாம்.


Click it and Unblock the Notifications








