Home
News

EPFO 3.0 அப்டேட்.. PF பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி.. வெளியானது முக்கிய தகவல்..

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்த அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு வசதிகளும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் EPFO 3.0 திட்டத்தின் கீழ் அனைத்தும் டிஜிட்டல் மையமாக்கப்பட உள்ளது.

பிஎப் தொடர்பான சேவைகளுக்கு இனி அதிகம் சிரமப்படத் தேவையில்லை. அதுவும் நீங்கள் பணம் பெற விண்ணப்பித்த சில நாட்களிலேயே பணம் தானாக உங்கள் கணக்கிற்கு வந்து சேர்ந்துவிடும்.

EPFO 3.0 அப்டேட்.. PF பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி..

EPFO 3.0 திட்டம்
அதேபோல் இந்த EPFO 3.0 திட்டத்தில் உங்களது பிஎப் பணத்தை ஏடிஎம் கார்டு அல்லது யுபிஐ மூலம் எக்கும் வசதி கொண்டுவரப்பட உள்ளது. ஆனால் இதற்கு வரம்பு உண்டு என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது வெளியான தகவலின்படி, இந்த வசதியில் உங்களது மொத்த பேலன்ஸில் 50 சதவீதம் வரை மட்டுமே ஏடிஎம் மூலம் எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, பிஎப் உறுப்பினர்களுக்குப் பிரத்தியேகமாக ஏடிஎம் கார்டு வழங்கத் திட்டமிட்டு வருகிறது EPFO அமைப்பு. இதன் மூலம் அவர்கள் நேரடியாக ஏடிஎம் மையங்களுக்குச் சென்று பிஎப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இதுதவிர யுபிஐ மூலம் பணம் வசதியும் அறிமுகம் செய்யப்படும்.

அதுவும் இந்த வசதி கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு உங்களிடம் UAN நம்பர் இருக்க வேண்டும். மேலும் உங்கள் பிஎப் கணக்குடன் உங்களது ஆதார் கார்டு, பான் கார்டு, பேங்க் அக்கவுண்ட் மற்றும் IFSC கோட் போன்றவை சரியாகக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

சமீபத்தில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்ட தகவலின்படி, EPFO அமைப்பு 2026-ம் ஆண்டு நிதியாண்டில் மட்டும் 88.31 கோடி கிளைம்களை தீர்த்து வைத்துள்ளது. இது முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் சற்று அதிகமாகவே உள்ளது. அதுவும் இந்த பிஎப் கிளைம் கோரிக்கையில் பகுதியளவு பணம் எடுப்பது, முழு பிஎப் பணத்தையும் எடுப்பது என அனைத்தும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர 71.11 சதவீதம் விண்ணப்பங்கள் வெறும் மூன்று நாட்களுக்குள் முடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக செக் லீப் பதிவேற்றம் செய்யாமலேயே 6.68 கோடி பேரின் கணக்கிற்கு பிஎப் பணம் மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோ ட்ரான்பர் வசதியும் 70.55 லட்சம் பேருக்கு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

EPFO 3.0 அப்டேட்.. PF பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி..

ஏடிஎம் வசதி எப்போது அமலுக்கு வரும்?
குறிப்பாக பிஎப் பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி இந்த மே மாதம் இறுதிக்குள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசதி மட்டும் அமலுக்கு வந்தால் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு EPFO அமைப்பின் சார்பில் வெளியிடப்படும்.

மேலும் EPFO அமைப்பு விரைவில் இ-ப்ராப்தி' (E-PRAAPTI) என்ற வலைத்தளத்தை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இதன் மூலம் உறுப்பினர்கள் தங்களின் பழைய மற்றும் செயலற்ற பிஎப் கணக்குகளைக் கண்காணிக்கவும், மீண்டும் செயல்படுத்தவும் முடியும். மேலும் இந்த வலைத்தளம் மூலம் பழைய பிஎப் கணக்குகளில் தேங்கிக் கிடக்கும் பணத்தைப் பயனர்கள் பெறமுடியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

source:1

Best Mobiles in India

English summary
EPFO 3.0 Update: Soon You May Be Able to Withdraw PF Through ATM and UPI
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X