Home
News

EPFO 3.0 திட்டம்.. ஏடிஎம், யுபிஐ மூலம் பிஎஃப் பணம் எடுக்கலாம்.. வெளியானது முக்கியத் தகவல்..

இ.பி.எப்.ஓ (EPFO) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. அதேபோல் தனியார் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு இந்த பிஎஃப் திட்டம் ஆனது மிக முக்கியமான திட்டமாகும்.

குறிப்பாக ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தில் ஒரு சிறிய தொகை பிடித்தம் செய்யப்படும். அதே தொகை நிறுவனம் தரப்பிலும் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இதுதவிர பிஎஃப் தொகைக்கு அரசு தரப்பிலும் வட்டி வருமானமும் வழங்கப்படுகிறது. நீண்ட கால அடிப்படையில் பிஎஃப் திட்டம் ஒரு அற்புதமான திட்டமாக இருக்கிறது.

EPFO 3.0 திட்டம்.. ஏடிஎம், யுபிஐ மூலம் பிஎஃப் பணம் எடுக்கலாம்..

இந்த நிலையில் EPFO 3.0 திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதாவது இந்த திட்டம் மூலம் பிஎஃப் பணத்தை ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் எடுக்கலாம். குறிப்பாக இந்த திட்டத்தில் பல வசதி இருக்கின்றன. அதுவும் 8 கோடி பிஎஃப் உறுப்பினர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் பிஎஃப் சேவைகள் வேகமாகவும், எளிதாகவும் இருக்கும். மேலும் இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்த புதிய EPFO 3.0 தளத்தை நிர்வகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

தற்போது வெளியாகி உள்ள தவலின்படி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு EPFO 3.0 தளத்தை விரைவில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. அதாவது இந்த EPFO 3.0 திட்டம் கடந்த 2025 ஜூன் மாதம் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் தாமதமானது. எனவே கூடிய விரைவில் EPFO 3.0 திட்டம் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய தளத்தில் ஐந்து முக்கிய வசதி உள்ளது.

முதலாவதாக ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதி. இதுதான் EPFO 3.0 திட்டத்தின் இது மிக முக்கியமான வசதி ஆகும். இதற்கு பிஃஎப் உறுப்பினர்கள் தங்களது UAN எண்ணைச் செயல்படுத்த வேண்டும். பின்பு ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் சில அவசர தேவைக்கு ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.

அடுத்து யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதி. டிஜிட்டல் வளர்ச்சிக்கு உதவும் வகையில் யூபிஐ மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதுவும் இதன் மூலம் பிஎஃப் ஊழியர்கள் உடனடியாக பணத்தை எடுக்கலாம். இந்த திட்டத்தில் சிறப்பான டிஜிட்டல்அனுபவம் இருக்கும்.

EPFO 3.0 திட்டம்.. ஏடிஎம், யுபிஐ மூலம் பிஎஃப் பணம் எடுக்கலாம்..

அதேபோல் உங்கள் பிஎஃப் கணக்கில் எதாவது திருத்தம் செய்ய வேண்டும் என்றாலோ அல்லது கணக்கு நிலையைத் தெரிந்து கொள்ள விரும்பினாலோ பிஎஃப் அலுவலகம் செல்ல வேண்டியதில்லை. ஓடிபி மூலம் ஆன்லைனிலேயே திருத்தங்கள் செய்ய முடியும். பின்பு கணக்கு நிலையையும் எளிதாகக் கண்காணிக்கலாம். இதுதவிர பிஎஃப் உறுப்பினர் இறந்துவிட்டால் கிளைம் செட்டில்மென்ட் செய்வது எளிதாக்கப்பட்டுள்ளது.

இந்த EPFO 3.0 திட்டத்தில் ஊழியர்களின் இறப்பு தொடர்பான கிளைம்களை எளிதாக்கியது ஒரு நல்ல விஷயம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் EPFO 3.0 மூலம் பிஎஃப் உறுப்பினர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள். அதுவும் பிஎஃப் சேவைகளை வேகமாகவும், எளிதாகவும் ஆக்கும் என்பது கூடுதல் சிறப்பு. எனவே இந்த EPFO 3.0 திட்டத்துக்காக பிஎஃப் ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
EPFO 3.0 to be launched soon: PF money can be withdrawn from ATM and UPI, see 5 big benefits here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X