Home
News

EPFO 3.0 புதிய விதிகள்.. PF பணத்தை குருவி போல சேர்ப்பவர்கள் கவனத்திற்கு.. இனி KYC-க்கு குட்பை.. 8 நாள் போதும்!

ராஜ்யசபாவில், மத்திய அரசு கேட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO - Employees Provident Fund Organisation) ஆனது ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) கோரிக்கைகளை ஆன்லைனில் வழியாக தீர்ப்பதற்கான சராசரி நேரம் 8 நாட்கள் மட்டுமே என்று கூறியுள்ளது.

மேலும், முழுமையாக இணக்கமான இ-கேஒய்சி இபிஎப் (e-KYC EPF) அக்கவுண்ட்களை கொண்ட ஊழியர்கள் தங்கள் ஆன்லைன் பரிமாற்ற கோரிக்கைகளை (Online transfer claims) நேரடியாக இபிஎப்ஓ-வில் (EPFO) தாக்கல் செய்வதற்கு முதலாளிகளின் ஒப்புதல் தேவையில்லை (employers approval) என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

EPFO 3.0.. PF பணத்தை குருவி போல சேர்ப்பவர்கள் கவனத்திற்கு!

முன்னதாக - கைமுறையான சரிபார்ப்பு தேவைப்படுவதால், இறுதி தீர்வுகள் மற்றும் பெரிய அளவிலான பணம் எடுக்கும் கோரிக்கைகள் உள்ளிட்ட இபிஎப் கோரிக்கைகளுக்கான செயலாக்க நேரம் 15 நாட்கள் முதல் பல வாரங்கள் வரை ஆகும்படி இருந்தது. ஆனால் இபிஎப்ஓ ​அமைப்பால் இப்போது அதிக வேகத்தில் உரிமைகோரல் செயலாக்கத்தை கையாள முடியும்.

ஏனென்றால் இபிஎப்ஓ ஆனது தற்போது மேம்பட்ட ஆன்லைன் சரிபார்ப்பு முறைகளுடன் தானியங்கி அமைப்புகளை பயன்படுத்துகிறது, இதற்கு முழுமையான கேஒய்சி ஆவணங்கள் மற்றும் துல்லியமான தகவல்கள் தேவைப்படுகின்றன. ஆக 2026 ஆம் ஆண்டில் சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு இபிஎப் உரிமைகோரல் ஆனது விரைவான மற்றும் எளிதான செயல்முறையாக மாறியுள்ளது. அதே நேரத்தில் புதுப்பிக்கப்பட்ட தகவல்களுடன் ஆன்லைன் தாக்கல் செயல்முறையை மிகவும் வெளிப்படையானதாகவும் மாறியுள்ளது.

2025-26 நிதியாண்டின் ஜனவரி 23, 2026 நிலவரப்படி, இபிஎப்ஓ ஆனது ​​8.53 கோடிக்கும் அதிகமான கோரிக்கைகளை செயல்படுத்தியதும், 2024-25 நிதியாண்டில், இபிஎப்ஓ ​​கிட்டத்தட்ட 7.7 கோடி கோரிக்கைகளை தீர்த்துள்ளதும், 2025-26 நிதியாண்டில் ஜனவரி 23, 2026 வரை இபிஎப்ஓ ​​ஆல் கையாளப்பட்ட மெம்பர் ப்ரொபைல் திருத்த கோரிக்கைகளின் எண்ணிக்கை 27,33,551 ஆகும் என்கிற விவரங்களும் பகிரப்பட்டுள்ளது.

இதே போல நிதி தொடர்பான மற்ற சமீபத்திய அப்டேட்களை பொறுத்தவரை, எஸ்பிஐ வங்கி (SBI Bank) ஆனது வருகிற 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி ஆம் தேதி முதல் சில ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கான சேவை கட்டணங்களை (IMPS transactions service charges) மாற்றியமைக்க உள்ளது.

இதன்கீழ் - ரூ.25,000 க்கு மேல் மற்றும் ரூ.1 லட்சம் வரையிலான ஆன்லைன் ஐஎம்பிஎஸ் பரிமாற்றங்களுக்கு, வாடிக்கையாளர்களுக்கு ரூ.2 பிளஸ் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். ரூ.1 லட்சத்திற்கும் மேல் மற்றும் ரூ.2 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.6 பிளஸ் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும், அதே நேரத்தில் ரூ.2 லட்சத்திற்கு மேல் மற்றும் ரூ.5 லட்சம் வரையிலான பரிமாற்றங்களுக்கு ரூ.10 பிளஸ் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும்.

இதேபோல இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆனது அனைத்து புதிய பாஸ்டாக் வெளியீடுகளுக்கும் (கார் / ஜீப் / வேன் வகை பாஸ்டாக்) உங்கள் வாகனத்தை அறிந்து கொள்ளுங்கள் (KYV) செயல்முறையையும் நிறுத்தி உள்ளது. செல்லுபடியாகும் வாகன ஆவணங்களை வைத்திருந்தாலும், பாஸ்டாக் செயல்படுத்தப்பட்ட பிறகு சிரமத்தையும், தாமதத்தையும் சந்தித்த லட்சக்கணக்கான சாலை பயனர்களுக்கு இந்த மாற்றம் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கார்களுக்கு வழங்கப்பட்ட பாஸ்டாக்-க்கு, கேஒய்வி இனி வழக்கமான தேவையாக, ஒரு கட்டாயமாக இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது தளர்வான பாஸ்டாக், தவறான பாஸ்டாக் வழங்கல் அல்லது தவறாக பாஸ்டாக் பயன்படுத்துதல் தொடர்பான சிக்கல்கள் போன்ற புகார்கள் பெறப்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே கேஒய்வி தேவைப்படும். எந்தவொரு புகாரும் இல்லாத நிலையில், ஏற்கனவே உள்ள கார் பாஸ்டாக்-க்கு கேஒய்வி தேவையில்லை என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
EPFO 3 0 Update Now EPF Claim Settlement Time is 8 Days not 15 Days also No more Employer Approval
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X